வழக்கிலிருந்து
முக்கிய குறிப்புகள்:
''கடந்த
02.10.2013-ம் தேதி காலை
6.00 மணிக்கு எதிரி
செல்வ கிருஷ்ணன் இலங்கை
பேசாளை கடற்கரையில் இருந்து
கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக
இந்திய எல்லையான தனுஸ்கோடி
அரிச்சல்முனை கடற்கரைக்கு
எந்தவித அரசு அனுமதியோ உரிமமோ
இல்லாமல் இந்தியாவில்
தங்குவதற்கு எந்தவித ஆவணமும்
இல்லாமல் வந்ததாக தனுஸ்கோடி
காவல் நிலைய சிறப்பு சார்பு
ஆய்வாளர் குற்ற இறுதி அறிக்கை
தாக்கல் செய்துள்ளார்.''
''எதிரிக்கு
இவ்வழக்கின் நகல்கள் அனைத்தும்
கு.வி.மு.ச.பிரிவு
173(7)ன் கீழ் வழங்கப்பட்டது.
மேற்படி எதிரியிடம்
பிரிவு 3(a)
r/w 6(a) Passport Entry into India Rule 1950 and 3(2)(a) r/w 14 of
Foreigners Act 1946ன்
கீழ் குற்றச்சாட்டு வனைந்து
விளக்கி வினவிய போது எதிரி
தாமாக முன் வந்து தம்மிச்சையாக
குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
எதிரியின் குற்ற
ஒப்புதலில் இருந்தும் ஆவணங்களை
பரிசீலனை செய்ததில் இருந்தும்
எதிரியை மேற்படி பிரிவின்
கீழ் குற்றவாளி என இந்நீதிமன்றம்
தீர்மானிக்கின்றது.''
''முடிவாக
எதிரியை பிரிவுகள் 3(a)
r/w 6(a) Passport Entry into India Rule 1950 and 3(2)(a) r/w 14 of
Foreigners Act 1946ன்
கீழ் குற்றவாளி எனத் தீர்மானித்து
3(a)
r/w 6(a) Passport Entry into India Rule 1950
பிரிவின் கீழான
குற்றத்திற்கு 10 மாதங்கள்
க.கா ;சிறைதண்டனை
விதித்தும் 3(2)(a)
r/w 14 of Foreigners Act 1946
பிரிவின்
கீழான குற்றத்திற்கு 10
மாதங்கள் க.கா
சிறைதண்டனை விதித்தும்
மற்றும் அபராதம் ரூ.500
விதித்தும் க.த
1 மாதம் மெ.கா.
சிறைத்தண்டனை விதித்தும்
குவிமுச பிரிவு 248(2) ன்
கீழும். மேற்படி
இரண்டு பிரிவுகளின் கீழான
தண்டனைகளை எதிரி ஏககாலத்தில்
அனுபவிக்கவும் எதிரி ஏற்கனவே
சிறையில் இருந்த காலத்தை
தண்டனை காலத்திலிருந்து
கழித்துக் கொள்ள குவிமுச
பிரிவு 428 ன் கீழும்
உத்தரவிட்டுத் தீர்ப்பளிக்கப்படுகிறது.
''
''எதிரி
இலங்கை நாட்டினை சேர்ந்தவர்.
அவரின் தண்டனை காலம்
சரிகட்டப்பட்டும். அபராதம்
செலுத்திய நிலையில். அவரை
அகதிகள் முகாமிலோ அல்லது
அவர் இலங்கை செல்ல சட்டப்
படியான நடவடிக்கை மேற்கொள்ள
உத்தரவிடப்படுகிறது. ''
தீர்ப்பை
முழுமையாக படிக்க (அ)
பதிவிறக்கம்
செய்ய
No comments:
Post a Comment