இயக்க
ஊர்தி விபத்துக் கோரிக்கை
உரிமைத் தீர்ப்பாயம்¸
விருத்தாசலம்¸
கூடுதல்
சார்பு நீதிமன்றம்¸
விருத்தாசலம்
முன்னிலை:
திரு. என்.
சுந்தரம்¸ பி.எஸ்.சி.¸
பி.எல்.¸
கூடுதல்
தீர்ப்பாய நீதிபதி
2016ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் 05ஆம்
நாள் செவ்வாய்கிழமை
இ.வி.கோ.தீ.மு.ம.எண்:
357/2014
வள்ளி
சுப்ரமணியன் … மனுதாரர்
/எதிர்/
1. விஜயகுமார்
2. யுனைடெட்
இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
லிமிடெட் …... எதிர்மனுதாரர்கள்
வழக்கிலிருந்து
முக்கிய குறிப்புகள்:
மனுதாரருக்கு¸
எதிர்மனுதாரர்கள்
இழப்பீடாக ரூ.5¸00¸000/-ஐக்
கொடுக்க உத்தரவிடக்கோரி
இம்மனு இயக்க ஊர்திச் சட்டம்
பிரிவு 166(1) (2)ன் கீழ்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. மனுவின்
விபரம் வருமாறு
மனுதாரர்
26.08.2014-ஆம் தேதி மதியம்
3.30 மணியளவில்
மனுதாரருக்கு சொந்தமான
டி.என்.61-5242 என்ற
எண்ணுள்ள சூப்பர் எக்ஸ்-எல்¸
வாகனத்தை மனுதாரர்
ஓட்டிக்கொண்டு விருத்தாசலம்-ஆண்டிமடம்
சாலையில் புத்தூர் அருகே
ரோட்டின் இடதுபுற ஓரமாக
இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு
சென்று கொண்டிருக்கும் போது
எதிரே தெற்கிலிருந்து வடக்கு
நோக்கி அதிவேமாகவும்¸
கவனக்குறைவாகவும்¸
ஓட்டிவந்த டி.என்.34
டி.9394 என்ற
டாரஸ் லாரியை அதன் ஓட்டுனர்
மனுதாரர் ஓட்டிச் சென்ற
இருசக்கர வாகனத்தின் மீது
மோதியதில் மனுதாரர் தூக்கி
வீசப்பட்டார். மேற்படி
விபத்து ஏற்பட்டவுடன் மனுதாரர்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும்¸
பின்பு புதுவை பிம்ஸ்
மருத்துவமனையிலும் சிகிச்சைப்
பெற்றுக் கொண்டு தனியார்
மருத்துவமனையில் மாவு கட்டு
போட்டு சிகிச்சைப் பெற்றும்
வருகிறார். இவ்விபத்தினால்
மனுதாரருக்கு வலது புற ஷோல்டரில்
பலத்த எலும்பு முறிவும்¸
தலை¸ வலது
முட்டியில் பலத்த அடியும்
மற்றும் உடல் முழுவதும்
சிராய்ப்பு காயங்களும்
ஏற்பட்டுள்ளது. மேற்படி
விபத்திற்கு 1-ம்
எதிர்மனுதாரர் வாகனத்தின்
ஓட்டுனரது கவனக்குறைவு மற்றும்
அஜாக்கிரதையே காரணமாகும்.
1-ம் எதிர்மனுதாரர்
2-ம் எதிர்மனுதாரரிடம்
காப்பீடு செய்துள்ளார்.
ஆகையால்¸ 1¸ 2
எதிர்மனுதாரர்கள்
தனித் தனியாகவோ¸ கூட்டாகவோ
மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க
கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
ஆகவே¸ மனுதாரருக்கு
1¸ 2 எதிர்மனுதாரர்கள்
இழப்பீடாக ரூ.5¸00¸000/-ஐக்
கொடுக்க உத்தரவிடக் கோரி
இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. 2-ம்
எதிர்மனுதாரரின் எதிருரையின்
சுருக்கம் வருமாறு:
மனுதாரர்
ரூ.5¸00¸000/- நஷ்ட ஈடு
கோரி தாக்கல் செய்த இம்மனு
சட்டபடியாக சங்கதியாகவும்
நிலைக்கதக்கதல்ல. முதல்
எதிர்மனுதாரர் போக்குவரத்து
விதிகளை கடைபிடிக்காமல்
மாறாக வேகமாகவும்¸
அஜாக்கிரதையாகவும்
ஓட்டி இவ்வழக்கு விபத்து
ஏற்பட்டது என்பது சரியல்ல.
மனுதாரர் அவரது மோட்டார்
வாகனத்திலிருந்து போக்குவரத்து
விதிகளை கடைபிடிக்காமல்
குதித்ததால் தான் வழக்கு
விபத்து ஏற்பட்டுள்ளது
ஆகையால்¸ மனுதாரர்
மட்டுமே விபத்திற்கு காரணம்
ஆவார். லாரியின்
உரிமையாளர் இவ்வழக்கில் ஒரு
தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதால்
இந்த 2-ம் எதிர்மனுதாரர்
பிரிவு 120 மோட்டார்
வாகன சட்டத்தின்படி நடப்பதற்கு
தகுதி ஆனவர் ஆவார். மனுதாரரின்
கோரிக்கையின்படி 3¸ 4¸ 6¸ 10¸
23 ஆகியவற்றில் சொல்லியுள்ள
சங்கதிகளை முழுவதும் தவறு
என்று மறுத்தும் சொல்கிறார்.
மனுதாரர் மற்ற சங்கதியைப்
பொருத்து நேர்மாறான சாட்சிங்கள்
குறித்து நிரூபிக்க
கடமைப்பட்டவராவார். இந்த
2-ம் எதிர்மனுதாரரின்
வயது¸ தொழில்¸
அவருக்கு ஏற்பட்ட
குறைபாடு¸ வருமானம்
ஆகிய சங்கதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவைகளை மனுதாரரே
முறையாக நிரூபிக்க கடமைப்பட்டவராவார்.
மனுதாரர் கோரியுள்ள
இழப்பீடு மிக அதிகமானது ஆகும்
மற்றும் நிராகரிக்கதக்கதாகும்.
காப்பீடு பத்திரத்தின்
கடப்பாடுகளை மீறப்படவில்லை
என்பதை மனுதாரர் நிரூபிக்க
கடமைப்பட்டவராவார். எனவே¸
மனுதாரர் தாக்கல்
செய்துள்ள கோரிக்கை மனு
தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. இம்மனுவில்
தீர்மானிக்கப்பட வேண்டிய
பிரச்சினைகள்:
1. விபத்து
டி.என்.34¸ டி.9394
வாகன ஓட்டுனரின்
கவனக்குறைவாலும்¸
அஜாக்கிரதையாலும்
தான் நடைபெற்றுள்ளதா?
2. எதிர்மனுதாரர்கள்¸
மனுதாரருக்கு உரிய
இழப்பீட்டை அளிக்க கடமைப்பட்டவர்களா?
3. அவ்வாறு
இருக்கும்பட்சத்தில்
மனுதாரருக்கு எவ்வளவு
இழப்பீட்டுத் தொகை கிடைக்கக்
கூடியது?
5. மனுதாரர்
தரப்பில் மனுதாரர் வள்ளி
சுப்ரமணியன் மற்றும் மருத்துவர்
விஜய் ஆனந்த் ஆகிய இரண்டு
சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.
ம.சா.ஆ.1
முதல் ம.சா.ஆ11
வரை சான்றவாணங்கள்
குறியீடு செய்யப்பட்டுள்ளது.
6. பிரச்சினை
எண் 1-க்கு தீர்வு:
(அ)
இவ்வழக்கின் மனுதாரர்
வள்ளி சுப்ரமணியன் தனது முதல்
விசாரணை சாட்சியத்தை நிரூபண
வாக்குமூலமாக தாக்கல் செய்து
ம.சா.1 ஆக
விசாரிக்கப்பட்டுள்ளார்.
ம.சா.1
வள்ளி சுப்ரமணியன்
தனக்கு ஏற்பட்ட விபத்து
குறித்து தனது சாட்சியத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் ம.சா.1
வள்ளி சுப்ரமணியன்
தனது நிரூபண வாக்கு மூலத்துடன்
அவரது தரப்பு சான்றாவணங்களான
ஒன்பது ஆவணங்களையும் தாக்கல்
செய்து ம.சா.ஆ.1
முதல் ம.சா.ஆ.9
ஆக குறியீடு செய்துள்ளார்.
ம.சா.ஆ.1
27.08.2014 தேதியிட்ட
கருவேப்பிலங்குறிச்சி
காவல்நிலைய குற்ற எண்:
200/2014ல் பதிவு செய்யப்பட்ட
முதல் தகவலறிக்கையின் ஒளிநகல்.
ம.சா.ஆ.2
டி.என்.34
டி 9394 என்ற
பதிவெண் கொண்ட வாகனத்தின்
பதிவு மற்றும் அனுமதிச்
சான்றிதழின் ஒளி நகல்.
ம.சா.ஆ.3
டி.என்.34
டி 9394 காப்புறுதி
சான்றிதழின் ஒளி நகல்.
ம.சா.ஆ.4
டி.என்.34
டி 9394 வாகனத்தின்
மோட்டார் ஆய்வு அறிக்கையின்
உண்மை நகல். ம.சா.ஆ.5
சத்தியசீலன் என்பவரின்
வாகன ஓட்டுனர் உரிமத்தின்
நகல். ம.சா.ஆ.6
டி.என்.61
5242 என்ற இருசக்கர
வாகனத்தின் மோட்டார் வாகன
ஆய்வறிக்கையின் உண்மை நகல்.
ம.சா.ஆ.7
பாண்டிச்சேரி பிம்ஸ்
மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட
டிஸ்சார்ஜ் சம்மரியின் ஒளி
நகல். ம.சா.ஆ.8
விருத்தாசலம் அரசு
மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட
விபத்து பதிவேட்டின் ஒளி
நகல்.
(ஆ)
ம.சா.1
வள்ளி சுப்பிரமணியன்
தனது சாட்சியத்தில் விபத்து
குறித்து
கூறும்
பொழுது தான் 26.08.2014-ஆம்
தேதி மதியம் 3.30 மணியளவில்
தனக்கு சொந்தமான டி.என்.61
5242 என்ற பதிவு எண்ணுள்ள
சூப்பர் எக்ஸ்-எல்¸
வாகனத்தை ஓட்டிக்கொண்டு
விருத்தாசலம்-ஆண்டிமடம்
சாலையில் புத்தூர் அருகே
ரோட்டின் இடதுபுற ஓரமாக
இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு
சென்று கொண்டிருக்கும் போது
எதிரே தெற்கிலிருந்து வடக்கு
நோக்கி அதிவேமாகவும்¸
கவனக்குறைவாகவும்¸
ஓட்டிவந்த டி.என்.34
டி.9394 என்ற
டாரஸ் லாரியை அதன் ஓட்டுனர்
தான் ஓட்டிச் சென்ற இருசக்கர
வாகனத்தின் மீது மோதியதில்
தான் தூக்கி வீசப்பட்டு
விபத்து ஏற்பட்டதாகவும்¸
மேற்படி விபத்து
ஏற்பட்டவுடன் முதலில் தான்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும்¸
பின்பு புதுவை பிம்ஸ்
மருத்துவமனையிலும் சிகிச்சைப்
பெற்றுக் கொண்டு¸ அதன்
பின்னர் தனியார் மருத்துவமனையிலும்¸
அதனை தொடர்ந்து
கள்ளக்குறிச்சியிலும் மாவு
கட்டு போட்டு சிகிச்சைப்
பெற்று வருவதாகவும் தனது
சாட்சியத்தில் சொல்லியுள்ளார்.
(இ)
மேற்படி விபத்திற்கு
1ம் எதிர்மனுதாரருக்கு
சொந்தமான வாகனத்தின் ஓட்டுனரின்
அதிவேகமும் அஜாக்கிரதையும்
தான் விபத்திற்கு காரணம்
என்று சாட்சியமளித்துள்ளார்.
ம.சா. 1
வள்ளி சுப்பிரமணியன்
2ம் எதிர்மனுதாரர்
தரப்பில் குறுக்கு விசாரணை
செய்யப்பட்டுள்ளார். ம.சா.1
வள்ளி சுப்பிரமணியன்
தனது குறுக்கு விசாரணையில்
தான் இவ்வழக்கு விபத்தில்
ஓட்டிச் சென்ற இரு சக்கர
மோட்டார் வாகனமான டி.என்.61
5242 என்ற பதிவு எண்ணுள்ள
சூப்பர் எக்ஸ்-எல்
வாகனத்தின் பதிவு சான்றிதழையும்¸
தனது ஓட்டுனர்
உரிமத்தையும் தாக்கல்
செய்யவில்லை என்பதை
ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும்¸ இவ்வழக்கு
வாகன விபத்தானது இரு வாகனங்கள்
மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ளதாக
அ.சா.ஆ.8
விபத்து பதிவேட்டில்
பதிவு செய்யப்பட்டுள்ளதையும்
ஒப்புக்கொண்டுள்ளார்.
விபத்திற்குப் பின்
தான் கடலூர் கிருஷ்ணா
மருத்துவமனையில் சிகிச்சை
எதுவும் எடுக்க வில்லை என்றும்
சாட்சியமளித்துள்ளார்.
ம.சா.1
வள்ளி சுப்பிரமணியன்
மூலம் ம.சா.ஆ.1
ஆக குறியீடு செய்யப்பட்டுள்ள
கருவேப்பிலங்குறிச்சி
காவல்நிலைய குற்ற எண்:
200/2014 முதல் தகவல்
அறிக்கையின் ஒளி நகலை
பார்வையிடுகையில் டி.என்.34
டி 9394 என்ற
வாகனத்தை விபத்தின் பொழுது
அதை ஓட்டி வந்த ஓட்டுனர்
சத்தியசீலன் த/பெ
சக்திவேல்¸ சிதம்பரம்
என்பவரின் கவனக்குறைவு மற்றும்
அஜாக்கிரதையினால் தான் விபத்து
ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ள சங்கதி
தெரிய வருகிறது. இந்த
வழக்கின் இறுதி அறிக்கை
இவ்வழக்கில் தாக்கல்
செய்யப்படவில்லை என்பதை
ம.சா.1 வள்ளி
சுப்பிரமணியன் தனது குறுக்கு
விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
2ம் எதிர்மனுதாரர்
தரப்பிலும் மேற்சொன்ன குற்ற
வழக்கு எவ்வாறு முடிவுற்று
யார் மீது குற்றம் சுமத்தப்பட்டு¸
அந்த விசாரணையின்
முடிவு என்னவாயிற்று என்பது
பற்றி சாட்சியம் முன்னிறுத்தப்படவில்லை.
எனவே¸ ம.சா.ஆ.1
ல் கண்டுள்ளபடி
இவ்வழக்கு விபத்திற்கு
டி.என்.34 டி
9394 என்ற வாகனத்தை
விபத்தின் பொழுது ஓட்டிய
சத்தியசீலனின் கவனக்குறைவினால்
தான் விபத்து ஏற்பட்டுள்ளது
என்று பிரச்சினை எண்.1-க்கு
தீர்வு காணப்படுகிறது.
7. பிரச்சினை
எண் 2-க்கு தீர்வு
:
இவ்வழக்கு
விபத்தை ஏற்படுத்திய வாகனமான
டி.என்.34 டி
9394 வாகனத்தின் பதிவு
மற்றும் அனுமதிச் சான்றிதழ்¸
காப்புறுதி சான்றிதழ்¸
அதன் மோட்டார் ஆய்வு
அறிக்கை ஆகியவற்றின் ஒளி
நகல்கள் தாக்கல் செய்யப்பட்டு
அவைகள் ம.சா.ஆ.2
முதல் 4 ஆக
குறியீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை நகல். டி.என்.34
டி 9394 என்ற
வாகனத்தை விபத்தின் பொழுது
ஓட்டிய சத்தியசீலனின் ஓட்டுனர்
உரிமத்தின் ஒளி நகலும் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது¸ அது
ம.சா.ஆ.5
ஆக குறியீடு
செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்க
விபத்தானது 26.08.2014 அன்று
ஏற்பட்டுள்ளது. ம.சா.ஆ.2
டி.என்.34
டி 9394 வாகனத்தின்
பதிவு மற்றும் அனுமதிச்
சான்றிதழ் ஆகியவற்றின் ஒளி
நகலை பார்வையிடும் பொழுது¸
1ம் எதிர்மனுதாரர்
தான் மேற்சொன்ன வாகனத்திற்கு
உரிமையாளர் என்பதும்¸
மேற்சொன்ன வாகனமானது
2ம் எதிர்மனுதாராரிடம்
காப்பீடு செய்யப்பட்டுள்ளது
என்பதும் 2ம்
எதிர்மனுதாரர் தரப்பில்
காப்பீட்டு பத்திரத்தில்
சொல்லப்பட்டுள்ள கடப்பாடுகள்
மீறப்பட்டுள்ளது என்று முடிவு
செய்வதற்கு தேவையான சாட்சியங்கள்
முன்னிறுத்தப்படாத நிலையில்
2-ம் எதிர்மனுதாரரான
காப்பீட்டு நிறுவனமே மனுதாரருக்கு
நஷ்ட ஈடு தர கடமைப்பட்டவர்
என்று இந்நீதிமன்றம் பிரச்சினை
எண்.2-க்கு தீர்வு
காண்கிறது.
8. பிரச்சினை
எண் 3-க்கு தீர்வு:
(அ)
மனுதாரர் தரப்பில்
ம.சா.1 வள்ளி
சுப்பிரமணியத்திற்கு ஊனச்
சான்றிதழ் அளித்த மருத்துவர்
திரு. விஜய் ஆனந்த்
தம்பையா ம.சா.2
ஆக விசாரிக்கப்பட்டுள்ளார்.
ம.சா.2
மருத்துவர் விஜய்
ஆனந்த் தம்பையா தனது முதல்
விசாரணையில் தான் மனுதாரரை
பரிசோதித்து அவருக்கு விபத்தின்
காரணமாக ஏற்பட்டுள்ள காயங்கள்
குறித்தும் அதனால் தற்பொழுது
மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள
பாதிப்புகள் குறித்தும்¸
மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள
ஊனத்தின் அளவு குறித்து
சான்றிதழ் வழங்கியது குறித்தும்
சாட்சியமளித்துள்ளார்.
ம.சா.2
மருத்துவர் விஜய்
ஆனந்த் தம்பையா தனது சாட்சியத்தின்
வாயிலாக மனுதாரருக்கு வழங்கிய
ஊனச் சான்றிதழையும்¸
பரிசோதனை செய்வதற்க்காக
எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயையும்
தாக்கல் செய்து சாட்சியமளித்துள்ளார்.
ம.சா.2
மருத்துவர் விஜய்
ஆனந்த் தம்பையாயின் பரிசோதனைக்கு
எடுக்கப்பட்ட நுண்கதிர் படம்
ம.சா.ஆ.10
ஆகவும்¸ ம.சா.2
மருத்துவர் விஜய்
ஆனந்த் தம்பையா மனுதாரருக்கு
வழங்கிய ஊனச் சான்றிதழை
ம.சா.ஆ.11
ஆகவும் குறியீடு
செய்யப்பட்டுள்ளன. ம.சா.2
விஜய் ஆனந்த் தம்பையா
தனது சாட்சியத்தில் மனுதாரர்
26.08.2014 அன்று சாலை
விபத்தில் ஏற்பட்ட கொடுங்காயத்திற்காக
ஊனச் சான்றிதழ் பெறுவதற்காக
வேண்டி 02.01.2016 அன்று
மனுதாரர் தன்னிடம் வந்ததாகவும்¸
அவர் கொண்டு வந்திருந்த
ஆவணங்களான விருத்தாசலம் அரசு
மருத்துவமனையில் வழங்கப்பட்ட
காயச்சான்றிதழ் நகல் மற்றும்
புதுவை பிம்ஸ் மருத்துவமனையில்
சிகிச்சை பதிவேடு நகல்கள்
ஆகியவற்றை பார்வையிட்டதாகவும்¸
அவருக்கு RIGHT
CLAVICLE எலும்பு
உடைந்து¸ நரம்பு
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்
கூறியுள்ளார். RIGHT
CLAVICLE எலும்பு மேல்
தொடு வலி உள்ளதாகவும்¸
வலது கையில் எடை தூக்க
சிரமம் உள்ளதாகவும்¸ வலது
கை அளவு குறைந்துள்ளதாகவும்
சாட்சியமளித்துள்ளார்.
வலது தோல் பட்டையில்
வலிமை குறைந்து பவர் 4/5 வலது
தோல்பட்டையில் அசைவு 250
குறைந்துள்ளதாகவும்
சாட்சியமளித்துள்ளார்.
மனுதாரருக்கு ஏற்பட்ட
ஊனம் 35மூ என்றும்
கூறி சாட்சியமளித்துள்ளார்.
(ஆ) மேலும்¸
ம.சா. 2
மருத்துவர் விஜய்
ஆனந்த் தம்பையா தனது குறுக்கு
விசாரணையில் மனுதாராருக்கு
சுமார் ஒன்றறை வருடம் கழித்து
தான் ஊனச் சான்றிதழ் வழங்கியதாகவும்¸
மனுதாரர் முடநீக்கியல்
பயிற்சி சரியாக மேற்கொண்டால்
ஊனம் சரியாகிவிடும் என்பதை
மறுத்தும்¸ ஊனச்சான்றிதழ்
மனுதாரரை பரிசோதித்தும்
கணித்தும் தான் சான்று அளித்தேன்
என்றும்¸ மனுதாரருக்கு
வயது 66 என்பதால்
அவருக்கு ஏற்பட்டுள்ள ஊன
சதவீதம் அதிகப்படுத்தி
கொடுக்கப்பட்டுள்ளது என்று
கேட்கப்பட்டுள்ளதையும்
மறுத்து அளித்துள்ள சாட்சியம்
ஏற்கும் விதமாகவே உள்ளது.
(இ)
மனுதாரர் தரப்பில்
அவரது தொழில் குறித்தும்¸
வருமானம் குறித்தும்
எத்தனை மாதங்கள் அவருக்கு
வருமானம் இழப்பு ஏற்பட்டது
என்பது குறித்தும் எவ்வித
ஏற்கும் படியான சாட்சியங்களும்
மனுதாரர் தரப்பில் முன்னிறுத்தப்படாத
நிலையை கருத்திற்கொண்டும்¸
விபத்தின் பொழுது
அவரது வயதினை கருத்திற்கொண்டும்¸
அவரது வருமானம் மாதம்
ரூ.4¸500/- என்றும்¸
அவருக்கு மூன்று
மாதங்கள் வருமான இழப்பு
ஏற்பட்டுள்ளதாகவும்¸
அவருக்கு ஏற்பட்டுள்ள
ஊனத்திற்கு ஒரு சதவீதத்திற்கு
தலா ரூ.2¸000/- என்றும்
முடிவு செய்யப்பட்டு¸
கீழ்காணும் தலைப்புகளில்
நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
(I) வருமான
இழப்பிற்காக 4,500ஓ3
= 13,500/-
(II) பகுதி
நிரந்தர ஊனத்திற்காக ரூபாய்
= 70,000/-
(III) போக்குவரத்து
செலவுக்காக ரூபாய் = 5,000/-
(IV) ஊட்டச்சத்து
உட்கொண்டதற்காக ரூபாய் =
5,000/-
(V) வலி
மற்றும் வேதனைக்காக ரூபாய்
= 10,000/-
(VI) உதவியாளர்
செலவுக்காக ரூபாய் = 4,000/-
(VII) மருத்துவ
செலவினங்களுக்காக ரூபாய் =
7¸336/-
(ம.சா.ஆ.9
மருத்துவ பில்களின்
படி)
(ஈ)
ஆக மொத்தம் மனுதாரருக்கு
நஷ்ட ஈடாக ரூபாய் 1¸14¸836/-
மட்டும் வழங்கி
உத்தரவிடப்படுகிறது. நஷ்ட
ஈட்டுத் தொகையை 2-ம்
எதிர்மனுதாரர் கொடுக்க
கடமைப்பட்டவர் என்று முடிவு
செய்யப்படுகிறது. இழப்பீட்டு
தொகையை மனு தேதி முதல் முழுத்
தொகையும் நீதிமன்றத்தில்
வைப்பீடு செய்யும் வரையான
காலத்திற்கு ஆண்டுக்கு 7.5மூ
வட்டி சேர்த்து மூன்று மாத
காலத்தில் எதிர்மனுதாரர்
நீதிமன்றத்தில் வைப்பீடு
செய்ய வேண்டுமென்றும்
உத்தரவிடப்படுகிறது.
வழக்கறிஞர் ஊதியத்தை
விதிகளின் படி கணக்கிட்டு
இழப்பீட்டு தொகையில் இருந்து
தனிக் காசோலையாக வழங்க
உத்தரவிடப்படுகிறது.
இழப்பீட்டு தொகையில்
ரூ.50¸000/-த்தை மட்டும்
ஒரு தேசிய மயமாக்கப்பட்ட
வங்கியில் மூன்றாண்டுகளுக்கு
நிரந்தர வைப்பீட்டில் வைக்கவும்
உத்தரவிடப்படுகிறது. பாக்கி
தொகையை மனுதாரர் நீதிமன்றத்திலிருந்து
உடனே பெற்றுக் கொள்ளவும்
உத்தரவிடப்படுகிறது.
நிரந்தர வைப்பீட்டு
தொகையிலிருந்து வரும் வட்டித்
தொகையை மனுதாரரே நேரடியாக
வங்கியிலிருந்து மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை பெற்றுக்
கொள்ள அனுமதியளித்தும்
உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறாக மேற்சொன்ன
தலைப்புகளில் இழப்பீடு வழங்கி¸
பிரச்சினை எண்.3-க்கு
தீர்வு காணப்படுகிறது.
9. முடிவாக¸
மனுதாரருக்கு 2-ம்
எதிர்மனுதாரர் நஷ்ட ஈடாக
ரூபாய் 1¸14¸836/- த்தை
மனு தேதி முதல் முழுத் தொகையும்
நீதிமன்றத்தில் வைப்பீடு
செய்யும் வரையான காலத்திற்கு
ஆண்டுக்கு 7.5மூ
வட்டி சேர்த்து மூன்று மாத
காலத்தில் 2ம்எதிர்மனுதாரர்
நீதிமன்றத்தில்
வைப்பீடு செய்ய வேண்டுமென்றும்¸
வழக்கறிஞர் ஊதியத்தை
விதிகளின் படி கணக்கிட்டு
இழப்பீட்டு தொகையில் இருந்து
தனிக் காசோலையாக வழங்க
வேண்டுமென்றும்¸ இழப்பீட்டு
தொகையில் ரூ.50¸000/-த்தை
மட்டும் ஒரு தேசிய
மயமாக்கப்பட்ட
வங்கியில் மூன்றாண்டுகளுக்கு
நிரந்தர வைப்பீட்டில் வைக்க
வேண்டுமென்றும்¸ பாக்கி
தொகையை மனுதாரர் நீதிமன்றத்திலிருந்து
உடனே பெற்றுக்
வேண்டுமென்றும்¸
நிரந்தர வைப்பீட்டு
தொகையிலிருந்து வரும் வட்டித்
தொகையை மனுதாரரே நேரடியாக
வங்கியிலிருந்து மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை பெற்றுக்
கொள்ள வேண்டுமென்றும்¸
இழப்பீட்டிற்குரிய
நீதிமன்றக் கட்டண பாக்கியை
மனுதாரர் 10 தினங்களுக்குள்
இந்நீதிமன்றத்தில் செலுத்த
வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டு
அவ்வாறே
இம்மனுவானது விகிதாச்சார
செலவுத் தொகையுடன் பகுதியாக
அனுமதிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.
என்னால்
சுருக்கெழுத்து-தட்டச்சருக்கு
பகுதி வாய்மொழியாக சொல்லப்பட்டு¸
அவரால் நேரடியாக
தட்டச்சு செய்யப்பட்டு¸
பகுதி என்னால் தட்டச்சு
செய்யப்பட்டு¸ சரிபார்த்து
பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு¸
2016ம் ஆண்டு ஏப்ரல்
திங்கள் 05ம் நாளாகிய
இன்று இந்த உத்தரவு என்னால்
அவையறியப் பகரப்பட்டது.
-ஒம்-
நா. சுந்தரம்.
கூடுதல்
தீர்ப்பாய நீதிபதி¸
விருத்தாசலம்.
No comments:
Post a Comment