19.7.16

நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி..உமாமகேஸ்வரி பி.எஸ்ஸிபி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ மாசித்திங்கள் 15 ஆம் நாள்
2015 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
அசல் வழக்கு எண்.44 / 2005
சின்னதுரை … வாதி
/எதிர்/
1. கைலாசம்
2. பன்னீர்செல்வம் …....பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

இவ்வழக்கானது தாவா சொத்துகள் வாதிக்கு உரிமையானது என விளம்புகை செய்யக்கோரியும்¸ அதனைத் தொடர்ந்து தாவா சொத்துகளில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வழக்குரையின் சுருக்கம்:
தாவா சொத்துகள் அனைத்தும் மருங்கூர் கிராம சர்வே எண்.683/2 உட்பிரிவுகள் 683/2ஏ ல் 2.89 ஏக்கர்¸683/2பி-ல் 1.90 ஏக்கர்¸ 683/2சி-ல் 1.62 ஏக்கர் மற்றும் 683/2டி-ல் 1.87 உள்ளடங்கியதாகும். மேற்படி உட்பிரிவுகள் அனைத்தும் 24.7.1950-க்கு முன்பாகவே உட்பிரிவ செய்யப்பட்டது. மேற்படி தாவா சொத்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் தரிசு நிலங்களாகும். மேற்படி நிலத்தை வாதியின் மூதாதையரும் மற்றும் பலரும் அனுபவித்ததின் அடிப்படையில் சர்வே எண்.632/2 ஆனது உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ அனுபோகத்தில் இருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. .எண்.683/2-ல் உள்ள மொத்த விஸ்தீரணம் 2.89 ஏக்கர் பொன்ன படையாச்சிக்கு கொடுக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் கனகசபை மற்றும் சிதம்பர் ஆகியோர் அதனை சமபாகமாக பிரித்து வடக்குப்பக்க 1.44 1/2 ஏக்கரை சிதம்பரமும்¸ தெற்கில் 1.44 1/2 ஏக்கரை கனகசபையும் அனுபவித்து வந்தனர். கனகசபைக்கு 5 மகன்கள். அவர்களின் குடும்ப பாகத்தில் மேற்படி 1.44 1/2 ஏக்கரும் கனகசபையின் மகனான இந்த வாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேற்படி சிதம்பர படையாச்சி தனது பாகமான 683/2-ல் 1.44 1/2 ஏக்கரில் 0.48 1/4 ஏக்கரை வாதிக்கு 12.8.1972-ல் கிரயம் கொடுத்துவிட்டார். அந்த சொத்து வாதியின் பாகத்திற்கு அடுத்த வடக்கில் உள்ள சொத்தாகும். .எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கர் சிதம்பர படையாச்சிக்கு பாத்தியமானது. ஆதில் தென்புறமுள்ள 0.63 1/4 ஏக்கரை அவர் வாதிக்கு 12.8.1972 ஆம் தேதி கிரயம் கொடுத்துவிட்டார். 1.44 1/2 செண்டும் மற்றும் கிரய சொத்துக்களான 0.48 1/4 மற்றும் 0.63 1/4 ஆகமொத்தம் 3 அயிட்ட சொத்துகளும் சேர்த்து 2.56 ஏக்கரும் வாதிக்கு உரிமையானது. மேற்படி தாவா சொத்துகள் ரீசர்வே செய்யப்பட்டு 564/1ஏ மற்றும் 564/13 என பிரிவு செய்யப்பட்டது. வாதிக்கு பாத்தியமான சொத்துகளை வாதிகளின் மகன்களாள பொன்னம்பலம் மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரும் பராமரித்து வருவதால் அவர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சிதம்பர படையாச்சியின் மகனான முதல் பிரதிவாதியும்¸ அவரது மகனான 2 ஆம் பிரதிவாதியும் தாவா சொத்துகளில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறிக்கொண்டு வாதியின் அனுபவத்தில் இடையூறு செய்கிறார்கள். எனவே தாவா சொத்துகளைப் பொறுத்து விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி வாதியால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. முதல் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்டு¸ இரண்டாம் பிரதிவாதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். வாதியும் அவரது மகன்களும் வழக்கிற்கு முன்பு 20.12.04 ல் தாவா 2 மற்றும் 3 ஆவது அயிட்டங்கள் குறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தார்கள். அதற்கு வாதி 27.12.04 ஆம் தேதி பதிலறிவிப்பு கொடுத்துள்ளார். கனகசபைக்கு ஒதுக்கப்பட்ட வடபுற 1.44 1/2 செண்டைப் பொறுத்து இந்த பிரதிவாதிகளுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. தென்புற 1.44 1/2 செண்ட் சிதம்பர படையாச்சியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அனுபவித்து வந்து¸ அவர் உயிரோடு இருக்கும்போதே அதாவது சுமார் 30 வருடத்திற்கு முன்பே அவரது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம் (1 ஆம் பிரதிவாதி) மற்றும் சிவலிங்கம் ஆகியோர் வாய்மொழியாக பாகம் பிரித்துக்கொண்ட வகையில் தென்புற 0.48 1/4 ஏக்கர் சிவலிங்கத்திற்கும்¸ நடுவில் உள்ள 0.48 1/4 ஏக்கர் கைலாசத்திற்கும்¸ வடபுற 0.48 ஏக்கர் அர்ஜுனனிற்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கரும் சிதம்பர படையாச்சிக்கு பாகத்தில் ஒதுக்கப்பட்ட வகையில் பாத்தியமாக இருந்து¸ அவரது மகன்களுக்குள் ஏற்பட்ட பாகத்தில் வடபுற 0.63 1/4 செண்ட் அர்ஜுனனுக்கும்¸ நடுவில் உள்ள 0.63 1/4 செண்ட் கைலாசத்திற்கும்¸ தென்புற 0.63 1/4 செண்ட் சிவலிங்கத்திற்கும் ஒதுக்கப்பட்ட அவரவர்கள் தனியாக அனுபவித்து வந்தனர். மேற்படி வாய்மொழி பாகத்தின்போது சிவலிங்கம் மைனராக இருந்ததால் அவரது பாகத்தை அவரது தந்தையான சிதம்பர படையாச்சி அனுபவித்து வந்தார். பின்னிட்டு மேற்படி சிவலிங்கத்தின் பாகமான 683/2-ல் 0.48 1/4 செண்டையும்¸ 683/2பி-ல் 0.63 1/4 செண்டும் ஆகமொத்தம் 1.11 1/2 ஏக்கரை சிதம்பர படையாச்சி தனக்காகவும் தனது மைனர் மகனுக்காகவும் 12.8.1972 ஆம் தேதி வாதிக்கு கிரயம் கொடுத்துவிட்டார். மேற்படி கிரயச்சொத்துகளான தாவா 2¸3 அயிட்ட சொத்துகளைப் பொறுத்து இந்த பிரதிவாதிகள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. மேற்படி சிவலிங்கத்திற்கு மேற்படி இருசர்வே எண்களிலும் கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரைப் போலவே கைலாசத்திற்கு கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரை அர்ஜுனனுக்கும்¸ அர்ஜுனன் தனக்கு பாத்தியமான வேறு ஒரு சொத்திலிருந்து 1.11 1/2 ஏக்கரை கைலாசத்திற்கும் மேற்படி இருவரும் பரிவர்த்தனை செய்து கொண்ட வகையில் ¸ முதல் பிரதிவாதிக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டும்¸ பரிவர்த்தனை மூலம் கிடைத்த வகையில் 1.11 1/2 செண்டும் ஆகமொத்தம் 2.23 ஏக்கரை முதல் பிரதிவாதி சட்டவரையறை காலத்திற்கு மேலாக அனுபவித்து வந்து¸ அந்த சொத்தை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு 14.12.04 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்திவிட்டார். அவ்வாறு தானசெட்டில்மெண்ட் எழுதிவைப்பதற்கு முன்பே பிரதிவாதிகளின் குடும்ப சொத்துகள் குறித்து 1992 ஆம் ஆண்டு பிரதிவாதிகள் இருவரும் பாகம் பிரித்துக்கொண்டதில்¸ மேற்படி 2.23 ஏக்கரும் முதல் பிரதிவாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அதன் பின்னிட்டே 2 ஆம் பிரதிவாதிக்கு தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தினார். ஆதுமுதல் மேற்படி 2.23 செண்டை 2 ஆம் பிரதிவாதி அனுபவித்து வந்து¸ உட்பிரிவு செய்யப்பட்டு பட்டாவும் பெற்றுள்ளார். அவ்வாறு உட்பிரிவு செய்ததை வாதியும் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் தவறான அனுமானத்தின்பேரில் தனக்கு பாகம் கிடைத்த சொத்தின் விஸ்தீரணம் குறைவாக உள்ளதாக கருதி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார். எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 23.04.2007 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) 14.12.2004 அன்று 1 ஆவது பிரதிவாதி¸ இரண்டாவது பிரதிவாதிக்கு எழுதிவைத்ததாகக் கூறப்படும் தானசெட்டில்மெண்ட் பத்திரம் உண்மையானதா? செல்லத்தக்கதா¸ அது வாதியைக் கட்டுப்படுத்துமா?
2) வழக்கு சொத்துகள் வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா?
3) தாவாவில் வாதி கோரியுள்ளவண்ணம் விளம்புகை பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா?
4) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா?
5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக்கூடியது?

5. இவ்வழக்கில் வாதிதரப்பில் வா.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு வா.சா..1 முதல்
வா.சா..15 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதி;கள்தரப்பில் பி.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு¸ பி.சா..1 முதல் பி.சா..5 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

6) வழக்கெழு வினாக்கள் 2¸3 மற்றும் 4 :
வாதிதரப்பில் தங்களது வழக்கினை நிரூபிக்கும் வாதியின் மகனான பொன்னம்பலம் என்பவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையில்¸ தாவா சொத்துகள் அனைத்தும் மருங்கூர் கிராம சர்வே எண்.683/2 உட்பிரிவுகள் 683/2ஏ ல் 2.89 ஏக்கர்¸ 683/2பி-ல் 1.90 ஏக்கர்¸ 683/2சி-ல் 1.62 ஏக்கர் மற்றும் 683/2டி-ல் 1.87 உள்ளடங்கியதாகும். மேற்படி உட்பிரிவுகள் அனைத்தும் 24.7.1950-க்கு முன்பாகவே உட்பிரிவ செய்யப்பட்டது. மேற்படி தாவா சொத்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் தரிசு நிலங்களாகும். மேற்படி நிலத்தை வாதியின் மூதாதையரும் மற்றும் பலரும் அனுபவித்ததின் அடிப்படையில் சர்வே எண்.632/2 ஆனது உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ அனுபோகத்தில் இருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. .எண்.683/2-ல் உள்ள மொத்த விஸ்தீரணம் 2.89 ஏக்கர் பொன்ன படையாச்சிக்கு கொடுக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் கனகசபை மற்றும் சிதம்பர் ஆகியோர் அதனை சமபாகமாக பிரித்து வடக்குப்பக்க 1.44 1/2 ஏக்கரை சிதம்பரமும்¸ தெற்கில் 1.44 1/2 ஏக்கரை கனகசபையும் அனுபவித்து வந்தனர். கனகசபைக்கு 5 மகன்கள். அவர்களின் குடும்ப பாகத்தில் மேற்படி 1.44 1/2 ஏக்கரும் கனகசபையின் மகனான இந்த வாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேற்படி சிதம்பர படையாச்சி தனது பாகமான 683/2-ல் 1.44 1/2 ஏக்கரில் 0.48 1/4 ஏக்கரை வாதிக்கு 12.8.1972-ல் கிரயம் கொடுத்துவிட்டார். அந்த சொத்து வாதியின் பாகத்திற்கு அடுத்த வடக்கில் உள்ள சொத்தாகும். .எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கர் சிதம்பர படையாச்சிக்கு பாத்தியமானது. அதில் தென்புறமுள்ள 0.63 1/4 ஏக்கரை அவர் வாதிக்கு 12.8.1972 ஆம் தேதி கிரயம் கொடுத்துவிட்டார். 1.44 1/2 செண்டும் மற்றும் கிரய சொத்துக்களான 0.48 1/4 மற்றும் 0.63 1/4 ஆகமொத்தம் 3 அயிட்ட சொத்துகளும் சேர்த்து 2.56 ஏக்கரும் வாதிக்கு உரிமையானது. மேற்படி தாவா சொத்துகள் ரீசர்வே செய்யப்பட்டு 564/1ஏ மற்றும் 564/13 என பிரிவு செய்யப்பட்டது. வாதிக்கு பாத்தியமான சொத்துகளை வாதிகளின் மகன்களாள பொன்னம்பலம் மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரும் பராமரித்து வருவதால் அவர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சிதம்பர படையாச்சியின் மகனான முதல் பிரதிவாதியும்¸ அவரது மகனான 2 ஆம் பிரதிவாதியும் தாவா சொத்துகளில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறிக்கொண்டு வாதியின் அனுபவத்தில் இடையூறு செய்கிறார்கள். எனவே தாவா சொத்துகளைப் பொறுத்து விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கவேண்டுமென வாதிடப்பட்டது.

7) பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸ வாதியும் அவரது மகன்களும் வழக்கிற்கு முன்பு 20.12.04 ல் தாவா 2 மற்றும் 3 ஆவது அயிட்டங்கள் குறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தார்கள். அதற்கு வாதி 27.12.04 ஆம் தேதி பதிலறிவிப்பு கொடுத்துள்ளார். கனகசபைக்கு ஒதுக்கப்பட்ட வடபுற 1.44 1/2 செண்டைப் பொறுத்து இந்த பிரதிவாதிகளுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. தென்புற 1.44 1/2 செண்ட் சிதம்பர படையாச்சியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அனுபவித்து வந்து¸ அவர் உயிரோடு இருக்கும்போதே அதாவது சுமார் 30 வருடத்திற்கு முன்பே அவரது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம் (1 ஆம் பிரதிவாதி) மற்றும் சிவலிங்கம் ஆகியோர் வாய்மொழியாக பாகம் பிரித்துக்கொண்ட வகையில் தென்புற 0.48 1/4 ஏக்கர் சிவலிங்கத்திற்கும்¸ நடுவில் உள்ள 0.48 1/4 ஏக்கர் கைலாசத்திற்கும்¸ வடபுற 0.48 ஏக்கர் அர்ஜுனனிற்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கரும் சிதம்பர படையாச்சிக்கு பாகத்தில் ஒதுக்கப்பட்ட வகையில் பாத்தியமாக இருந்து¸ அவரது மகன்களுக்குள் ஏற்பட்ட பாகத்தில் வடபுற 0.63 1/4 செண்ட் அர்ஜுனனுக்கும்¸ நடுவில் உள்ள 0.63 1/4 செண்ட் கைலாசத்திற்கும்¸ தென்புற 0.63 1/4 செண்ட் சிவலிங்கத்திற்கும் ஒதுக்கப்பட்ட அவரவர்கள் தனியாக அனுபவித்து வந்தனர். மேற்படி வாய்மொழி பாகத்தின்போது சிவலிங்கம் மைனராக இருந்ததால் அவரது பாகத்தை அவரது தந்தையான சிதம்பர படையாச்சி அனுபவித்து வந்தார். பின்னிட்டு மேற்படி சிவலிங்கத்தின் பாகமான 683/2-ல் 0.48 1/4 செண்டையும்¸ 683/2பி-ல் 0.63 1/4 செண்டும் ஆகமொத்தம் 1.11 1/2 ஏக்கரை சிதம்பர படையாச்சி தனக்காகவும் தனது மைனர் மகனுக்காகவும் 12.8.1972 ஆம் தேதி வாதிக்கு கிரயம் கொடுத்துவிட்டார். மேற்படி கிரயச்சொத்துகளான தாவா 2¸3 அயிட்ட சொத்துகளைப் பொறுத்து இந்த பிரதிவாதிகள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. மேற்படி சிவலிங்கத்திற்கு மேற்படி இருசர்வே எண்களிலும் கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரைப் போலவே கைலாசத்திற்கு கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரை அர்ஜுனனுக்கும்¸ அர்ஜுனன் தனக்கு பாத்தியமான வேறு ஒரு சொத்திலிருந்து 1.11 1/2 ஏக்கரை கைலாசத்திற்கும் மேற்படி இருவரும் பரிவர்த்தனை செய்து கொண்ட வகையில் ¸ முதல் பிரதிவாதிக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டும்¸ பரிவர்த்தனை மூலம் கிடைத்த வகையில் 1.11 1/2 செண்டும் ஆகமொத்தம் 2.23 ஏக்கரை முதல் பிரதிவாதி சட்டவரையறை காலத்திற்கு மேலாக அனுபவித்து வந்து¸ அந்த சொத்தை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு 14.12.04 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்திவிட்டார். அவ்வாறு தானசெட்டில்மெண்ட் எழுதிவைப்பதற்கு முன்பே பிரதிவாதிகளின் குடும்ப சொத்துகள் குறித்து 1992 ஆம் ஆண்டு பிரதிவாதிகள் இருவரும் பாகம் பிரித்துக்கொண்டதில்¸ மேற்படி 2.23 ஏக்கரும் முதல் பிரதிவாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அதன் பின்னிட்டே 2 ஆம் பிரதிவாதிக்கு தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தினார். அதுமுதல் மேற்படி 2.23 செண்டை 2 ஆம் பிரதிவாதி அனுபவித்து வந்து¸ உட்பிரிவு செய்யப்பட்டு பட்டாவும் பெற்றுள்ளார். அவ்வாறு உட்பிரிவு செய்ததை வாதியும் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் தவறான அனுமானத்தின்பேரில் தனக்கு பாகம் கிடைத்த சொத்தின் விஸ்தீரணம் குறைவாக உள்ளதாக கருதி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார். எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்படவேண்டும் என வாதிடப்பட்டது.

8) வாதி தரப்பில் வா.சா..1 முதல் வா.சா..15 வரையிலான ஆவணங்கள் குறியீடு
செய்யப்பட்டுள்ளன. வா.சா..1 என்பது 12.08.1972 ஆம் தேதி சின்னதுரைக்கு¸ சிதம்பர படையாச்சி தனக்காகவும் தன் மைனர் மகனுக்கு கார்டியன் என்ற வகையிலும் கொடுத்த கிரயப்பத்திர அசல் ஆகும். வா.சா..2 என்பது வட்டாட்சியர் வழங்கிய சிட்டாவாகும். வா.சா..3 மற்றும் வா.சா..4 ஆகியவை வட்டாட்சியர் வழங்கிய அ பதிவேடுகளாகும். வா.சா..5 முதல் வா.சா..15 வரையிலான ஆவணங்கள் வாதி பெயரிலுள்ள வாய்தா ரசீதுகளாகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தன் தகப்பனாருக்கு 80 வயதாகிறது என்றும்¸ கனகசபiயின் 5 மகன்களில் தன் அப்பா கனகசபை 2 ஆவது மகன் என்றும்¸ மேற்படி கனகசபையின் மகன்களுக்குள் வாய்மொழி பாகம் ஏற்பட்டுவிட்டது என்றும்¸ தன் அப்பாவிற்கு தானும்¸ தன் தம்பி பக்தவச்சலமும் பிள்ளைகள் என்றும்¸ வழக்கிற்கு பின்னிட்டு தாங்கள் இருவரும் பாகம் செய்துகொண்டதாகவும்¸ தன் அப்பா சிதம்பர படையாச்சியிடம் அவருக்கு பாத்தியமான வடபுற 1.44 1/2 ஏக்கரில் 0.44 1/4 செண்டை கிரயம் வாங்கியதாகவும்¸ அந்த வகையில் தன் தகப்பனாருக்கு தென்புற 1.44 1/2 ஏக்கரும்¸ கிரயம் வாங்கிய 0.48 1/4 ஆக மொத்தம் 1.92 3/4 ஏக்கர் பாத்தியம் என்றும்¸ வடபுற 1.44 1/2 செண்டை சிதம்பர படையாச்சியின் மகன்களாக கைலாசம்¸ சிவலிங்கம் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் தலா 48 செண்ட் வீதம் வாய்மொழியாக பிரித்துக்கொண்டதாகவும்¸ சிதம்பர படையாச்சி அவரது பாகத்தை தன் தகப்பனாருக்கு 12.8.1972-ல் கிரயம் கொடுத்துவிட்டதாகவும்¸ கிரயத்தின்போது சிவலிங்கம் மைனராக இருந்ததாகவும்¸ அவரது உரிமையை கட்டுப்படுத்தி சிதம்பர படையாச்சி கிரயம் கொடுத்ததாகவும்¸ .எண்.683/2பி-ல் மேற்படி சிதம்பர படையாச்சியின் மகன்கள் மூவரும் தலா 63 1/4 செண்ட் வீதம் பிரித்துக்கொண்டதாகவும்¸ மேற்படி இருசர்வே எண்களிலும் சேர்த்து சிதம்பர படையாச்சியின் மகன்களுக்கு தலா 1.11 1/4 செண்ட் வீதம் பிரித்துக்கொண்டதாகவும்¸ பின்னிட்டு அர்ஜுனன் தனது பாகமான 1.11 1/4 செண்டை 1 ஆம் பிரதிவாதிக்கும்¸ 1 ஆம் பிரதிவாதி தனக்கு சொந்தமான வேறு ஒரு இடத்திலிருந்த சொத்தில் 1.11 1/4 செண்டை அர்ஜுனனுக்கும் கொடுத்து இருவரும் பரிவர்த்தனை செய்துகொண்டதாகவும்¸ 1 ஆம் பிரதிவாதி தனது சொத்துகளைப் பொறுத்து தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு 14.12.2004 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் எழுதிவைத்ததாகவும்¸ சிதம்பர படையாச்சி நாராயணனிடம் 1.90 செண்டை கிரயம் வாங்கியதாகவும்¸ அது தாவா 3 ஆம் அயிட்ட சொத்து என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.

9) பிரதிவாதிகள் தரப்பில்¸ 2 ஆம் பிரதிவாதியான பன்னீர்செல்வம் என்பவர் பி.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதிவாதிகள் தரப்பில் பி.சா..1 முதல் பி.சா..5 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பி.சா..1 என்பது 01.08.1982 ஆம் தேதி கனகசபை படையாச்சிக்கு சிதம்பர படையாச்சி தனக்காகவும் தனது மைனர் மகனுக்காகவும் எழுதிக்கொடுத்த கிரயப்பத்திரத்தின் சான்றிட்ட நகலாகும். பி.சா..2 என்பது 20.12.2004 ஆம் தேதி வாதியின் வழக்கறிஞர்¸ பிரதிவாதிகளுக்கு அனுப்பிய அறிவிப்பாகும். பி.சா..3 என்பது 27.12.2004 ஆம் தேதி பிரதிவாதிகள் அனுப்பிய பதிலறிவிப்பாகும். பி.சா..4 என்பது வாதியின் வழக்கறிஞர் பதிலறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையாகும். பி.சா..5 என்பது 14.12.2004 ஆம் தேதி 1 ஆம் பிரதிவாதி¸ 2 ஆம் பிரதிவாதிக்கு எழுதிக்கொடுத்த தானசெட்டில்மெண்ட் பத்திர அசலாகும். அவர் தனது முதல் விசாரணை சாட்சியத்தில் எதிர்வழக்குரைரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். அவர் தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா 3 அயிட்ட சொத்துகளும் வாதிக்கு சொந்தமானது என்றும்¸ அதனை வாதிதான் அனுபவித்து வருவதாகவும்¸ வழக்குச்சொத்துகளுக்கான பட்டா வாதி பெயரில் உள்ளதாகவும்¸ இந்த வழக்கு வாதிக்கு ஆதரவாக தீர்ப்பாவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும்¸ சாட்சியம் அளித்துள்ளார்.

10) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு பாத்தியமான தரிசு நிலங்கள் என்பதும்¸ சர்வே எண்.683/2 ஆனது 683/2ஏ ல் 2.89 ஏக்கர்¸ 683/2பி-ல் 1.90 ஏக்கர்¸ 683/2சி-ல் 1.62 ஏக்கர் மற்றும் 683/2டி-ல் 1.87 என உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ அனுபவத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ச.எண்.683/2-ல் உள்ள மொத்த விஸ்தீரணம் 2.89 ஏக்கர் பொன்ன படையாச்சிக்கு கொடுக்கப்பட்டு¸ அவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் கனகசபை மற்றும் சிதம்பரம் ஆகியோர் அதனை சமபாகமாக பிரித்து வடக்குப்பக்க 1.44 1/2 ஏக்கரை சிதம்பரமும்¸ தெற்கில் 1.44 1/2 ஏக்கரை கனகசபையும் அனுபவித்து வந்திருப்பதும்¸ அதில் கனகசபையின் மகனான இந்த வாதிக்கு அவர்களின் குடும்ப பாகத்தில் மேற்படி 1.44 1/2 ஏக்கரும் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. மேலும்¸ மேற்படி சிதம்பர படையாச்சி தனது பாகமான 683/2-ல் 1.44 1/2 ஏக்கரில் தனது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம்(1 ஆம் பிரதிவாதி) மற்றும் ஒரு சிவலிங்கம் ஆகியோருக்கு தலா 0.48 1/4 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுத்தும்¸ மேலும் சிதம்பர படையாச்சிக்கு பாத்தியமான ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கரில் அதேபோல் தனது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம்(1 ஆம் பிரதிவாதி) மற்றும் ஒரு சிவலிங்கம் ஆகியோருக்கு தலா 0.63 1/4 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுத்தும்¸ அப்போது மைனராக இருந்த சிவலிங்கத்தின் பாகமான ச.எண்.693/2-ல் 0.48 1/4 ஏக்கரையும்¸ .எண்.683/2பி-ல் 0.63 1/4 ஏக்கரையும்¸ சிதம்பர படையாச்சி தனக்காகவும்¸ தனது மைனர் மகனுக்காக கார்டியன் என்ற வகையிலும் கண்டு¸ 12.8.1972 ஆம் தேதி வாதிக்கு வா.சா..1-ன் மூலம் கிரயம் கொடுத்திருப்பதும்¸ ஆகமொத்தம் கனகசபைக்கு பாகத்தில் கிடைத்து¸ குடும்ப பாகத்தில் வாதிக்கு ஒதுக்கப்பட்ட தாவா முதல் அயிட்ட சொத்தான ச.எண்.683/2-ல் வடபுற 1.44 1/2 செண்டும் மற்றும் கிரய சொத்துக்களான தாவா 2 ஆம் அயிட்ட சொத்தான ச.எண். 683/2-ல் தென்புற 1.44 1/4 ல் 1/3 பாகமான 0.48 1/4 மற்றும் ச.எண்.683/2பி-ல் 1/3 பாகமான தாவா 3 ஆம் அயிட்ட சொத்தான 0.63 1/4 செண்டும் ஆகமொத்தம் தாவா 3 அயிட்ட சொத்துகளும் சேர்த்து 2.56 ஏக்கரும் வாதிக்கு உரிமையானது என்பது தெரியவருகிறது. மேலும் மேற்படி தாவா சொத்துகள் ரீசர்வே செய்யப்பட்டு 564/11 மற்றும் 564/13 என உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ வாதிக்கு பாத்தியமான சொத்துகளை வாதிகளின் மகன்களாள பொன்னம்பலம் மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரும் பராமரித்து வருவதால் அவர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டு¸ அவர்களால் தீர்வைகள் செலுத்தப்பட்டிருப்பதும் வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா..2 முதல் வா.சா..15 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெரியவருகிறது.

11) மேற்படி வாதி தரப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களையே பிரதிவாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில் கூறப்பட்டுள்ளதே தவிர¸ மேற்படி வாதிதரப்பு அம்சங்களை பிரதிவாதிகள் தரப்பில் மறுக்கவில்லை. ஆனால் தவறான அனுமானத்தின்பேரில் தனக்கு பாகம் கிடைத்த சொத்தின் விஸ்தீரணம் குறைவாக உள்ளதாக கருதி வாதி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார். எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறப்பட்டுள்ளது. மேலும்¸ 2 ஆம் பிரதிவாதியான பி.சா.1 தனது சாட்சியத்தில்¸ தாவா 3 அயிட்ட சொத்துகளும் வாதிக்கு சொந்தமானது என்றும்¸ அதனை வாதிதான் அனுபவித்து வருவதாகவும்¸ வழக்குச்சொத்துகளுக்கான பட்டா வாதி பெயரில் உள்ளதாகவும்¸ இந்த வழக்கு வாதிக்கு ஆதரவாக தீர்ப்பாவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும்¸ சாட்சியம் அளித்துள்ளார். எனவே மேற்கண்ட வகையில் வா.சா.1 மற்றும் பி.சா.1 ஆகியோரின் சாட்சியங்களிலிருந்தும்¸ வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா..1 முதல் வா.சா..15 வரையிலான ஆவணங்களிலிருந்தும் வழக்கு சொத்துகள் முழவதும் வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளது என்று முடிவு செய்து எழுவினா எண்.2-க்கும்¸ தாவாவில் வாதி கோரியுள்ளவண்ணம் விளம்புகை பரிகாரமும்¸ நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரமும் வாதிக்குக் கிடைக்கத்தக்கது என முடிவு செய்து எழுவினா 3 மற்றும் 4-க்கும் வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.

12) எழுவினா எண்.1 :
மேற்கண்ட வகையில் பரிசீலனை செய்தவகையில்¸ சிதம்பர படையாச்சியின் மகனான மேற்படி சிவலிங்கத்திற்கு மேற்படி இருசர்வே எண்களிலும் கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரைப் போலவே கைலாசத்திற்கு கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரை அர்ஜுனனுக்கும்¸ அர்ஜுனன் தனக்கு பாத்தியமான வேறு ஒரு சொத்திலிருந்து 1.11 1/2 ஏக்கரை கைலாசத்திற்கும் மேற்படி இருவரும் பரிவர்த்தனை செய்து கொண்ட வகையில் ¸ முதல் பிரதிவாதி கைலாசம் தனக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டும்¸ பரிவர்த்தனை மூலம் கிடைத்த வகையில் 1.11 1/2 செண்டும் ஆகமொத்தம் 2.23 ஏக்கரை முதல் பிரதிவாதி சட்டவரையறை காலத்திற்கு மேலாக அனுபவித்து வந்து¸ அந்த சொத்தை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு பி.சா..5 ஆன 14.12.04 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தியிருப்பது தெரியவருகிறது. இதனை வாதியும் ஆட்சேபனை செய்யவில்லை. ஏனவே முதல் பிரதிவாதி தனக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டையும்¸ தனது சகோதரரான அர்ஜுனனுடன் பரிவர்த்தனை செய்துகொண்ட வகையில் 1.11 1/2 செண்டையும்¸ ஆகமொத்தம் 2.23 செண்டை அனுபவித்துவந்து¸ அதனை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு பி.சா..5 மூலம் தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தியுள்ளார் என்பதும்¸ இதுகுறித்து வாதிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா எண்.1-க்கு பிரதிவாதிகளுக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.

13) எழுவினா எண். :
வாதி கோரியுள்ள பரிகாரங்கள் எழுவினா எண்.3 மற்றும் 4-ன் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் வேறு எந்த பரிகாரமும் வாதிக்குக் கிடைக்கத்தக்கதல்ல என முடிவு செய்து இந்த எழுவினாவிற்கு விடை காணப்படுகிறது.

14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ தாவா சொத்துகள் வாதிக்கு உரிமையானது என விளம்புகை செய்தும்¸ அதனைத் தொடர்ந்து தாவா சொத்துகளில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளையும் பிறப்பித்து வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. தரப்பினர்களின் உறவுமுறையை கருத்தில்கொண்டு அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது.

என்னால் சுருக்கெழுத்தருக்கு சொல்லப்பட்டு¸ அவரால் கணிப்பொறியில் நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு¸ என்னால் சரிபார்க்கப்பட்டு¸ 2015 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாளான இன்று என்னால் அவையறிய தீர்ப்புரை பகரப்பட்டது.


மாவட்ட உரிமையியல் நீதிபதி¸
பண்ருட்டி.

No comments:

Post a Comment