21.7.16

இயக்க ஊர்திச் சட்டம் பிரிவு 166(1)

இயக்க ஊர்தி விபத்துக் கோரிக்கை உரிமைத் தீர்;ப்பாயம்¸ விருத்தாசலம்
கூடுதல் சார்பு நீதிமன்றம்¸ விருத்தாசலம்
முன்னிலை: திரு. என்.சுந்தரம்¸ பி.எஸ்.சிபி.எல்
கூடுதல் தீர்ப்பாய நீதிபதி
2015ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17ஆம் நாள் செவ்வாய்கிழமை
.வி.கோ.தீ.மு..எண் 257/2014

1. பகுத்தறிவு .........மனுதாரர்
/எதிர்/
1. சரவணன்
2. மலர்மன்னன் ..... எதிர்மனுதாரர்கள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
மனுதாரருக்கு¸ எதிர்மனுதாரர்கள் இழப்பீடாக ரூ.15¸00¸000/-ஐக் கொடுக்க உத்தரவிடக்கோரி இம்மனு இயக்க ஊர்திச் சட்டம் பிரிவு 166(1)ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


2. மனுவின் விபரம் வருமாறு
மனுதாரர் 25.06.2013 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் பெண்ணாடம் ஐயப்பன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வாகனம் TN 31 AL 4568 என்ற எண்ணுள்ள HERO வண்டியில் பெண்ணாடம் பேருந்து நிலையம் வந்து அங்கு நின்று கொண்டிருந்த தனது அம்மா கலைச்செல்வி என்பவரை TN 31 AL 4568 என்ற எண்ணுள்ள இருசக்கர வாகனத்தில் பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு ஆவினங்குடி செல்ல விருத்தாசலம் - திட்டக்குடி மெயின் ரோட்டில் இறையூர் விஜய் பர்னிச்சர் மார்ட் எதிரில் மதியம் 3 மணியளவில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ரோட்டின் இடது பக்கமாக ஓரமாக செல்லும் போது அதே திசையில் பின்னால் 1-ம் எதிர்மனுதாரருக்கு சொந்தமான வாகனமான TN 39 U 1082 HERO HONDA PASSION என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மேலபாலையூர் கிராமத்தைச் சார்ந்த மலர்மன்னன் என்பவர் அதிவேகமாகவும்¸ அஜாக்கிரதையாகவும்¸ ஆரன் அடிக்காமலும் வாகனத்தை முந்தி செல்ல ஓட்டி வந்து முன்னால் சென்ற மனுதாரரின் வாகனத்தின் வலது பக்க கண்ணாடியில் மோதியதில் இதில் மனுதாரரின் அம்மா கலைச்செல்வி என்பவரும்¸ ஜெயராமன் என்பவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயராமன் என்பவருக்கு வலது கை பின்புறம் சிராய்ப்பு காயமும்¸ வலது குதிகால் மேல்பகுதியில் சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. கலைச்செல்வி என்பவர் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையின் பின்புறத்தில் பலத்த அடிபட்டு ரத்தகாயம் ஏற்பட்டது. முதல் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருச்சிக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டார். மேற்படி இறந்த கலைச்செல்வி என்பவர் விவசாய வேலை செய்வதன் மூலமும்¸ பால் வியாபாரம் செய்வதன் மூலமும் மாதம் ரூ.15¸000/- க்கு குறையாமல் வருமானம் ஈட்டி வந்தார். இறந்த கலைச்செல்வி என்பவருக்கு மனுதாரர் மட்டுமே வாரிசு ஆவார். மேற்படி விபத்திற்கு 1-ம் எதிர்மனுதாரர் வாகனத்தின் ஓட்டுனரது கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையே காரணமாகும். 2-ம் எதிர்மனுதாரர் விபத்தை ஏற்படுத்தியவர் ஆவார். ஆகையால்¸ 1¸ 2 எதிர்மனுதாரர்கள் தனித் தனியாகவோ¸ கூட்டாகவோ மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். ஆகவே¸ மனுதாரருக்கு 1¸ 2 எதிர்மனுதாரர்கள் இழப்பீடாக ரூ.15¸00¸000/-ஐக் கொடுக்க உத்தரவிடக் கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. பிரதிவாதி தரப்பில் தோன்றாத் தரப்பினராகி எதிருரை தாக்கல் செய்யப்படவில்லை.

4. இம்மனுவில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பின்வருமாறு ஆகும்.
1. விபத்து 2ம் எதிர்மனுதாரான வாகன ஓட்டுனரின் கவனக்குறைவாலும்¸ அஜாக்கிரதையாலும் தான் நடைபெற்றுள்ளதா?
2. எதிர்மனுதாரர்கள்¸ மனுதாரருக்கு உரிய இழப்பீட்டை அளிக்க கடமைப்பட்டவர்களா?
3. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் மனுதாரருக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகை கிடைக்கக் கூடியது?

5. மனுதாரர் தரப்பில் மனுதாரர் பகுத்தறிவு ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். .சா..1 முதல் ம.சா..5 வரை சான்றவாணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்கள் வருகையின்றி தோன்றாத் தரப்பினராக தீர்மானிக்கபட்டார்கள்.

6. பிரச்சினை எண் 1-க்கு தீர்வு: இவ்வழக்கின் மனுதாரர் ம.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். .சா.1 தனது நிரூபண வாக்குமூலத்தில் 25.06.2013 அன்று தனது தாயார் கலைச்செல்விக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் ம.சா.1 தனது தரப்பு சான்றாவணமாக தாக்கல் செய்துள்ள ம.சா..1 முதல் தகவலறிக்கையின் உண்மை நகலை பார்வையிடுகையில் ஜெயராமன் என்பவர் விபத்து குறித்து புகார் கொடுத்து அதன் பேரில் ம.சா..1 முதல் தகவலறிக்கை பெண்ணாடம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. .சா..1 முதல் தகவலறிக்கை உண்மை நகலை பரிசீலனை செய்ததில் விபத்தில் இறந்த கலைச்செல்வி என்பவரை வைத்து ஜெயராமன் என்பவர் TN.31 AL 4568 என்ற இருசக்கர வாகனத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். வாகனத்தின் பின்புறம் இறந்த கலைச்செல்வி அமர்ந்து பயணித்துள்ளார். அவர்களுக்கு பின்னால் வந்த TN 39 U 1082 என்ற இருசக்கர வாகனம் அவர்களது வாகனத்தின் வலது பக்க கண்ணாடியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இறந்த நபருடன் விபத்துகுள்ளான வாகனத்தை ஓட்டிச்சென்ற ஜெயராமன் என்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் ம.சா.1-ன் மூலமாக தாக்கல் செய்த சான்றாவணமான மா.சா..4 பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் ம.சா.1 ன் சாட்சியம் மற்றும் இதர சான்றாவணங்களிலிருந்து¸ இவ்வழக்கு விபத்தின் காரணமாக கலைச்செல்வி என்பவர் இறந்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. இவ்வழக்கில் இரண்டு எதிர்மனுதாரர்களும் வழக்கில் தோன்றா தரப்பினர்களாக இருந்து வருவதால் எதிர்மனுதாரர்கள் தரப்பில் ம.சா.1 ன் சாட்சியம் மறுதளிக்கப்படாமல் இருக்கிறது. .சா..2 மோட்டார் வாகன ஆய்வறிக்கையை பரிசீலனை செய்ததில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டிய 2-ம் எதிர்மனுதாரர் மலர்மன்னனின் வாகன ஒட்டுனர் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இச் சங்கதி அவருக்கு உரிய ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதையே காட்டுகிறது. மனுதாரர் ம.சா.1 ன் சாட்சியத்தையும்¸ சான்றாவணங்களையும் ஒரு சேர பார்க்கையில் வழக்கு விபத்தானது 2-ம் எதிர்மனுதாரரின் அஜாக்கிரதை காரணமாகவே நடந்தது என்று முடிவு செய்வதற்கு ஆதரவாகவே இருக்கிறது. ஆக¸ வழக்கு விபத்தானது 2-ம் எதிர்மனுதாரரின் கவனக் குறைவு மற்றும் அஜாக்கிரதையால் தான் ஏற்பட்டது என்று பிரச்சனை 1 க்கு தீர்வு காணப்படுகிறது.

7. பிரச்சினை எண் 2-க்கு தீர்வு: இவ்வழக்கு முதல் எதிர்மனுதாரர் வழக்கு விபத்துக்கு காரணமான வாகனத்தின் உரிமையாளர் ஆவார். வழக்கு விபத்தை ஏற்படுத்திய வாகனத்திற்குரிய காப்பீடு சான்றை மோட்டார் வாகன ஆய்வாளரின் ஆய்வின் போது சமர்ப்பிக்கப்படவில்லை என்பது ம.சா..2 மோட்டார் வாகன ஆய்வறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இச்சங்கதியானது வாகனத்திற்கு விபத்து சமயத்தில் உரிய காப்பீடு சான்றிதழ் இல்லை என்பதையே உறுதி செய்கிறது. ஆகையால்¸ முதல் மற்றும் 2-ம் எதிர்மனுதாரர்கள் கூட்டாகவும்¸ தனித் தனியாகவும் மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க கடமைப்பட்டவர்கள் என்று பிரச்சினை எண் 2க்கு தீர்வு காணப்படுகிறது.

8. பிரச்சினை எண் 3-க்கு தீர்வு: மனுதாரர் ம.சா.1 பகுத்தறிவு தனது சாட்சியத்தில் தனது தாயார் பால் வியாபாரம் மற்றும் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளார் என்று சாட்சியம் அளித்துள்ளார். அதைத் ஒத்திசைவு செய்து பிற வாய் வழி சாட்சியங்களும் சான்றாவணங்களும் இல்லாத சு10ழ்நிலையில் இறந்த கலைச்செல்வியின் மாத வருமானம் ரூ.4¸500/- என்று முடிவு செய்யப்பட்டு¸ இறந்த நபரின் செலவுக்காக மாதம் ரூ.1500/- என்று கணக்கிடப்பட்டு கழிக்கப்பட்டு அவரது மாத வருமானம் ரூ.3¸000/- என்று முடிவு செய்யப்படுகிறது. Sarla Verma V. delhi transport Corporation 2009(2) TN MAC 1 (SC) மேதகு உச்ச நீதிமன்றம் வகுத்த கோட்பாடுகளின் படி இவ்வழக்கு விபத்தில் இறந்த கலைச்செல்வியின் வயது 38 என்று வழக்கு சான்றாவணங்களில் குறிப்பிட்டுள்ளதை கணக்கில் கொண்டு¸ அவரது இறப்பினால் ஏற்படும் வருமான இழப்பாக 3000 x 12 x 15 = 5,40,000/- என்று கணக்கிடப்பட்டு அவ்வாறே முடிவு செய்யப்படுகிறது. ஈமச்சடங்கு செலவிற்காக ரூ.10,000/- ம் அன்பு மற்றும் பாசத்திற்கான இழப்பிற்காக ரூ.10,000/- ஆக மொத்தம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5,60,000/- 1¸2 எதிர்மனுதாரரிடமிருந்து கிடைக்கக் வேண்டியது என்று பிரச்சனை எண் 3க்கு முடிவு காணப்படுகிறது.

9. முடிவாக¸ மனுதாரர்க்கு 1.2 எதிர்மனுதாரர்கள் இழப்பீடாக ரூ.5,60,000/-ஐ கொடுக்க வெண்டுமென்றும். மேற்படி தொகையை மனுத்தேதி முதல் முழுத்தொகை செலுத்தும் வரை ஆண்டுக்கு 7.5% வட்டி சேர்த்து மூன்று மாதத்திற்குள் இந்நீதிமன்றத்தில் செலுத்த வெண்டுமென்றும். அத்தொகையில் வழக்கறிஞர் ஊதியமாக ரூ.10,000,/-ஐ மனுதாரர் வழக்கறிஞர் தனிக்காசோலை மூலமாக இந்நீதிமன்றத்திலிருந்து பெற வெண்டுமென்றும். மீதித்தொகையில் 50 சதவீதத் தொகையை மனுதாரர் உடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மீதி 50 சதவீதத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டுமென்றும்¸ இழப்பீட்டிற்குரிய நீதிமன்றக்கட்டண பாக்கியை மனுதாரர் 10 தினங்களுக்குள் இந்நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டு¸ அவ்வாறே இம்மனு செலவுத்தொகையுடன் பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

என்னால் சுருக்கெழுத்து தட்டச்சருக்கு வாய்மொழியாக சொல்லப்பட்டு¸ அவரால் நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு¸ என்னால் சரிபார்த்து பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு¸ 2015ம் ஆண்டு நவம்பர் திங்கள் 17ம் நாளாகிய இன்று இத்தீர்ப்பு என்னால் அவையறியப் பகரப்பட்டது.
-ஒம்- நா. சுந்தரம்.
கூடுதல் தீர்ப்பாய நீதிபதி¸
விருத்தாசலம்.

No comments:

Post a Comment