12.7.16

தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2) (i) பிரிவு 10(2)(vii) மற்றும் பிரிவு 14(1)

வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றம்¸ மதுரை தாலுகா¸ மதுரை
( மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மதுரை தாலுகா¸ மதுரை)
முன்னிலை. திரு. வீ. ஆறுமுகம்¸ பி.எல்
வாடகைக் கட்டுப்பாட்டு நீதிபதி
( மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ மதுரை தாலுகா¸ மதுரை)
2015ம் ஆண்டு ஜனவரி திங்கள் 09 ஆம் நாள் - வெள்ளிக்கிழமை
வாடகைக் கட்டுப்பாட்டு அசல் மனு எண். 2/2011

கிருஷ்ணமூர்த்தி
மேற்படியாரின் பிரதிநிதி அதிகார முகவர்
சுலைமான் த/பெ S.P. நாகூர்பிச்சை மூலமாக ... மனுதாரர் / நிலச்சுவான்தாரர்
எதிராக
பாலாஜி வெங்கடேசன் ... எதிர்மனுதாரர் / வாடகைதாரர்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

இம்மனுதாரர் தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2) (i) பிரிவு 10(2)(vii) மற்றும் பிரிவு 14(1)ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டு மனு சொத்திலிருந்து எதிர்மனுதாரரை/வாடகைதாரரை வெளியேற்ற உத்திரவிட கோரி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

2). மனுதாரர் தரப்பு மனுஉரையின் சுருக்கம் பின்வருமாறு:
இம்மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் அதிகாரம் பெற்ற முகவர் ஆவார். மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மனு சொத்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1988ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுநாள் முதல் மேற்படி கிருஷ்ணமூர்த்தி மனு கட்டிடத்தில் அமைதியான சுவாதீனத்தில் அனுபவம் செய்துகொண்டு வந்து கடந்த 01.01.2005ம் தேதியில் இவ்வெதிர்மனுதாரரிடம் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கும் நோக்கத்திற்காக மாதம் ரூ.500/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு பிரதிமாதம் 8ம் தேதிக்குள் வாடகை செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. முன்தொகையாக ரூ.500/- பெற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட வாடகை ஒப்பந்தப்படி 31.12.2006ம் தேதி வரை வாடகை ஒப்பந்த காலம் நிர்ணயித்துக்கொள்ளப்பட்டது. இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியேறிய நாள்முதல் மனு கட்டிடத்திற்குரிய மாத வாடகையை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியே செலுத்திக்கொண்டு வந்தார். வாடகை ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னர் தாவா சொத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை மேற்படி கிருஷ்ணமூர்த்தி வெளியேற கூறினார். ஆனால் இவ்வெதிர்மனுதாரர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதின் பேரில் மார்ச் 2007ம் தேதி வரை வாய்மொழியாக காலநீட்டிப்பு செய்யப்பட்டது. அப்போது மனுதாரரால் கொடுத்த முன்தொகை ரூ.500/-ஐ இவ்வெதிர்மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது. மார்ச் 2007ம் தேதிமுதல் இவ்வெதிர்மனுதாரர் கூறியபடி தாவா சொத்திலிருந்து காலி செய்யாமல் தொடர்ந்து குடியிருந்து கொண்டு வந்தார். மேற்கண்ட மார்ச் 2007ம் தேதியிலிருந்து எவ்வித வாடகை தொகையும் செலுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக இவ்வெதிர்மனுதாரர் குடியிருந்து கொண்டு வந்தார். இந்நிலையில் மனு கட்டிடத்தை பொறுத்து இம்மனுதாரரான சுலைமான் என்பவருக்கு மேற்படி கிருஷ்ணமூர்த்தி 14.09.2009ம் தேதியில் பொதுஅதிகார பத்திரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். மேற்கண்ட பத்திரத்தின்படி தாவா சொத்தை பொறுத்து அனைத்து நடவடிக்கைகளையும் கிருஷ்ணமூர்த்தி சார்பாக மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது. மேற்கொண்டு இம்மனுதாரர் எதிர்மனுதாரரிடம் தாவா மனு கட்டிடத்தை காலி செய்ய கோரியும்¸ காலி செய்யாமல் இருந்து கொண்டுவந்து எவ்வித வாடகை பணமும் செலுத்தாமல் குடியிருந்துகொண்டு வந்தார். மேலும் மனு கட்டிடம் அமைந்த இடத்தின் மொத்த விஸ்தீரணம் 5 ½ சென்ட் என்றும் அதில் 350 சதுரஅடி பரப்பளவுக்கு எதிர்மனுதாரருக்கு விடப்பட்டுள்ள மனு கட்டிடம் உள்ளது. இம்மனுதாரர் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் மீதமுள்ள இடத்தில் வைத்து ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கலை பண்பாடு மற்றும் நடனகலை பயிற்சியும் அளித்து வந்தார். மேற்கண்ட கட்டிடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து அதில் கார் செட்டும் மேடைகளும் அமைத்து ஆர்வம் உள்ள மாணாக்கர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்தார். இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வந்து வாடகை கொடுக்காமல் அங்கு பயில வரும் மாணாக்கர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் வீண் தொந்தரவுகளை கொடுத்து வந்தார். மேற்கொண்டு இவ்வெதிர்மனுதாரரை தாவா கட்டிடத்திலிருந்து காலிசெய்ய கோரிய போது அடியாட்களை வைத்துக்கொண்டு இம்மனுதாரரை மிரட்டியதாகவும் இதுசம்பந்தமாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட எதிர்மனுதாரர் தாவா சொத்துக்கு உண்டான மாத வாடகையையும் வாடகை பாக்கியையும் கொடுக்காமல் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து கொண்டு அனுபவம்செய்து வருவதால் மனு கட்டிடத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை வெளியேற வேண்டுமென உத்திரவிடகோரி இம்மனுதாரர் கோரியுள்ளார்.

3). எதிர்மனுதாரர் தரப்பு எதிருரையின் சுருக்கம் பின்வருமாறு:
தாவா சொத்தானது இவ்வெதிர்மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கடந்த 01.01.2005ம் தேதியில் தாவா கட்டிடத்தில் குடியிருப்பு நோக்கத்திற்காக வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன்படி மாத வாடகை ரூ.5000/- என நிர்ணயிக்கப்பட்டு முன்தொகையாக ரூ.5000/- மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு கொடுக்கப்பட்டது. வாடகை ஒப்பந்த காலம் 31.12.2006 என நிர்ணயிக்கப்பட்டது. தாவா கட்டிடத்திற்குரிய மின்கட்டணம் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இவ்வெதிர்மனுதாரர் தாவா சொத்துக்குண்டான மாத வாடகையை தொடர்ந்து செலுத்திக்கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு உரிய ரசீதுகள் எதுவும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி இவ்வெதிர்மனுதாரர்வசம் கொடுக்கவில்லை. மனுதாரர் மனுவில் கூறியதுபோல் மனு கட்டிடத்திற்கு அருகில் எவ்வித கலை மற்றும் பண்பாட்டு துறை வகுப்புகள் எதுவும் நடைபெறவிலவ்லை. இவ்வெதிர்மனுதாரர் மேற்படி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பொது அதிகாரம் பெற்றுள்ளது இந்த எதிர்மனுதாரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு தாவா சொத்தின் உண்மையான உரிமையாளர் அல்ல என்பதால் அதனைப் பொறுத்து பொது அதிகாரம் கொடுக்க எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே பவர் பத்திரத்தின் அடிப்படையில் இம்மனுதாரர் இம்மனுவை தாக்கல் செய்து அதன் மூலம் இந்த எதிர்மனுதாரரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற கோர எவ்வித உரிமையும் ஏற்படவில்லை. மேற்படி கிருஷ்ணமூர்த்தி மனுக்கட்டிடத்தை இந்த எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக கூறியதின்பேரில் ரூ.1 ½ லட்சம் கிரைய முன்தொகையாக மனுதாரர்வசம் கொடுக்கப்பட்டது. அதற்குரிய ஆவணத்தை எழுதிக்கேட்டபோது மனுக்கட்டிடமானது எதிர்மனுதாரர் வசம் உள்ளதால் தான் எவ்வித மறுப்பும் சொல்ல போவதில்லை என மனுதாரர் உறுதிகூறி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தாவா சொத்தினை இந்த எதிர்மனுதாரருக்கு கிரையம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை நம்பியிருந்தார். ஆனால் இம்மனுதாரர் மேற்கண்ட உண்மைகளை மறைத்து மனு கட்டிடத்திற்குரிய வாடகையை இந்த எதிர்மனுதாரர்¸ வேண்டுமென்றே வேண்டும் என்றே செலுத்தாமல் இருந்து வருகிறார் என்ற பொய்யான சங்கதிகளை கொண்டு இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற இம்மனுவை தாக்கல் செய்தள்ளார். எனவே மனுதாரரின் மனு செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என எதிருரையில் கூறப்பட்டது.

4). இந்த மனுவில் ஆய்வுக்குரிய பிரச்சினை யாதெனில்:
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனு அனுமதிக்கத்தக்கதா என்பதே ஆகும்.

5). இந்த மனுவில் மனுதாரர்/நிலச்சுவான்தாரர் தரப்பில் மனுதாரரின் அதிகாரம் பெற்ற முகவரான சுலைமான் என்பவர் ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டு ம.சா..1 முதல் 7 வரையான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிர்மனுதாரர்/வாடகைதாரர்தரப்பில் எதிர்மனுதாரர் எ..சா.1ஆகவும்¸ E. இளமதி என்பவர் எ..சா.2ஆகவும்¸ G. ராஜசேகர் என்பவர் எ..சா.3ஆகவும்¸ G.மீனாட்சிசுந்தரம் என்பவர் எ..சா.4ஆகவும் விசாரிக்கப்பட்டு எ..சா..1 முதல் 5 வரையான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

6. மனுக்கட்டிடமானது மனுவின்படி மதுரை மாவட்டம் ஆணையூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் காலனி¸ கதவு எண். MIG 122 ஆகும்.

7. பிரச்சினை 1:
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அனுமதிக்கத்தக்கதா? இருதரப்பு வாதங்கள் கேட்கப்பட்டது. ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது.

8. மனுதாரர்தரப்பு வாதுரையில் இம்மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் அதிகாரம் பெற்ற முகவர் என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மனு சொத்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1988ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதுநாள் முதல் மேற்படி கிருஷ்ணமூர்த்தி மனு கட்டிடத்தில் அமைதியான சுவாதீனத்தில் இருந்து அனுபவம் செய்துகொண்டு வந்து கடந்த 01.01.2005ம் தேதியில் இவ்வெதிர்மனுதாரரிடம் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கும் நோக்கத்திற்காக மாதம் ரூ.500/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு பிரதிமாதம் 8ம் தேதிக்குள் வாடகை செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது என்றும் முன்தொகையாக ரூ.500/- பெற்றுக்கொள்ளப்பட்டது என்றும் மேற்கண்ட வாடகை ஒப்பந்தப்படி 31.12.2006ம் தேதி வரை வாடகை ஒப்பந்த காலம் நிர்ணயித்துக்கொள்ளப்பட்டது என்றும் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியேறிய நாள்முதல் மனு கட்டிடத்திற்குரிய வாடகையை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியே செலுத்திக்கொண்டு வந்தார் என்றும் வாடகை ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னர் தாவா சொத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை மேற்படி கிருஷ்ணமூர்த்தி வெளியேற கூறினார் என்றும் ஆனால் இவ்வெதிர்மனுதாரர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதின் பேரில் மார்ச் 2007ம் தேதி வரை காலநீட்டிப்பு வாய்மொழியாக செய்யப்பட்டது என்றும் இவ்வெதிர்மனுதாரர் கொடுத்த முன்தொகை ரூ.500/-ஐ திருப்பிக் கொடுக்கப்பட்டது என்றும் மார்ச் 2007ம் தேதிமுதல் இவ்வெதிர்மனுதாரர் கூறியபடி தாவா சொத்திலிருந்து காலி செய்யாமல் தொடர்ந்து குடியிருந்து கொண்டு வந்தார் என்றும் ஆனால் மேற்கண்ட மார்ச் 2007ம் தேதியிலிருந்து எவ்வித வாடகை தொகையும் செலுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக இவ்வெதிர்மனுதாரர் குடியிருந்து கொண்டு வந்தார் என்றும் இந்நிலையில் மனு கட்டிடத்தை பொறுத்து இம்மனுதாரரான சுலைமான் என்பவருக்கு மேற்படி கிருஷ்ணமூர்த்தி 14.09.2009ம் தேதியில் பொதுஅதிகார பத்திரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார் என்றும் மேற்கண்ட பத்திரத்தின்படி தாவா சொத்தை பொறுத்து அனைத்து நடவடிக்கைகளையும் கிருஷ்ணமூர்த்தி சார்பாக மேற்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது என்றும் மேற்கொண்டு இம்மனுதாரர் எதிர்மனுதாரரிடம் தாவா மனு கட்டிடத்தை காலி செய்ய கோரியும் காலி செய்யாமல் இருந்து கொண்டுவந்து எவ்வித வாடகை பணமும் செலுத்தாமல் குடியிருந்துகொண்டு வந்தார் என்றும் மேலும் மனு கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் மொத்த விஸ்தீரணம் 5 ½ சென்ட் என்றும் அதில் 350 சதுரஅடி பரப்பளவுக்கு எதிர்மனுதாரருக்கு விடப்பட்டுள்ள மனுகட்டிடம் உள்ளது என்றும் மீதமுள்ள பகுதியில் இம்மனுதாரர் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கலை பண்பாடு மற்றும் நடனகலை பயிற்சியும் அளித்து வந்தார் என்றும் மேற்கண்ட கட்டிடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து அதில் கார் செட்டும் மேடைகளும் அமைத்து ஆர்வம் உள்ள மாணாக்கர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்தார் என்றும் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வந்து வாடகை கொடுக்காமல் அங்கு பயில வரும் மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வீண் தொந்தரவுகளை கொடுத்து வந்தார் என்றும் மேற்கொண்டு இவ்வெதிர்மனுதாரர் தாவா கட்டிடத்திலிருந்து காலிசெய்ய கோரிய போது அடியாட்களை வைத்துக்கொண்டு இம்மனுதாரரை மிரட்டியதாகவும் இதுசம்பந்தமாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது என்றும் மேற்கொண்ட எதிர்மனுதாரர் தாவா சொத்துக்கு உண்டான எவ்வித வாடகையையும் வாடகை பாக்கியையும் கொடுக்காமல் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து கொண்டு அனுபவம்செய்து வருவதால் மனு கட்டிடத்திலிருந்து இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற கோரி தாக்கல் செய்துள்ள இம்மனுவை அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

9. எதிர்மனுதாரர்தரப்பு வாதுரையில் தாவா சொத்தானது இவ்வெதிர்மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஎன்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கடந்த 01.01.2005ம் தேதியில் தாவா கட்டிடத்தில் குடியிருப்பு நோக்கத்திற்காக வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்றும் அதன்படி மாத வாடகை ரூ.500/- என நிர்ணயிக்கப்பட்டு முன்தொகையாக ரூ. 5¸000/- மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு கொடுக்கப்பட்டது என்றும் வாடகை ஒப்பந்த காலம் 31.12.2006 என நிர்ணயிக்கப்பட்டது என்றும் தாவா கட்டிடத்திற்குரிய மின்கட்டணம் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது என்றும் இவ்வெதிர்மனுதாரர் தாவா சொத்துக்குண்டான வாடகையை முறையாக செலுத்திக்கொண்டு வருவதாகவும் ஆனால் அதற்கு உரிய பணவரவு ரசீதுகள் எதுவும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி இவ்வெதிர்மனுதாரர்வசம் கொடுக்கவில்லை என்றும் மனுதாரர் மனுவில் கூறியதுபோல் மனு கட்டிடத்திற்கு அருகில் எவ்வித கலை மற்றும் பண்பாட்டு துறை வகுப்புகள் எதுவும் நடைபெறவிலவ்லை என்றும் இவ்வெதிர்மனுதாரர் மேற்படி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பொது அதிகாரம் பெற்றுள்ளது இந்த எதிர்மனுதாரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு மனுச் சொத்தின் உண்மையான உரிமையாளர் அல்ல என்றால் மனுக்கட்டிடத்தை பொறுத்து பொது அதிகாரம் எழுதிக்கொடுக்க எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை என்றும் ஆகவே பவர் பத்திர அடிப்படையில் இம்மனுதாரர் இம்மனுவை தாக்கல் செய்து அதன் மூலம் இந்த எதிர்மனுதாரரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற கோர எவ்வித உரிமையும் ஏற்படவில்லை என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனுக்கட்டிடத்தை இந்த எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக கூறியதின்பேரில் ரூ.1 ½ லட்சம் கிரைய முன்தொகையாக மனுதாரர்வசம் கொடுக்கபப்ட்டது என்றும் மனுக்கட்டிடமானது எதிர்மனுதாரர் வசம் உள்ளதால் எவ்வித ஆவணமும் எழுதிக்கொள்ள தேவையில்லை என மனுதாரர் உறுதிகூறி கிருஷ்ணமூர்த்தி வந்தவுடன் அவர் முன்னிலையில் தாவா சொத்தினை இந்த எதிர்மனுதாரருக்கு கிரையம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை நம்பியிருந்ததாகவும்¸ ஆனால் இம்மனுதாரர் மேற்கண்ட உண்மைகளை மறைத்து மனு கட்டிடத்திற்குரிய வாடகையை இந்த எதிர்மனுதாரர் வேண்டுமென்றே செலுத்தாமல் இருந்து வருகிறார் என பொய்யான சங்கதிகளை கொண்டு இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற வேண்டுமென இம்மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் ஆகவே மனுதாரரின் மனுவை செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

10. மனுதாரர்தரப்பில் மனுதாரர் சுலைமான் ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஆவர் தன்னுடைய விசாரணையின்போது மனு கட்டிடத்தை பொறுத்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் இம்மனுதாரருக்கு எழுதிக்கொடுத்த பதிவு செய்யப்பட்ட பொது அதிகார பத்திரம் ம.சா..1 என்றும் மனு சொத்தை பொறுத்து மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் வழங்கப்பட்ட குடிநீர் கட்டண ரசீது ம.சா..2. என்றும் இம்மனுதாரர் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரின் நகல் ம.சா..3. என்றும் மனு கட்டிடத்தை பொறுத்து மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஏற்பட்ட சொத்து வரி ரசீது ம.சா..4 மற்றும் 6 என்றும் மனு கட்டிடத்தை வாங்குவதற்கு அரசு துறையிடமிருந்து மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெற்ற மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் ம.சா..5 என்றும் மனு கட்டிடத்தை பொறுத்து மின்இணைப்பு எண்ணை மாற்றம் செய்துகொள்ள மனுதாரரின் முதல்வருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி கழக அதிகாரி கொடுத்த சான்றிதழ் ம.சா..7 என்றும் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

11. எதிர்மனுதாரர்தரப்பில் இந்த எதிர்மனுதாரர் /வாடகைதாரர் எ..சா.1ஆக விசாரிக்கபப்ட்டுள்ளார். மனு கட்டிடத்தை பொறுத்து உதவி பொறியாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பவரின் பெயரில் ஏற்பட்ட மின் இணைப்பு கட்டண ரசீது எ..சா..1ஆகவும் மனு கட்டிடத்திற்கு மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட கடிதம் எ..சா..2 என்றும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. E.இளமதி என்பவர் எ..சா..2ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையின்போது தாவா சொத்தில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை செய்ததாகவும் அதற்குரிய உத்தேச மதிப்பு சான்றிதழ் எ..சா..3 என்றும் கட்டிடத்தில் பணி செய்தமைக்காக தான்பெற்ற ரொக்க ரசீது எ..சா..4 என்றும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்தரப்பில் G.ராஜசேகரன் என்பவர் எம.சா.3ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் மனு கட்டிடத்தில் இவ்வெதிர்மனுதாரர் வாடகைக்காக குடியிருந்து கொண்டு வருவதாகவும் அவ்வாறு குடியிருந்து கொண்டு வந்த போது மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு விற்கபோவதாக கூறி முன்தொகையாக ரூ.1¸50¸000/- மனுதாரர் பெற்றுக்கொண்டதாகவும் மேற்கண்ட சங்கதிகள் யாவும் தனக்கு தெரியும் என்றும் சாட்சியமளித்துள்ளார். ..சா.4ஆக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையின்போது மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மனு கட்டிடத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்திரவின் நகலினை எ..சா..5ஆக தாக்கல் செய்து குறியீடு செய்துள்ளார்.

12. மனு கட்டிடமானது ஆணையூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியில் உள்ள M.22 என்ற கட்டிடம் ஆகும். மேற்கண்ட கட்டிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு இம்மனுதாரரின் முதல்வாரன கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 1988ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் மனு கட்டிடத்தில் இந்த எதிர்மனுதாரர் கடந்த 1.1.2005ம் தேதியில் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தம் மூலம் குடியிருப்பு நோக்கத்திற்கு வாடகைதாரராக இருந்து குடியிருந்து கொண்டு வருகிறார் என்றும் இருதரப்பிலும ஒப்புக்கொள்ளப்பட்டது.

13. இம்மனுதாரர் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கட்டிட உரிமையாளர் என்பதும் இந்த எதிர்மனுதாரர் பாலாஜி வெங்கடேசன் கட்டிடத்தின் வாடகைதாரர் என்பதும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

14. இந்த எதிர்மனுதாரர் கடந்த 01.01.2005ல் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தப்படி வாடகை ஒப்பந்த காலமானது 31.12.2006 தேதியுடன் முடிவு பெற்றது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

15. 2007ம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து இதுநாள்வரை இந்த எதிர்மனுதாரர் தாவா கட்டிடத்திற்குரிய வாடகையை மனுதாரருக்கு செலுத்திக்கொண்டு வருகிறாரா என்பதை நீதிமுறையில் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.

16. மனுதாரர்தரப்பில் மனுதாரர் ம.சா.1ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் 01.01.2005ம் தேதியில் வாடகை ஒப்பந்தப்படி இந்த எதிர்மனுதாரர் பிரதிஆங்கில மாதம் 8ம் தேதிக்குள் ரூ.500/- செலுத்தவேண்டும்¸ மின்கட்டணம் குடிநீர் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் தன்னுடைய முதல்வர் கிருஷ்ணமூர்த்தியிடம் முன்பணமாக ரூ.500/- செலுத்தப்பட்டது என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எதிர்மனுதாரர் வாடகையை சரிவர செலுத்தவில்லை என்றும் வேண்டுமென்றே வாடகையை இழுத்தடித்து தான் ஒவ்வொரு மாதமும் கட்டிவந்தார் என்றும் தண்ணீர் வரியையும் சொத்து வரியையும் ஒப்பந்தப்படி இவ்எதிர்மனுதாரர் செலுத்தவில்லை என்றும் இம்மனுதாரரே தனது முதல்வர் சார்பாக செலுத்திவந்தார் என்றும் அதற்குண்டான ஆவணங்கள் ம.சா..2¸4¸6 என்றும் வாடகை ஒப்பந்தம் 31.12.2006 முடிந்த பிறகு இந்த எதிர்மனுதாரர் மனு கட்டிடத்திற்குண்டான வாடகையை மனுதாரரிடமோ அல்லது அவரது முதல்வரிடமோ கொடுக்கவில்லை என்றும் தாவா சொத்துக்கு உண்டான முன்பணத்தை மனுதாரரின் முதல்வர் எதிர்மனுதாரரிடம் திருப்பிக்கொடுத்துவிட்டார் என்றும் கடந்த மார்ச் 2007ம் தேதியில் இந்த எதிர்மனுதாரர் தாவா சொத்திலிருந்து காலிசெய்வதாக ஒப்புக்கொண்ட பின்பும் காலிசெய்யவில்லை என்றும் வாடகை கேட்கும்போதெல்லாம் எதிர்மனுதாரர் வேண்டுமென்றே வாடகை தர மறுத்தும் தவிர்த்தும் வந்தார் என்றும் எதிர்மனுதாரர் மார்ச் 2007ம் தேதியிலிருந்து இன்று வரை வாடகை எதுவும் மனுதாரரிடமோ அல்லது மனுதாரரின் முதல்வரிடமோ செலுத்தவில்லை என்றும் இந்த எதிர்மனுதாரர் கூறியது போல் மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு விற்க வேண்டி எவ்வித முன்கிரைய தொகையோ ஒப்பந்தமோ செய்துகொள்ளவில்லை என்றும் எதிர்மனுதாரர் அடியாட்களை வைத்துக்கொண்டு கட்டிடத்திலிருந்து காலி செய்ய சொன்னால் மனுதாரரை காலி செய்துவிடுவோம் என்று மிரட்டியதாகவும் மார்ச் 2007 முதல் வாடகையை தராமல் கட்டிடத்திலிருந்து காலியும் செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்துகொண்டு வருகிறார் என சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

17. .சா.1. தன்னுடைய குறுக்கு விசாரணையின்போது ம.சா.1. தன்னுடைய முதல்விசாரணை வாக்குமூலத்தில் கூறியபடி இவ்எதிர்மனுதாரர் மனுக்கட்டிடத்திற்குரிய வாடகை கொடுக்காத சங்கதிகள் குறித்தோ சட்டத்திற்கு புறம்பாக மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வருகிறார் என்பது குறித்தோ அடியாட்களை வைத்து எதிர்மனுதாரரை மிரட்டியது குறித்தோ மனு கட்டிடத்தை பொறுத்து எதிர்மனுதாரர் பெயரில் ஏற்பட்டதாக சொன்ன கிரைய முன்தொகை குறித்தோ எவ்வித ஆட்சேபனை கேள்விகளும் எதிர்மனுதாரர்தரப்பில் எழுப்பப்படவில்லை.

18. மனுதாரர்தரப்பு ம.சா..2 ஆவணமானது மனு கட்டிடத்திற்குண்டான குடிநீர் கட்டணமாக மனுதாரரின் முதல்வரின் பெயரில் செலுத்தப்பட்டு மனுதாரரின் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு கட்டிடத்திற்குண்டான சொத்து வரி ரசீது ம.சா..4. .மற்றும் 6 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனுதாரர்¸ எதிர்மனுதாரர்தரப்பில் மனு கட்டிடத்திற்குண்டான மனுக் கட்டிடத்திற்குண்டான தண்ணீர் கட்டணம்¸ சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றையும் எதிர்மனுதாரரே செலுத்திக்கொண்டு வரவேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. மனுதாரர் தன்னுடைய மனுவிலும் முதல்விசாரணையின்போது எதிர்மனுதாரர் தாவா கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு வந்து மார்ச் 2007ம் தேதி முதல் மனு கட்டிடத்திற்குண்டான வாடகை செலுத்தவில்லை என்றும் தண்ணீர் மற்றும் சொத்து வரிகளும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அதை நிரூபணம் செய்யும் வகையில் மனுதாரர்தரப்பில் ம.சா..2¸ 4 மற்றும் 6 ஆவணங்களாக குடிநீர்¸ சொத்து வரி இரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டது. .சா..2¸4¸ 6 ஆவணங்களின்படி மனு கட்டிடத்திற்குண்டான வாடகை ஒப்பந்தப்படி எதிர்மனுதாரர் தண்ணீர் மற்றும் சொத்து வரிகள் செலுத்திக்கொண்டு வரவில்லை என்பதும் இவ்வெதிர்மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் செலுத்திக்கொண்டு வந்தார் என்பதும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

19. எதிர்மனுதாரர்தரப்பு விசாரணையின்போது தாவா கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே மனு கட்டிடத்தை எதிர்மனுதாரருக்கு விற்பனை செய்யபோவதாக உறுதிக்கொடுத்ததன் பேரில் தாவா சொத்துக்குண்டான கிரையதொகை ரூ. 2லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு ரூ. 1¸50¸000/- முன்தொகையாக இந்த எதிர்மனுதாரரால் மனுதாரர் சுலைமானுக்கு கொடுத்ததாகவும் ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் எழுதி வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார். ..சா.1. தன்னுடைய குறுக்கு விசாரணையில் 01.01.2005ம் தேதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வந்ததாகவும் வாடகை மாதம் ரூ.500/- கொடுத்ததாகவும் தாவா கட்டிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கிருஷ்ணமூர்த்தியை தவிர வேறு யாரும் தன்னிடம் வாடகை கேட்கவில்லை என்றால் சுலைமான் என்பவர் வாடகை கேட்டார் என்றும் அவரிடம் கொடுக்கவில்லை என்றும் கடைசியாக யாரிடம் எவ்வளவு வாடகை கொடுக்கப்பட்டது என்று ஞாபகம் இல்லை என்றும் ரூ.2லட்சம் கிரையம் பேசியதற்கு ஒப்பந்தம் எதுவும் எழுதிக்கொள்ளவில்லை என்றும் மேற்படி கிரையம் செய்து கொடுக்காததால் அதனை நிறைவேற்ற ஏற்றதை ஆற்றுக பரிகாரம் கோரி வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் தாவா சொத்தை பொறுத்து வாடகை செலுத்தியதற்கான ரசீது எதுவும் வாங்கவில்லை என்றும் வாடகை கொடுத்ததற்கான அத்தாட்சி கூட வாங்கவில்லை என்றும் தற்போது தாவா வீட்டினை பொறுத்து கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிரையம் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் சுலைமான் மேற்படி கிருஷ்ணமூர்த்தியின் பவர் ஏஜன்டாக உள்ளார் என்றும் மனு கட்டிடத்தில் குடியிருந்துகொண்டு வருவதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

20. மேலும் எ..சா.1 தன்னுடைய குறுக்கு விசாரணையில் தாவா கட்டிடத்தை புனரமைப்பு செய்வதற்கு கட்டிட உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடமோ அவரது அதிகாரம் பெற்ற முகவர் சுலைமானிடமோ எவ்வித ஒப்புதலும் பெறவில்லை என்றும் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்திற்கு குடிவந்த நாள்முதல் மனுதாரருக்கு எவ்வித வாடகையும் தரவில்லை என்றால் சரிதான் என்றும் குடிநீர் கட்டணம் செலுத்திக்கொண்டு வருவதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

21. மனுதாரர்தரப்பில் மனு கட்டிடத்திற்குரிய வாடகை தொகையை இந்த எதிர்மனுதாரர் கடந்த மார்ச் 2007ம் தேதி முதல் மனுதாரருக்கோ அல்லது மனுதாரரின் முதல்வரான கிருஷ்ணமூர்த்திக்கோ கொடுக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்துகொண்டு வந்து சட்டத்திற்கு புறம்பாக மனு கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் என்றும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. வாடகைதாரர்தரப்பு விசாரணையிலும் 31.12.2006ம் தேதியில் மனுதாரர் வாடகை பணம் கேட்டும் தான் கொடுக்கவில்லை என்றும் கடைசியாக எப்போது வாடகை கொடுத்தேன் என்று ஞாபகம் இல்லை என்றும் வாடகை கொடுத்தமைக்கான அத்தாட்சி எதுவும் தான் வாங்கவில்லை என்றும் மனு கட்டிடத்திற்கு வாடகைக்கு வந்த நாள்முதல் இந்த இம்மனுதாரர் சுலைமான் வசம் எவ்வித வாடகையும் தரவில்லை என்றும் மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு கடைசியாக எந்த வருடம் வாடகை கொடுத்தேன் என்று ஞாபகம் இல்லை என்றும் சாட்சியமளித்துள்ளார்.

22. மனு கட்டிடத்தை பொறுத்து இவ்வெதிர்மனுதாரர் வாடகை ஒப்பந்த கெடு 31.12.2006ம் தேதிக்கு பின்னரும் காலி செய்யாமலும் அதனை தொடர்ந்து தற்போது வரை இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடத்தில் குடியிருந்து கொண்டு அனுபவம் செய்துகொண்டு வருகிறார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

23. அதே சமயத்தில் மார்ச் 2007ம் தேதி முதல் மனு கட்டிடத்திற்குரிய வாடகை தொகையையோ அல்லது வாடகை பாக்கியையோ இம்மனுதாரரிடமோ அல்லது மனுதாரரின் முதல்வரான கிருஷ்ணமூர்த்தியிடமோ கொடுக்கவில்லை என்பது எ..சா.1 வாடகைதாரர்தரப்பு சாட்சிய மூலம் தெரியவருகிறது.

24. இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய எதிருரையில் மனு கட்டிடமானது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் ஆனால் மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் அப்போது மனு கட்டிடத்தை பொறுத்து கிரைய பத்திரம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தற்போது 2014ம் ஆண்டில் தான் மனு கட்டிடத்தை பொறுத்து கிரைய பத்திரம் இம்மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஏற்பட்டது. ஆகவே 14.09.2009ம் தேதியில் இம்மனுதாரர் பெயருக்கு மனு கட்டிடத்தை பொறுத்து பொது அதிகார பத்திரம் எழுதி பதிவுசெய்து கொடுக்கப்பட்டபோது மனுகட்டிடத்திற்கு கிருஷ்ணமூர்த்தி முழுமையான உரிமையாளர் அல்ல என்றும் மேற்படி கிருஷ்ணமூர்த்தி தனக்கு உரிமையில்லாத மனு கட்டிடத்தை பொறுத்து மனுதாரர் பெயருக்கு எழுதிக்கொடுத்த பொது அதிகார பத்திரம் மூலம் இம்மனுதாரருக்கு எவ்வித உரிமையும் மனு கட்டிடத்தில் எழவில்லை என்றும் ஆகவே இவ்வெதிர்மனுதாரரை வெளியேற்ற மனுத்தாக்கல் செய்ய கோருவதற்கு எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை என வாதிடப்பட்டது.

25. அந்தவகையில் மனுதாரர்தரப்பில் ம.சா.1. தன்னுடைய விசாரணையின்போது மனு கட்டிடமானது 1988ம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெயருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கடந்த 14.09.2009ம் தேதியில் மனு கட்டிடத்தை பொறுத்து அனைத்து சட்ட நடவடிக்கையும் விற்பனை மற்றும் அனைத்து உரிமை மாற்றம் குறித்த நடவடிக்கைகளுக்கும் அதிகாரம் அளித்து பொது அதிகார பத்திரம் எழுதிக்கொள்ளப்பட்டது என்றும் அதன்படி மனு கட்டிடத்தை சுற்றியுள்ள இடத்தில் இம்மனுதாரர் கலை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் சாமான்களை வைத்து மாணாக்கர்களுக்கு கலை பண்பாடு மற்றும் நடனம் குறித்த பயிற்சிகளை அளித்து வந்தார் என்றும் இந்த எதிர்மனுதாரரிடம் மனு கட்டிடத்திற்கு உரிய வாடகையை கேட்டபோது தர முடியாது என மறுத்து அடியாட்களை வைத்து இவ்வெதிர்மனுதாரரை மிரட்டினார் என்றும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. .சா.1. தன்னுடைய குறுக்கு விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அதிகார ஆவணத்தின்படி இம்மனு எதிர்மனுதாரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணமூர்த்திக்கு வீட்டு வசதி வாரியத்தால் மனு சொத்து ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணமூர்த்திக்கும் தனக்கும் 20 வருட காலம் பழக்கம் என்றும் சாட்சியமளித்துள்ளார்.

26. ;ந்த எதிர்மனுதாரர் 01.01.2005ம் தேதியிட்ட வாடகை ஒப்பந்தப்படி மனு கட்டிடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் வாடகைதாரராக இருக்க ஒப்புக்கொண்டு 31.12.2006ம் தேதி வரை வாடகை தொகை செலுத்திக்கொண்டு வந்ததையும் இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவ்வெதிர்மனுதாரர் மனு கட்டிடமானது மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையாக பாத்தியப்பட்டது அல்ல என்றும் ஆகவே மனு கட்டிடத்தை பொறுத்து பொது அதிகார பத்திரம் எழுதிக்கொடுப்பதற்கு மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு எவ்வித தகுதியும் உரிமையும் இல்லை என்று ஆட்சேபனை உரை தாக்கல் செய்து வாதிட்டுள்ளார்AIR 2002 SC 1061 J.J. Lal (P) Ltd.. எதிராக M.R. முரளி என்ற வழக்கில்¸ வாடகைதார் ஒருவர் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரை ஏற்றுக்கொண்டு வாடகை செலுத்திவிட்ட பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு வீட்டினைப் பொறுத்து முழுஉரிமையாளர் அல்ல என மறுப்பது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 116ன் கீழ் முரண்தடை கோட்பாட்டால் வாடகைதாரர் தடைசெய்யப்பட்டுள்ளார் என தீர்மானிக்கப்பட்டது
.

27. இந்த எதிர்மனுதாரர் 01.01.2005ம் தேதியில் ஏற்பட்ட வாடகை ஒப்பந்தம் மூலம் கிருஷ்ணமூர்த்தி கட்டிட உரிமையாளர் என ஏற்றுக்கொண்டு அவரிடம் வாடகைதாரராக ஒப்புக்கொண்டும் வாடகையை 31.12.2006ம் தேதிவரை செலுத்திவிட்டு தற்போது மனு கட்டிடத்தில் மேற்படி கிருஷ்ணமூர்த்தி என்பவர் முழு உரிமையாளர் இல்லை என மறுத்துள்ளார். அவர் இவ்வெதிர்மனுதாரர் நிலச்சுவான்தாரரான கிருஷ்ணமூர்த்தியை நிலஉரிமையாளர் அல்ல என மறுப்பதற்கு இந்திய சாட்சிய சட்டம் 116ன்படி முரண்தடை கோட்பாட்டால் தடை செய்யப்பட்டுள்ளார் என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

28. மேலும் இந்த எதிர்மனுதாரர் தரப்பு சாட்சி எ..சா.4 தன்னுடைய விசாரணையில் தான் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும் மனு கட்டிடமானது கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 29.01.1988ம் தேதியில் ஒதுக்கீடு செய்து உத்திரவு வழங்கப்பட்டது என்றும் அந்த உத்திரவு தான் எ..சா..5. என்றும் மனு கட்டிடத்தை 31.03.1988ம் தேதியில் கிருஷ்ணமூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டது என்றும் மனு சொத்துக்கு உரிய மின் கட்டணமும் வீட்டு வரியும் வீடு ஒதுக்கீடுதாரரால் செலுத்திவரவேண்டும் என்றும் வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கிவிட்டாலே அந்த கட்டிடத்தை பொறுத்து ஒதுக்கீடுதாரர் தான் முழுஉரிமையாளர் என்று சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்மனுதாரர்தரப்பு சாட்சியப்படி மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தான் கட்டிடத்தின் முழுஉரிமையாளர் என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.

29. தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை) கட்டுப்பாடு சட்டம் பிரிவு 10(2)(ii) படி கட்டிட உரிமையாளருக்கு அந்த வீட்டில் உள்ள உரிமையை மறுத்து வாடகைதாரர் எடுக்கும் கோரிக்கை நியாயமற்றவை என்பது பற்றி கட்டுப்பாட்டு அலுவலருக்கு தெளிவு ஏற்பட்டால் அந்த கட்டிடத்தை கட்டிட உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்திரவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

30. இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய ஆட்சேபனையிலும் வாதுரையிலும் இம்மனுதாரரான சுலைமானுக்கு இம்மனுவை தாக்கல் செய்ய எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை எனவும் 14.09.2009ம் தேதி ஏற்பட்ட பொது அதிகார பத்திரம் தன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் கட்டிட உரிமையாளரின் முகவர் என்ற முறையில் இம்மனுவை தாக்கல் செய்வதற்கு எவ்வித தகுதியும் உரிமையும் இல்லை என வாதிடப்பட்டது.

31. தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) சட்டம் பிரிவு 2(6)ன் படி கட்டிட உரிமையாளர் என்பவர் தானாகவோ அல்லது மற்றவர்கள் சார்பாகவோ அல்லது ஒரு முகவராகவோ பொறுப்பானவராகவோ நிர்வாகியாகவோ காப்பாளராகவோ இருந்து கட்டிடம் ஒரு வாடகைதாரருக்கு விடப்பட்டால் அந்த வாடகையை பெறுகிறவர் அல்லது வாடகை பெறுவதற்கு உரிமையுடையவர் எவரையும் கட்டிட உரிமையாளர் என்று சொல்ல உள்ளடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவு படி இம்மனுதாரர் கட்டிட உரிமையாளரின் அதிகாரம் பெற்ற முகவர் ஆவார் என்பது ம.சா..1. ஆவணத்தின் மூலம் தெரியவருகிறது. .சா..1. ஆவணப்படி இம்மனு கட்டிடத்தை பொறுத்து கிரையம் ஈடு ஒத்தி பரிவர்த்தனை ஆகிய பந்தகங்களுக்கு உட்படுத்தவும் மனையிட சம்பந்தமாக ஏதேனும் தாவா தாக்கல் செய்ய வேண்டியிருந்தாலும் எதிர்வாதம் செய்யவும்¸ வக்காலத்து¸ மனுவில் கையெழுத்து செய்யவும் கிருஷ்ணமூர்த்தி சர்பாக அனைத்து வில்லங்க விவகாரங்களை மேற்கொள்ளவும் அதிகாரம் அளித்து அப்பத்திரமானது 14.09.2009ம்தேதியில் எழுதப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மேற்கண்ட ம.சா..1. ஆவணப்படி இம்மனுதாரர் கட்டிட உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தியின் பொதுஅதிகாரம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஆவார். வாடகை கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 2(6)ன் படி இம்மனுதாரர் சுலைமான் கட்டிட உரிமையாளர் என்ற வரையறைக்கு உட்பட்டவர் ஆவர். ஆகவே இம்மனுதாரருக்கு எதிராக அனைத்து தாவா மற்றும் மனுக்களை தாக்கல்செய்து அதன்மூலம் பரிகாரம் கோருவதற்கு தகுதியுடையவர் என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

32. எதிர்மனுதாரர்தரப்பில் எ..சா.2ஆக இளமதி என்பவர் விசாரணை செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் மனு கட்டிடத்தில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை செய்ததாகவும் அதற்கு ஆதரவாக உத்தேச மதிப்பீடு மற்றும் செலவு தொகை ரசீதையும் கொடுத்ததாகவும் அவை எம.சா..3. மற்றும் 4ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்/வாடகைதாரர் தன்னுடைய குறுக்கு விசாரணையில் கட்டிடத்தில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை செய்வதற்கு மனுதாரரிடம் அல்லது மனுதாரரின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தியிடம் எவ்விதமான எழுத்துமூலமான சம்மதமும் பெறப்படவில்லை என சாட்சியமளித்துள்ளார். இந்த எதிர்மனுதாரரின் ஆட்சேபனையில் மனு கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் செய்ததாகவோ புதிய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகவோ எவ்வித உரைகளும் குறிப்பிடாத நிலையில் அது குறித்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

33. எதிர்மனுதாரர்தரப்பில் எம.சா.3 ஆக G.ராஜசேகரன் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய விசாரணையில் மனு கட்டிடத்தை எதிர்மனுதாரர் விற்கப்போவதாக கூறி கிரைய முன் தொகையாக ரூ.1 ½ லட்சம் மனுதாரர் வசம் கொடுத்ததாகவும் அது தனக்கு தெரியும் என்றும் சாட்சியமளித்துள்ளார். எதிர்மனுதாரர்/வாடகைதாரர் தன்னுடைய குறுக்கு விசாரணையில் தாவா கட்டிடத்தை கிரையம் பெறுவதற்காக முன்தொகை ரூ.1 ½ லட்சம் கொடுத்ததற்கு எவ்வித ரசீதோ அல்லது கிரைய ஒப்பந்த ஆவணம் எதுவும் எழுதிக்கொள்ளவில்லை என்று சாட்சியமளித்துள்ளார். இந்த எதிர்மனுதாரர் தன்னுடைய ஆட்சேபனையில் மனு கட்டிடத்தை கிரையம் பெற வேண்டி ரூ. 1 ½ லட்சம் மனுதாரருக்கு கிரைய முன்தொகையாக கொடுத்ததாக புதிய சங்கதியை அறிமுகப்படுத்தியுள்ளார். மேற்கண்ட புதிய சங்கதியை நிரூபிக்கும் பொறுப்பானது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 103¸ 103ன்படி எதிர்மனுதாரருக்கே உள்ள நிலையில் இந்த எதிர்மனுதாரர் கிரைய ஒப்பந்தம் செய்ததற்கோ முன்தொகை கொடுத்ததற்கோ எவ்வித ஆவணங்களையும் எதிர்மனுதாரர்தரப்பில் முன்னிடாததால் இந்த எதிர்மனுதாரர் ஆட்சேபனை உரையில் கூறியுள்ள புதிய சங்கதியை நிரூபிக்கவில்லை என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

34. இந்த எதிர்மனுதாரர் கடந்த மார்ச் 2007ம் மாதம் முதல் இதுநாள்வரை எவ்வித வாடகை தொகையையும் வேண்டுமென்றே செலுத்தாமல்இருந்து வருகிறார் என்றும் மனு கட்டிடத்தை காலி செய்யாமல் எவ்வித சட்டப்படியான உரிமையும் இல்லாமல் குடியிருந்து கொண்டு வருகிறார் என்பதும் இருதரப்பினர்களின் சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் அடிப்படையில் தெரியவருகிறது. ஆகவே மனு கட்டிடத்திலிருந்து இந்த எதிர்மனுதாரரை வெளியேற்றிக்கொள்ள உத்திரவிடவேண்டியது சட்டப்படியும் நியாயப்படியும் சரி என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

35. இறுதியாக மனுதாரரின் மனு அனுமதிக்கப்படுகிறது. செலவு தொகை இல்லை. எதிர்மனுதாரர் இந்த உத்திரவு ஏற்பட்ட 30 நாட்களுக்குள் மனு கட்டிடத்தில் உள்ள தன்னுடைய சுவாதீனத்தை காலி செய்து¸ காலி மனுக்கட்டிடத்தை மனுதாரர் வசம் ஒப்படைக்க இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.


No comments:

Post a Comment