நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை
முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல்
நீதித்துறை நடுவர் எண்- 2
சிவகங்கை
2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் நாள் புதன்கிழமை
திருவள்ளுவராண்டு 2044 மன்மதவருடம் தை மாதம் 6 ம் நாள்
ஆண்டு பட்டிகை வழக்கு எண் 73 / 2005
குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
சார்பு ஆய்வாளர்
வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு
சிவகங்கை
குற்ற எண் 9/04
குற்றம் சாட்டப்பட்டவர்கள் :
1. மக்கள் அரசு (வயது 42-15)
த-பெ நடராஜன்
குண்டேந்தல்பட்டி
பிராணம்பட்டி அஞ்சல்
திருப்பத்தூர் தாலுகா
2. ரவி என்ற ரவிச்சந்திரன் (வயது 45-15)
த-பெ முத்தையா
குண்டேந்தல்பட்டி
3. முத்தையா (வயது 81-15)
த-பெ சின்னையா
குண்டேந்தல்பட்டி
4. பஞ்சவர்ணம் (வயது 64-15)
த-பெ சேவுகன்
முன்னாள் தலைவர்
திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
தேவி இல்லம்
காந்தி நகர்
திருப்பத்தூர்

குற்றம் வனையப்பட்டது : 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 419¸420¸ 465¸ 467¸ 468¸ 471 ன் கீழும்¸ 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34 ன் கீழும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34¸ 408 இதசவின் கீழும் குற்றம் வனையப்பட்டுள்ளது.
தண்டனை : நன்னடத்தை சட்டம் பிரிவு 4 (1) (3) ன் கீழ்
தீர்மானம் : இறுதியில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 419¸ 420¸ 465¸ 467¸ 468¸ 471 ன் கீழும்¸ 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34 ன் கீழும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ
34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34¸ 408 ன் கீழும் குற்றம் இழைத்துள்ளதாக அரசு தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானம்.
தீர்ப்பு : 1 முதல் 4 குற்றவாளிகள் (மக்கள் அரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) நன்னடத்தைச் சட்டம் பிரிவு 4(1) ன் கீழ் இந்நாள் முதல் ஓராண்டு காலம் வரை பொது அமைதி காத்து வர வேண்டும் என்று உறுதி கூறி அக்காலத்தில் ஏதேனும் தவறுகள் புரிந்தால் இந்நீதிமன்றம் அழைத்து வழங்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலும்¸ பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா ரூ.10¸000- க்கு பிணைப்பத்திரம் எழுதிக் கொடுப்பதின் பேரிலும்¸ 1 முதல் 4 குற்றவாளிகள் நன்னடத்தை சட்டப்பிரிவு 4(3) ன் கீழ் நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையில் ஓராண்டு காலம் வரை இருந்து வர உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. இத் தீர்ப்பானது 1 முதல் 4 குற்றவாளிகளின் (மக்கள் அரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்); பணிக்காலத்தையோ¸ எதிர் காலத்தையோ பாதிக்காது என தெளிவுபடுத்தப்படுகிறது.
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
அசலில் இவ்வழக்கில் 6 மற்றும் 7 வதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த சித்தரஞ்சன் (ஆண்டு பட்டிகை வழக்கு எண். 110-13) மற்றும் அருணாச்சலம் (ஆண்டு பட்டிகை வழக்கு எண். 111-13) ஆகியோர்கள் மீதான வழக்கிற்கு இந்நீதிமன்றத்தில் ஏற்கெனவே தீர்ப்புரை பகரப்பட்டுள்ளது. 3 வதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த பழனிச்செல்வன் என்பவர் மீதான வழக்கானது ஆண்டு பட்டிகை வழக்கு எண். 23-14 என்ற எண்ணிலும்¸ 5 வதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த கதிரவன் என்பவர் மீதான வழக்கானது ஆண்டு பட்டிகை வழக்கு எண். 47-09 என்ற எண்ணிலும் இந்நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.
1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது கூட்டுறவு சங்க சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்ட வங்கியாகும்¸ இதில் தாவா வங்கி என்று குறிப்பிட்டிருந்தால் இந்த வங்கியை சாரும் என்றும்¸ இந்த வங்கியானது அங்கத்தினர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு¸ விவசாய கடன்¸ வாகன கடன்¸ கிணறு தோண்ட¸ ஆழப்படுத்த கடன்¸ ஆயில் இஞ்சின் கடன் போன்ற கடனுதவிகளை செய்து வருவதாகவும்¸ இதில் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் அரசு¸ ரவி¸ பழனிச்செல்வன்¸ முத்தையா¸ கதிரவன் வரை உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் குண்டநேந்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்¸ குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்றும்¸ இதில் தனியே பிரித்தெடுக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட சித்தரஞ்சன் இவ்வங்கியின் செயலாளர் 22.08.98 முதல் 31.08.04 முடிய வங்கிச் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் என்றும்¸ தனியே பிரித்தெடுக்கப்பட்டுள்ள 7 வது குற்றம் சாட்டப்பட்ட அருணாச்சலம் வங்கியின் சரக மேற்பார்வையாளராக 02.03.72 முதல் தொடர்ந்து பணிபுரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பஞ்சவர்ணம் வங்கியின் தலைவராக 31.10.96 முதல் 24.05.01 முடிய பணிபுரி;ந்து வந்துள்ளார் என்றும்¸ அவருக்கு செயலாளர் உள்ளிட்ட அனைத்து சார் நிலை பணியாளர்களின் பணிகளை கண்காணித்தல்¸ அன்றாட வரவு செலவுகளின் உண்மை தன்மைகளை உறுதி செய்தல்¸ கடன் வழங்குதல் மற்றும் அனைத்து ஆஸ்திகளுக்கும் தலைவரே பொறுப்பு போன்று கடமைகளும்¸ பொறுப்புகளும் துணைவிதி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1983 ன் படியும்¸ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வங்கியின் ஊரக வளர்ச்சி வங்கியின் அ-வகுப்பு உறுப்பினரான 1 வதுகுற்றம் சாட்டப்பட்ட மக்கள் அரவு (உறுப்பினர் எண்.எ.7860) குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் பேரில் ஆள்மாறாட்டம் செய்து குற்றம் சாட்டப்பட்ட கதிரவனின் கையொப்பங்களை போலியான கடன் மனு¸ அது தொடர்பான ஆவணங்களை போலியாக தயார் செய்து அதில் KATHIRAVAN என்று ஆங்கில பெரிய எழுத்துக்களில் போலி கையொப்பங்களையிட்டு பண்ணை சாரா கடன் திட்டத்தின்படி கடன் பதிவேட்டு பக்கம் 56 கடன் எண்.NFS 159ல் கண்டுள்ளபடி 28.01.2000 தேதியில் ரூ.4¸78¸000- மும்¸ 29.01.2000 தேதியில் ரூ.8000-மும் ஆக மொத்தம் ரூ.4¸86¸000- த்தை மோசடி கையாடல் செய்ய வேண்டுமென்ற குற்றமுறு நோக்குடன் ரவி என்ற ரவிச்சந்திரன்¸ பழனிச்செல்வன்¸ முத்தையா¸ கதிரவன்¸ சித்தரஞ்சன்¸ அருணாச்சலம்¸ பஞ்சவர்ணம் ஆகிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் கூட்டு உடந்தையுடன் குற்றம் சாட்டப்பட்ட மக்களரசு விலை புள்ளி அளித்த நிறுவனத்திடம் டாடா சுமொ காரை பெற்று கொண்டு வங்கியில் கடன் பெற்று நிதியிழப்பு மோசடி கையாடல் செய்து சுயலாபம் அடைந்துள்ளதாகவும்¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ பழனிச்செல்வன்¸ முத்தையா¸ கதிரவன்¸ ஆகிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்ட மக்களரசு ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் போலி கையொப்பமிட்டு மோசடியாக வங்கியை ஏமாற்றி கடன் பெறுவதற்கு தெரிந்தே அடமான பத்திர பதிவில் ரவி என்ற ரவிச்சந்திரன்¸ பழனிச்செல்வன்¸ முத்தையா ஆகிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் கையொப்பமிட்டும்¸ குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் தனது சொத்து ஆவணத்தை தெரிந்தே கொடுத்தும் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும்¸ மேற்படி வங்கியை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 419¸ 420¸ 465¸ 467¸ 468¸ 471 ன் கீழும்¸ 2 மற்றும் 3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34 ன் கீழும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 409¸ 420¸ 477(அ) உ-இ 34 ன் கீழும் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி குற்ற முறையிடுபவரால் இந்த குற்ற இறுதி அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
3. போதிய அவகாசம் கொடுத்து 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் (மக்களரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 419¸ 420¸ 465¸ 467¸ 468¸ 471 ன் கீழும்¸ 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34 ன் கீழும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34¸ 408 ன் கீழும் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
4. 3 மற்றும் 5 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு பிரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதாலும்¸ 6 மற்றும் 7 வது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு பிரிக்கப்பட்டு ஏற்கெனவே தீர்ப்பு பகரப்பட்டுள்ளதாலும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் 8 வது குற்றம் சாட்டப்பட்டவர்¸ 3 மற்றும் 4 வது குற்றம் சாட்டப்பட்டவர்களாக வரிசை (Rank) மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
5. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 2 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ. சா ஆ. 1 முதல் அ. சா ஆ. 15 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன. அரசு தரப்பு சாட்சிகளின் சுருக்கம் பின்வருமாறு.
அ.சா.1 தனது சாட்சியத்தில் 01.07.99 முதல் திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் உட்பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த போது மேற்படி வங்கியில் டாடா சுமோ கடன் வழங்கியதில் கதிரவன் என்பவர் பெயரில் மக்கள் அரசு என்பவர் கையெழுத்து போட்டு கடன் பெற்றதாக தெரிந்து கொண்டதாகவும் கூறி சாட்சியம் அளித்துள்ளார். அ.சா.2 தனது சாட்சியத்தில் தற்போது சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு பிரிவிலிருந்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டதாகவும்¸ சென்ற 12.04.2005 ம் தேதி சிவகங்கை மாவட்டம் வணிகவியல் குற்றப்புலனாய்வு ஆய்வாளராக பணிபுரிந்து வந்ததாகவும்¸ ஏற்கெனவே தனக்கு முன்பாக சார்பு ஆய்வாளர் திரு. சுப்பையா இப்பிரிவில் பணிபுரிந்து வந்ததாகவும்¸ அவரது கையொப்பம் ஆவணங்கள் மூலம் தனக்கு நன்கு தெரியும் என்றும்¸ அவர் 10.09.04 அன்று 11.00 மணியளவில் பணியில் இருக்கும் போது உயர் அதிகாரியிடமிருந்து வரப்பெற்ற தபாலைப் பெற்று அதனை பரிசீலனை செய்து குற்றம் சாட்டப்பட்ட மக்கள் அரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ பழனிச்செல்வன்¸ முத்தையா¸ கதிரவன் ஆகியோர்கள் மீது குற்ற எண். 9-04 பிரிவு 419¸ 420¸ 477(ஏ) இதச வாக வழக்கு பதிவு செய்ததாகவும்¸ முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.1 என்றும்¸ வழக்கின் சாட்சிகளை தனித்தனியாக விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும்¸ பின்பு அ.சா.2 பொறுப்பேற்றவுடன் வழக்கின் கோப்பை மேல் விசாரணைக்காக வைத்ததை எடுத்துக் கொண்டு 12.04.05 ம் தேதியிலிருந்து வழக்கின் மற்ற சாட்சிகளை தனித்தனியாக விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும்¸ இவ்வழக்கில் பெறப்பட்ட ரொக்க ரசீது புத்தகம்¸ ரொக்க ரசீது எண். 001601-700 அ.சா.ஆ.2¸ ரசீது எண். 001801-001900 முடிய உள்ளது அ.சா.ஆ.3¸ பிரவேச புத்தகம் எண். 26 பக்கம் 1 முதல் 302 முடிய உள்ளது அ.சா.ஆ.4¸ பிரவேச புத்தகம் பக்கம் 1 முதல் 126 வரை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது அ.சா.ஆ.5¸ கடன் பதிவேடு பக்கம் 1 முதல் 199 முடிய உள்ளது அ.சா.ஆ.6¸ தீர்மானபுத்தகம் பக்கம் 1 முதல் 250 முடிய உள்ளது அ.சா.ஆ.7¸ வங்கியின் துணைவிதிப் புத்தகம் அ.சா.ஆ.8¸ விசாரணை அதிகாரி அவர்களால் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய கோப்பு எண்.8 அ.சா.ஆ.9¸ கடன் மனு பக்கம் 1 முதல் 129 முடிய கோப்பு எண். 9 அ.சா.ஆ.10¸ காரைக்குடி சரக துணைபதிவாளர் அறிக்கை நாள் 14.08.02 அ காரைக்குடி துணைப்பதிவாளர் செயல் முறை எண். ந.க. 2928-02¸ நாள் 25.09.02 காரைக்குடி துணைப்பதிவாளரின் காலநீட்டிப்பு செயல் முறை எண். ந.க. 4004-02 ச.ப.நாள் 26.12.02¸ காரைக்குடி துணைப்பதிவாளரின் காலநீட்டிப்பு செயல்முறை எண். ந.க. 4004-02¸ நாள் 20.03.03 திரு. மு. கதிரவன் புகார் மனு நாள் 29.07.02 ஒளி நகல் மேற்கண்ட ஆவணங்கள் அடங்கிய கோப்பு எண். 10 முதல் 14 வரை உள்ளது அ.சா.ஆ.11¸ மக்கள் அரசு 10.03.03 ல் மற்றும் 18.03.03 ல் ஆஜராக கோரும் அழைப்பாணை பெற்றுக் கொள்ள மறுத்து திரும்பி வந்ததாகவும்¸ ரவி¸ பழனிச்செல்வன்¸ கதிரவன்¸ முத்தையா ஆகியோர்கள் ஆஜராகக் கோரும் அழைப்பாணைகள் பெற்றுக் கொள்ள மறுத்து திரும்பி வரப்பெற்றதாகவும்¸ மேற்கண்ட அழைப்பாணைகள் அடங்கிய கோப்பு அ.சா.ஆ.12¸ அடமானம் கடன் பத்திரம் அ.சா.ஆ.13¸ நாள்வழிப் பேரேடு நாள் 27.01.2000 முதல் 31.01.2000 முடிய உள்ளது அ.சா.ஆ.14¸ 81 விசாரணை அறிக்கை அ.சா.ஆ.15¸ ஆகிய ஆவணங்களை பார்வையிட்டு பரிசீலனை செய்ததாகவும்¸ பின்னர் சாட்சிகளை விசாரணை செய்து வாக்குமூலங்கள் பெற்ற அடிப்படையிலும் விசாரணையை முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாகவும் கூறி சாட்சியம் அளித்துள்ளார்.
6. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு (மக்களரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு.ச. 313(1)(ஆ)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் உண்மை என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளாக யாரையும் முன்னிட்டு விசாரிக்கவில்லை.
8 . பிரச்சனை
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிவகங்கை மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களால் இதச பிரிவுகள் 419¸ 420¸ 465¸ 467¸ 468¸ 471 உ-இ 34 ன் கீழ் குற்றம் செய்துள்ளதாக குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் பேரில் ஆள்மாறாட்டம் செய்து குற்றம் சாட்டப்பட்ட கதிரவனின் கையொப்பங்களை போலியாக இட்டு¸ போலியான கடன் மனு¸ அது தொடர்பான ஆவணங்களை போலியாக தயார் செய்து அதில் KATHIRAVAN என்று ஆங்கில பெரிய எழுத்துக்களில் போலி கையொப்பங்களையிட்டு பண்ணை சாரா கடன் திட்டத்தின்படி கடன் பதிவேட்டு பக்கம் 56 கடன் எண்.NFS 159ல் கண்டுள்ளபடி 28.01.2000 தேதியில் ரூ.4¸78¸000- மும்¸ 29.01.2000 தேதியில் ரூ.8000-மும் ஆக மொத்தம் ரூ.4¸86¸000- த்தை மோசடி கையாடல் செய்து வங்கிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அ.சா.1 முதல் அ.சா.2 வரையான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவர்கள் மூலம் 1 முதல் 15 வரையான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் கையாடல் செய்த தொகை முழுவதும் இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களால் திரும்ப தாவா சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டதாக இந்நீதிமன்றம் அறிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும்¸ அரசு தரப்பிலும் இது ஒப்புக்கொள்ளப்படுகிறது. இவ்வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு குற்ற ஒப்புதல் மனு தாக்கல் செய்துள்ள நிலையில்¸ மேற்படி முற்படு;த்தப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்கள் வாயிலாக 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 419¸ 420¸ 465¸ 467¸ 468¸ 471 ன் கீழும்¸ 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34 ன் கீழும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34¸ 408 ன் கீழும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
9. எனவே¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 419¸ 420¸ 465¸ 467¸ 468¸ 471 ன் கீழும்¸ 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34 ன் கீழும்¸ 4 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 419 உ-இ 34¸ 420 உ-இ 34¸ 465 உ-இ 34¸ 467 உ-இ 34¸ 468 உ-இ 34¸ 471 உ-இ 34¸ 408 ன் கீழும் குற்றவாளிகள் என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
10. 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் (மக்களரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) அவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்து கு.வி.மு.ச பிரிவு 248(2) ன் கீழான தண்டனை குறித்து வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குற்ற ஒப்புதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்¸ வங்கியில் கடன் பெற்ற தொகை முழவதையும் செலுத்திவிட்டதாகவும்¸ இதற்கு முன் எந்தவொரு குற்ற நிகழ்வுகளிலும் ஈடுபடவில்லை என்றும்¸ தங்களை நம்பியே தங்களது குடும்பம் உள்ளதெனவும்¸ எனவே தங்களை மன்னித்து நன்னடத்தை சட்டத்தின் கீழ் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
11. வழக்காவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் மனுவும் பரிசீலிக்கப்பட்டது. 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வங்கியில் மோசடியாக பெறப்பட்ட கடன் தொகை முழுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் திரும்ப செலுத்தப்பட்டடுவிட்டதாகவும்¸ எனவே அவர்களை மன்னித்து விடுதலை செய்யவேண்டுமென்று முன் வைக்கப்பட்டது. வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையானது 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்களால் திரும்ப செலுத்தப்பட்டது குறித்து எந்த ஆட்சேபணையையும் அரசு தரப்பு எழுப்பவில்லை. மேற்படி தொகையானது வங்கியில் வரவு வைக்கப்பட்ட நிலையில் தாவா வங்கிக்கு எந்த ஒரு நஷ்டமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்களை பொறுத்த மட்டில் அவர் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு அவர்களுடைய நன்னடத்தையை அறிய நன்னடத்தை அதிகாரியின் அறிக்கை பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டது சம்மந்தமாக நன்னடத்தை அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்த 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும்¸ கடன் தொகையை திரும்ப தாவா வங்கியில் செலுத்திவிட்டதாகவும்¸ தங்களது தவறுக்கு வருந்துவதாகவும்¸ நல் வாழ்க்கை வாழ விரும்புவதாகவும்¸ அதனால் அவர்களை நன்னடத்தை சட்டப்பிரிவு 4(1) ன் கீழ் விடுவித்து பிரிவு 4(3) ன் கீழ் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருந்து வர பரிந்துரை செய்வதாகவும் கண்டுள்ளது.
12. வழக்காவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. அரசு தரப்பில் 1 முதல் 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடன் தொகை திரும்பச் செலுத்தப்பட்டது குறித்து எந்தவித ஆட்சேபணையும் எழுப்பப்படவில்லை. அத்துடன் இது போன்ற வழக்குகளில்¸ கூட்டுறவு துறைக்கு இழப்பீடு ஏற்படுத்தாமல் கையாடல் குறித்து விசாரணை தொடங்கியவுடன் குற்றவாளி பணம் செலுத்திவிட்டு நன்னடத்தை சட்டத்தின் பலனை கோரும் பொழுது¸ அவருக்கு நன்னடத்தை சட்டத்தின் பலனை அளிப்பதில் தவறில்லை என 2000
– 3 - MWN - Crl – 133 என்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு இவ்வழக்கு சூழ்நிலைக்கு ஒத்துப்போவதாக இந்நீதிமன்றம் கருதுகிறது.
13. இறுதியாக இவ்வழக்கு சூழ்நிலைகளிலிருந்தும்¸ வழக்கின் தன்மையிலிருந்தும் 1 முதல் 4 குற்றவாளிகள் (மக்களரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) நன்னடத்தை சட்டத்தின் பலனை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என முடிவு செய்து¸ 1 முதல் 4 குற்றவாளிகளை (மக்களரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) நன்னடத்தைச் சட்டம் பிரிவு 4(1) ன் கீழ் இந்நாள் முதல் ஓராண்டு காலம் வரை பொது அமைதி காத்து வர வேண்டும் என்று உறுதி கூறி அக்காலத்தில் ஏதேனும் தவறுகள் புரிந்தால் இந்நீதிமன்றம் அழைத்து வழங்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலும்¸ பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலும் குற்றவாளிகள் தலா ரூ.10¸000- க்கு பிணைப்பத்திரம் எழுதிக் கொடுப்பதின் பேரிலும்¸ குற்றவாளிகள் நன்னடத்தை சட்டப்பிரிவு 4(3) ன் கீழ் நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையில் ஓராண்டு காலம் வரை இருந்து வர உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. இத்தீர்ப்பானது 1 முதல் 4 குற்றவாளிகளின் (மக்களரசு¸ ரவி என்ற ரவிச்சந்திரன்¸ முத்தையா¸ பஞ்சவர்ணம்) பணிக்காலத்தையோ¸ எதிர் காலத்தையோ பாதிக்காது என தெளிவுபடுத்தப்படுகிறது.
நன்றி. அருமையான பதிவு
ReplyDelete