மாவட்ட
உரிமையியல் நீதிமன்றம்
பண்ருட்டி
முன்னிலை
: திருமதி.ஏ.உமாமகேஸ்வரி¸
பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
மாவட்ட
உரிமையியல் நீதிபதி¸
பண்ருட்டி
திருவள்ளுவராண்டு
2046¸ மன்மத ஆண்டு¸
ஐப்பசித்திங்கள் 13
ஆம் நாள்
2015 ம்
ஆண்டு அக்டோபர் திங்கள் 30
ஆம் நாள் வெள்ளிக்கிழமை
அசல்
வழக்கு எண்.316 / 2006
1. மாயவன்
2. பெருமாள்
வாதிகள்
/எதிர்/
1.ஜெயபால்
2.
ஜெயலட்சுமி
… பிரதிவாதிகள்
வழக்கிலிருந்து
முக்கிய குறிப்புகள்:

2. வழக்குரையின்
சுருக்கம்:
வழக்குச்சொத்தானது
வாதிகளின் தகப்பனாரான
நாராயணசம்பன் என்பவருக்கு
19.10.1943 தேதியிட்ட
பாகபத்திரத்தின் மூலம்
உரிமையாகி¸ அவர்
இறக்கும்வரை அவரது அனுபவத்தில்
இருந்துவந்து¸ அவர்
இறந்தபிறகு வாதிகள் மற்றும்
அவர்களது சகோதரரான ஜெயபால்
ஆகியோரது அனுபவத்தில்
இருந்துவருகிறது. ஆனால்
வாதிகள் மட்டுமே மேற்படி
தாவா சொத்துக்கு வரிசெலுத்தி
வருகின்றனர். மேற்படி
ஜெயபால் வெளியூரில் இருப்பதால்
அவசரநிலை காரணமாக மேற்படி
ஜெயபாலுக்காகவும் சேர்த்து
இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
வாதிகள் இருவரும்¸
முதல் பிரதிவாதியின்
தகப்பனாரான முத்தையன்
என்பவரிடமிருந்து பல ஆண்டுகளுக்கு
முன்பு ரூ.10 ஆயிரம்
கடன் பெற்றிருந்தனர்.
மேற்படி முத்தையன்
இறந்தபிறகு பிரதிவாதிகள்
வாதிகளின் கையெழுத்துகளை
பூர்த்தி செய்யப்பட்ட மற்றும்
பூர்த்தி செய்யப்படாத
கடனுறுதிச்சீட்டுகளில்
வாங்கி வைத்திருந்தனர்.
அந்த கடன் பைசலாகிவிட்டது.
இந்த வழக்கு தாக்கல்
செய்வதற்கு சுமார் 12
மாதங்களுக்கு முன்பு
வாதிகள்¸ பிரதிவாதிகளிடம்
ரூ.35 ஆயிரம் கடன்
வாங்கியதாகவும்¸ அதை
கொடுக்கவில்லையென்று
பிரதிவாதிகள் புதுப்பேட்டை
காவல்நிலையத்தில் புகார்
கொடுத்தனர். காவலர்கள்
பிரதிவாதிகளின் தூண்டுதலின்பேரில்
மேற்படி கடனை அடைத்துவிடுவதாகவும்¸
தவறினால் வாதிகளுக்கு
பாத்தியமான 2 ஏக்கர்
சொத்தை பிரதிவாதிகளை
அனுபவிக்கவிடுவதாகவும்
அவர்களே எழுதி வாதிகளிடம்
கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
அதனால் வாதிகளால்
எந்தவித நடவடிக்கையும் எடுக்க
முடியவில்லை. மேலும்
பிரதிவாதிகள் தாவா சொத்தில்
7.12.06 ஆம் தேதி அத்துமீறி
பிரவேசிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் வாதிகள் அதனை
தடுத்துவிட்டனர். ஆனால்
பிரதிவாதிகளின் அத்துமீறல்
தொடர்வதால் தாவா சொத்தைப்
பொறுத்து விளம்புகை மற்றும்
நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் கோரி வாதிகளால்
இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. எதிர்வழக்குரையின்
சுருக்கம்:
வாதிகளின்
வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.
வழக்குரையில்
கூறப்பட்டுள்ள அம்சங்கள்
அனைத்தும் தவறானதாகும்.
உண்மையில் 10.9.2002 ஆம்
தேதி வாதிகள் இருவரும் 2
ஆம் பிரதிவாதியிடம்
கடனுறுதிச்சீட்டின் அடிப்படையில்
ரூ.46¸000 கடன்
வாங்கியிருந்தனர். 3.9.05 ஆம்
தேதி அந்த கடனை கணக்கு பார்த்தபோது
அசல் வட்டி சேர்த்து ரூ.62¸704
வந்ததை தொடர்ந்து
அன்றைய தினமே வாதிகள் இருவரும்
அவர்களது குடும்ப செலவிற்காகவும்¸
வெளியில் வாங்கியிருக்கும்
மற்ற சில்லறை கடன்களை பைசல்
செய்வதற்காகவும் மேலும் 2
ஆம் பிரதிவாதியிடம்
ரூ.8¸352 கடனாக
பெற்றுக்கொண்டு அன்றைய தினமே
ரூ.71¸056-க்கு ஒரு
கடனுறுதிச்சீட்டை எழுதிக்கொடுத்தனர்.
மேலும் அன்றைய தினமே
வாதிகள் இருவரும் 2 ஆம்
பிரதிவாதி பெயருக்கு ஒரு
வர்த்தமான போக்கிய ரசீதும்
எழுதிக்கொடுத்தனர். அந்த
ரசீதில் 'நாங்கள்
தங்கள் பெயருக்கு நாளது
தேதியில் ரூ.71¸056-க்கு
எழுதிக்கொடுத்திருக்கும்
அன்டிமாண்டை இன்றுமுதல்
ஒருவருட கெடுவிற்குண்டான
தொகைகளை கொடுத்து நாங்கள்
பைசல் செய்துவிடுகிறோம்¸
தவறினால் எங்களுக்கு
பாத்தியமான இதனடியில் கண்ட
சொத்தை தாங்கள் பயிரிட்டு
அனுபவித்துக்கொள்ள வேண்டியது.
மேற்படி தொகையை நாங்கள்
தங்களிடம் கொடுத்துவிட்டு
இந்த வர்த்தமான போக்கிய ரசீதை
பைசல் செய்துகொள்வதுடன்
இதில் கண்ட சொத்தையும்
தங்களிடமிருந்து ஒப்புக்கொள்கிறோம்
என்பதற்கும் மேற்படி தொகைக்கு
வட்டி கிடையாது என்பதற்கும்
இதுவே வர்த்தமான போக்கிய
ரசீது" என கண்டு
எழுதிக்கொடுத்தனர். மேற்படி
கடனுறுதிச்சீட்டும்¸
வாத்தமான போக்கிய
ரசீதும் சம்மதித்து எழுதி
சாட்சிகள் மற்றும் ஆவண எழுத்தர்
முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு
ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி 3.9.06 ஆம்
தேதிவரை கடன்தொகை ரூ.71¸056
மற்றும் அதற்கான
வட்டியை கொடுத்து பைசல்
செய்யாததால் அன்றைய தினமே
சொத்தை ஒப்புக்கொண்டு
பிரதிவாதிகள் மரவள்ளி¸
கேழ்வரகு மற்றும்
உளுந்து பயிர் செய்துவருகிறார்கள்.
மேலும் 3.9.05 ஆம்
தேதி கடனுறுதிச்சீட்டின்பேரில்
பெற்றுள்ள ரூ.71¸056-ம்
3.9.05 முதல் 3.9.06
தேதிவரை ஒரு ஆண்டிற்குண்டான
வட்டியையும் சேர்த்து அசல்
வட்டி உட்பட வாதிகள் பைசல்
செய்துவிட்டால் நிலத்தை
வாதிகளிடம் அறுவடை முடிந்ததும்
ஒப்படைக்க இந்த பிரதிவாதிகள்
தயாராக உள்ளார்கள். மேற்படி
கடனுறுதிச்சீட்டின் கடன்
தொகைகளை ஏமாற்றுவதற்காக
உண்மைகளை மறைத்து இந்த வழக்கை
வாதிகள் தாக்கல் செய்துள்ளனர்.
எனவே இவ்வழக்கு
செலவுத்தொகையுடன் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும்.
4. மேற்படி
வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை
ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர்
06.06.07 ஆம் தேதி கீழ்கண்ட
எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) வழக்குச்சொத்து
வாதிகட்கு பாத்தியமானதா ?
2) வழக்குச்சொத்து
வாதிகளின் சுவாதீன அனுபவத்தில்
உள்ளதா?
3) வாதி;கள்
கோரியுள்ளவாறு விளம்புகை
பரிகாரம் வாதிகட்டு கிடைக்கத்தக்கதா?
4) தாவாவில்
வாதிகள் கோரியுள்ளவண்ணம்
நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் வாதிகட்கு கிடைக்கத்தக்கதா?
5) வாதிகட்கு
எத்தகைய நிவாரணம் கிடைக்கக்கூடியது?
5. இவ்வழக்கில்
வாதிகள்தரப்பில் வா.சா.1-ன்
முதன்மை பிரமாண வாக்குமூலம்
தாக்கல் செய்யப்பட்டு¸
வா.சா.ஆ.1
மற்றும் வா.சா.ஆ.2
ஆகிய ஆவணங்கள் குறியீடு
செய்யப்பட்டுள்ளன.
பிரதிவாதிகள்தரப்பில்
சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை¸
சான்றாவணங்கள் ஏதும்
குறியீடு செய்யப்படவில்லை.
6) வழக்கெழு
வினாக்கள் 1¸2¸3 மற்றும்
4 :
வாதிகள்தரப்பில்
தங்களது வாதத்தின் பொழுது¸
வழக்குச்சொத்தானது
வாதிகளின் தகப்பனாரான
நாராயணசம்பன் என்பவருக்கு
19.10.1943 தேதியிட்ட
பாகபத்திரத்தின் மூலம்
உரிமையாகி¸ அவர்
இறக்கும்வரை அவரது அனுபவத்தில்
இருந்துவந்து¸ அவர்
இறந்தபிறகு வாதிகள் மற்றும்
அவர்களது சகோதரரான ஜெயபால்
ஆகியோரது அனுபவத்தில்
இருந்துவருவதாகவும்¸ ஆனால்
வாதிகள் மட்டுமே மேற்படி
தாவா சொத்துக்கு வரிசெலுத்தி
வருவதாகவும்¸ மேற்படி
ஜெயபால் வெளியூரில் இருப்பதால்
அவசரநிலை காரணமாக மேற்படி
ஜெயபாலுக்காகவும் சேர்த்து
இவ்வழக்கைத் தாக்கல்
செய்துள்ளதாகவும்¸ வாதிகள்
இருவரும்¸ முதல்
பிரதிவாதியின் தகப்பனாரான
முத்தையன் என்பவரிடமிருந்து
பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10
ஆயிரம் கடன் பெற்றதாகவும்¸
மேற்படி முத்தையன்
இறந்தபிறகு பிரதிவாதிகள்
வாதிகளின் கையெழுத்துகளை
பூர்த்தி செய்யப்பட்ட மற்றும்
பூர்த்தி செய்யப்படாத
கடனுறுதிச்சீட்டுகளில்
வாங்கி வைத்திருந்தனர்
என்றும்¸ அந்த கடன்
பைசலாகிவிட்டது என்றும்¸
இந்த வழக்கு தாக்கல்
செய்வதற்கு சுமார் 12
மாதங்களுக்கு முன்பு
வாதிகள்¸ பிரதிவாதிகளிடம்
ரூ.35 ஆயிரம் கடன்
வாங்கியதாகவும்¸ அதை
கொடுக்கவில்லையென்று
பிரதிவாதிகள் புதுப்பேட்டை
காவல்நிலையத்தில் புகார்
கொடுத்து அதன்பேரில் காவலர்கள்
பிரதிவாதிகளின் தூண்டுதலின்பேரில்
மேற்படி கடனை அடைத்துவிடுவதாகவும்¸
தவறினால் வாதிகளுக்கு
பாத்தியமான 2 ஏக்கர்
சொத்தை பிரதிவாதிகளை
அனுபவிக்கவிடுவதாகவும்
அவர்களே எழுதி வாதிகளிடம்
கையெழுத்து வாங்கிக்கொண்டனர்
என்றும்¸ அதனால்
வாதிகளால் எந்தவித நடவடிக்கையும்
எடுக்க முடியவில்லை என்றும்¸
மேலும் பிரதிவாதிகள்
தாவா சொத்தில் 7.12.06 ஆம்
தேதி அத்துமீறி பிரவேசிக்க
முயற்சி செய்து¸ அதனை
வாதிகள் தடுத்துவிட்டதாகவும்¸
ஆனால் பிரதிவாதிகளின்
அத்துமீறல் தொடர்வதால் தாவா
சொத்தைப் பொறுத்து விளம்புகை
மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் வழங்க வேண்டுமென
வாதிடப்பட்டது. வாதிகள்தரப்பில்
முதல் வாதியான மாயவன் என்பவரின்
பிரமாண பத்திரம் வா.சா.1
ஆக தாக்கல் செய்யப்பட்டு
வா.சா.ஆ.1
மற்றும் வா.சா.ஆ.2
ஆகிய ஆவணங்கள் குறியீடு
செய்யப்பட்டுள்ளன. மேலும்
அவர் வழக்குரையையொட்டி தனது
முதல் விசாரணையை பிரமாண
பத்திரத்தின் மூலம் தாக்கல்
செய்துள்ளார். வா.சா.ஆ.1
என்பது 19.10.1943 ஆம்
தேதியிட்ட நாராயணசம்பன்
வகையறாவுக்குள் ஏற்பட்ட
பாகபத்திர சான்றிட்ட நகல்
ஆகும். வா.சா.ஆ.2
என்பது 28.01.2006 தேதியிட்ட
வழக்குச்சொத்துக்கு முதல்
வாதி பெயரிலுள்ள தீர்வை
ரசீதாகும்.
7) பிரதிவாதிகள்தரப்பில்
தங்களது வாதத்தின்பொழுது¸
வழக்குரையில்
கூறப்பட்டுள்ள அம்சங்கள்
அனைத்தும் தவறானது என்றும்¸
உண்மையில் 10.9.2002 ஆம்
தேதி வாதிகள் இருவரும் 2
ஆம் பிரதிவாதியிடம்
கடனுறுதிச்சீட்டின் அடிப்படையில்
ரூ.46¸000 கடன்
வாங்கியிருந்ததாகவும்¸
3.9.05 ஆம் தேதி அந்த கடனை
கணக்கு பார்த்தபோது அசல்
வட்டி சேர்த்து ரூ.62¸704 வந்ததை
தொடர்ந்து அன்றைய தினமே
வாதிகள் இருவரும் அவர்களது
குடும்ப செலவிற்காகவும்¸
வெளியில் வாங்கியிருக்கும்
மற்ற சில்லறை கடன்களை பைசல்
செய்வதற்காகவும் மேலும் 2
ஆம் பிரதிவாதியிடம்
ரூ.8¸352 கடனாக
பெற்றுக்கொண்டு அன்றைய தினமே
ரூ.71¸056-க்கு ஒரு
கடனுறுதிச்சீட்டை
எழுதிக்கொடுத்ததாகவும்¸
மேலும் அன்றைய தினமே
வாதிகள் இருவரும் 2 ஆம்
பிரதிவாதி பெயருக்கு ஒரு
வாத்தமான போக்கிய ரசீதும்
எழுதிக்கொடுத்ததாகவும்¸
அந்த ரசீதில் 'நாங்கள்
தங்கள் பெயருக்கு நாளது
தேதியில் ரூ.71¸056-க்கு
எழுதிக்கொடுத்திருக்கும்
அன்டிமாண்டை இன்றுமுதல்
ஒருவருட கெடுவிற்குண்டான
தொகைகளை கொடுத்து நாங்கள்
பைசல் செய்துவிடுகிறோம்¸
தவறினால் எங்களுக்கு
பாத்தியமான இதனடியில் கண்ட
சொத்தை தாங்கள் பயிரிட்டு
அனுபவித்துக்கொள்ள வேண்டியது.
மேற்படி தொகையை நாங்கள்
தங்களிடம் கொடுத்துவிட்டு
இந்த வர்த்தமான போக்கிய ரசீதை
பைசல் செய்துகொள்வதுடன்
இதில் கண்ட சொத்தையும்
தங்களிடமிருந்து ஒப்புக்கொள்கிறோம்
என்பதற்கும் மேற்படி தொகைக்கு
வட்டி கிடையாது என்பதற்கும்
இதுவே வர்த்தமான போக்கிய
ரசீது" என கண்டு
எழுதிக்கொடுத்ததாகவும்¸
மேற்படி கடனுறுதிச்சீட்டும்¸
வர்த்தமான போக்கிய
ரசீதும் சம்மதித்து எழுதி
சாட்சிகள் மற்றும் ஆவண எழுத்தர்
முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு
ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
என்றும்¸ அதன்படி
3.9.06 ஆம் தேதிவரை
கடன்தொகை ரூ.71¸056 மற்றும்
அதற்கான வட்டியை கொடுத்து
பைசல் செய்யாததால் அன்றைய
தினமே சொத்தை ஒப்புக்கொண்டு
பிரதிவாதிகள் மரவள்ளி¸
கேழ்வரகு மற்றும்
உளுந்து பயிர் செய்துவருவதாகவும்¸
மேலும் 3.9.05 ஆம்
தேதி கடனுறுதிச்சீட்டின்பேரில்
பெற்றுள்ள ரூ.71¸056-ம்
3.9.05 முதல் 3.9.06
தேதிவரை ஒரு ஆண்டிற்குண்டான
வட்டியையும் சேர்த்து அசல்
வட்டி உட்பட வாதிகள் பைசல்
செய்துவிட்டால் நிலத்தை
வாதிகளிடம் அறுவடை முடிந்ததும்
ஒப்படைக்க இந்த பிரதிவாதிகள்
தயாராக உள்ளதாகவும்¸ மேற்படி
கடனுறுதிச்சீட்டின் கடன்
தொகைகளை ஏமாற்றுவதற்காக
உண்மைகளை மறைத்து இந்த வழக்கை
வாதிகள் தாக்கல் செய்துள்ளதால்
இவ்வழக்கு செலவுத்தொகையுடன்
தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென
வாதிடப்பட்டது. மேலும்
பிரதிவாதிகள் தரப்பில்
சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை.
சான்றாவணங்கள் எதுவும்
குறியீடு செய்யப்படவில்லை.
8) மேற்படி
வாதிகள் தரப்பில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள சான்றாவணங்களையும்¸
வழக்கு கோப்புகளையும்
கொண்டு வாதிகள் தங்கள்தரப்பு
கட்சியை நிரூபித்துள்ளார்களா
என்று ஒருசேர பரிசீலனை செய்து
பார்க்கும்போது¸ வாதிகள்
தரப்பில் தாவா சொத்து உள்ளிட்ட
இதர சொத்துகள் 19.10.1943 ஆம்
தேதி வாதிகளின் தகப்பனாரான
நாராயணசம்பன் வகையறாவுக்குள்
ஏற்பட்ட பாகபத்திரத்தின்
அடிப்படையில் நாராயணசம்பன்
பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸
அதுமுதல் அச்சொத்துகளை
வாதிகளின் தகப்பனார்
அனுபவித்துவந்து¸
அவருக்குப்பிறகு
வாதிகள் மற்றும் வாதிகளின்
சகோதரரான ஜெயபால் ஆகியோரால்
அனுபவிக்கப்பட்டு வருவதாகவும்¸
ஆனால் வாதிகள்¸
முதல் பிரதிவாதியின்
தகப்பனாரிடம் ரூ.10 ஆயிரம்
கடன் பெற்றிருந்ததாகவும்¸
அதற்காக பல பூர்த்தி
செய்யப்பட்ட மற்றும் பூர்த்தி
செய்யப்படாத கடனுறுதிச்சீட்டுகளில்
பிரதிவாதிகள் வாதிகளிடம்
கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும்¸
ஆனால் அந்த கடனை வாதிகள்
பைசல் செய்துவிட்டதாகவும்¸
பின்னிட்டு பிரதிவாதிகள்¸
வாதிகள் தங்களிடம்
ரூ.35 ஆயிரம் கடன்
வாங்கியதாகவும்¸ அந்த
கடனை அடைக்கவில்லையென்று
பிரதிவாதிகள் புதுப்பேட்டை
காவல்நிலையத்தில் புகார்
கொடுத்து அதன்பேரில் காவலர்கள்
பிரதிவாதிகளின் தூண்டுதலின்பேரில்
மேற்படி கடனை அடைத்துவிடுவதாகவும்¸
தவறினால் வாதிகளுக்கு
பாத்தியமான 2 ஏக்கர்
சொத்தை பிரதிவாதிகளை
அனுபவிக்கவிடுவதாகவும்
அவர்களே எழுதி வாதிகளிடம்
கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும்¸
பின்னர் பிரதிவாதிகள்
தாவா சொத்தில் 7.12.06 ஆம்
தேதி அத்துமீறி பிரவேசிக்க
முயற்சி செய்ததாகவும்¸
அதனால் இந்த வழக்கை
தாக்கல் செய்ததாகவும்
வாதிடப்பட்டது. இதுகுறித்து
பரிசீலனை செய்து பார்க்கும்போது¸
வாதிகள் தரப்பில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வா.சா.ஆ.1
ஆவணமான பாகபத்திரத்தை
பரிசீலனை செய்து பார்க்கும்போது¸
தாவா சொத்தானது
வாதிகளின் தகப்பனார் நாராயணசம்பன்
பாகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது. மேலும்
வா.சா.ஆ.2
ஆவணத்தை பரிசீலனை
செய்து பார்க்கும்போது¸
தாவா சொத்துக்கு முதல்
வாதியின் பெயரில் வாய்தா
செலுத்தப்பட்டிருப்பதும்
தெரியவருகிறது. மேலும்¸
இவ்வழக்கின் பிரதிவாதிகளே
தாவாசொத்து வாதிகளுக்கு
உரிமையானது என்று
ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாலும்¸
வா.சா.ஆ.1
மற்றும் வா.சா.ஆ.2
ஆவணங்களிலிருந்தும்
தாவா சொத்து வாதிகளுக்கு
உரிமையும் பாத்தியமுமானது
என்பது தெரி;யவருகிறது.
9) மேலும்
பிரதிவாதிகள் தரப்பில்
10.9.2002 ஆம் தேதி வாதிகள்
இருவரும் 2 ஆம்
பிரதிவாதியிடம் கடனுறுதிச்சீட்டின்
அடிப்படையில் ரூ.46¸000 கடன்
வாங்கியிருந்ததாகவும்¸
3.9.05 ஆம் தேதி அந்த கடனை
கணக்கு பார்த்தபோது அசல்
வட்டி சேர்த்து ரூ.62¸704 வந்ததை
தொடர்ந்து அன்றைய தினமே
வாதிகள் இருவரும் அவர்களது
குடும்ப செலவிற்காகவும்¸
வெளியில் வாங்கியிருக்கும்
மற்ற சில்லறை கடன்களை பைசல்
செய்வதற்காகவும் மேலும் 2
ஆம் பிரதிவாதியிடம்
ரூ.8¸352 கடனாக
பெற்றுக்கொண்டு அன்றைய தினமே
ரூ.71¸056-க்கு ஒரு
கடனுறுதிச்சீட்டை
எழுதிக்கொடுத்ததாகவும்¸
மேலும் அன்றைய தினமே
வாதிகள் இருவரும் 2 ஆம்
பிரதிவாதி பெயருக்கு ஒரு
வாத்தமான போக்கிய ரசீதும்
எழுதிக்கொடுத்ததாகவும்¸
அதன் அடிப்படையில்
ரூ.71¸056 தொகையை ஒருவருட
கெடுவிற்குள் பைசல்
செய்துவிடுவதாகவும்¸
தவறினால் வாதிகளுக்கு
பாத்தியமான சொத்தை அனுபவித்துக்கொள்ள
வேண்டியது எனவும் கண்டு
எழுதிக்கொடுக்கப்பட்டதாகவும்¸
அதன்படி 3.9.06 ஆம்
தேதிவரை கடன்தொகை ரூ.71¸056
மற்றும் அதற்கான
வட்டியை கொடுத்து பைசல்
செய்யாததால் அன்றைய தினமே
சொத்தை ஒப்புக்கொண்டு
பிரதிவாதிகள் மரவள்ளி¸
கேழ்வரகு மற்றும்
உளுந்து பயிர் செய்துவருவதாகவும்¸
மேலும் 3.9.05 ஆம்
தேதி கடனுறுதிச்சீட்டின்பேரில்
பெற்றுள்ள ரூ.71¸056-ம்
3.9.05 முதல் 3.9.06
தேதிவரை ஒரு ஆண்டிற்குண்டான
வட்டியையும் சேர்த்து அசல்
வட்டி உட்பட வாதிகள் பைசல்
செய்துவிட்டால் நிலத்தை
வாதிகளிடம் அறுவடை முடிந்ததும்
ஒப்படைக்க இந்த பிரதிவாதிகள்
தயாராக உள்ளதாகவும்¸ மேற்படி
கடனுறுதிச்சீட்டின் கடன்
தொகைகளை ஏமாற்றுவதற்காக
உண்மைகளை மறைத்து இந்த வழக்கை
வாதிகள் தாக்கல் செய்துள்ளதாகவும்
கட்சி எடுக்கப்பட்டுள்ளது.
10) மேலும்
பிரதிவாதிகள் தரப்பில்
எடுக்கப்பட்ட கட்சியான
வாதிகளால் எழுதிக்கொடுக்கப்பட்ட
3.9.05 தேதியிட்ட
கடனுறுதிச்சீட்டின் அடிப்படையில்
தாக்கல் செய்யப்பட்டு முடிவுற்ற
வழக்கான மு.வ.276/08
வழக்கை பரிசீலனை
செய்து பார்க்கும்போது¸
மேற்படி வழக்கில்
வா.சா.ஆ.1
ஆவணமான 3.9.05 தேதியிட்ட
கடனுறுதிச்சீட்டு உண்மையானது
என்றும்¸ இந்த
வழக்கின் வாதிகள்¸
பிரதிவாதிகளிடம்
பெற்ற கடன் உண்மையானது என்றும்
நிரூபிக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது. எனவே
வாதிகள்¸ முதல்
பிரதிவாதியின் தகப்பனாரிடம்
ரூ.10 ஆயிரம் கடன்
பெற்றிருந்ததாகவும்¸
அதற்காக பல பூர்த்தி
செய்யப்பட்ட மற்றும் பூர்த்தி
செய்யப்படாத கடனுறுதிச்சீட்டுகளில்
பிரதிவாதிகள் வாதிகளிடம்
கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும்¸
ஆனால் அந்த கடனை வாதிகள்
பைசல் செய்துவிட்டதாகவும்¸
பின்னிட்டு பிரதிவாதிகள்¸
வாதிகள் தங்களிடம்
ரூ.35 ஆயிரம் கடன்
வாங்கியதாகவும்¸ அந்த
கடனை அடைக்கவில்லையென்று
பிரதிவாதிகள் புதுப்பேட்டை
காவல்நிலையத்தில் புகார்
கொடுத்து அதன்பேரில் காவலர்கள்
பிரதிவாதிகளின் தூண்டுதலின்பேரில்
மேற்படி கடனை அடைத்துவிடுவதாகவும்¸
தவறினால் வாதிகளுக்கு
பாத்தியமான 2 ஏக்கர்
சொத்தை பிரதிவாதிகளை
அனுபவிக்கவிடுவதாகவும்
அவர்களே எழுதி வாதிகளிடம்
கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும்¸
பின்னர் பிரதிவாதிகள்
தாவா சொத்தில் 7.12.06 ஆம்
தேதி அத்துமீறி பிரவேசிக்க
முயற்சி செய்ததாகவும்
வாதிகள்தரப்பில் எடுக்கப்பட்டுள்ள
வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
அமையவில்லை என்றே இந்நீதிமன்றம்
கருதுகிறது.
11) மேலும்
வாதிகள் இருவரும் 2 ஆம்
பிரதிவாதி பெயருக்கு ஒரு
வர்த்தமான போக்கிய ரசீதும்
எழுதிக்கொடுத்ததாகவும்¸
அதன் அடிப்படையில்
ரூ.71¸056 தொகையை ஒருவருட
கெடுவிற்குள் பைசல்
செய்துவிடுவதாகவும்¸
தவறினால் வாதிகளுக்கு
பாத்தியமான சொத்தை அனுபவித்துக்கொள்ள
வேண்டியது எனவும் கண்டு
எழுதிக்கொடுக்கப்பட்டதாகவும்¸
அதன்படி 3.9.06 ஆம்
தேதிவரை கடன்தொகை ரூ.71¸056
மற்றும் அதற்கான
வட்டியை கொடுத்து பைசல்
செய்யாததால் அன்றைய தினமே
சொத்தை ஒப்புக்கொண்டு
பிரதிவாதிகள் மரவள்ளி¸
கேழ்வரகு மற்றும்
உளுந்து பயிர் செய்துவருவதாகவும்
கட்சி எடுக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது. இதுகுறித்து
மேற்படி மு.வ.276/08
வழக்கை பரிசீலனை
செய்து பார்க்கும்போது¸
03.09.05 தேதியிலிருந்து
03.09.06 வரை இந்த வாதிகள்
ஒருவருட காலகெடுவிற்குள்
அசல்தொகையை கொடுக்காததால்தான்
இந்த பிரதிவாதிகள் தாவா
சொத்தின் அனுபவத்தை 03.09.2006
ஆம் தேதி எடுத்துக்கொண்டு
பயிர்செய்ததாகவும்¸ எனவே
03.09.2006 ஆம் தேதி முதல்
இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட
12.12.2006 ஆம் தேதிவரை
மட்டுமே இந்த வழக்கின்
பிரதிவாதிகள் தாவா சொத்தின்
அனுபவத்தில் இருந்திருக்க
வாய்ப்பு இருப்பதாகவும்¸
எனவே மேற்படி 3
மாதகாலத்திற்குள்
வர்த்தமான பத்திரத்தின்
அடிப்படையில் இந்த பிரதிவாதிகளுக்கு
தாவா சொத்திலிருந்து எவ்வித
மகசூல் ஆதாயமும் கிடைத்திருக்க
வாய்ப்பில்லை என்றும்¸
எனவே வாதிதரப்பில்
3.9.2005 தேதியில் இருந்து
02.09.2008 தேதி வரை அசல்
தொகைக்கு வட்டி கணக்கீடு
செய்தது சரி என்றும்
தீர்மானிக்கப்பட்டிருப்பதும்
தெரியவருகிறது. மேலும்
இப்பிரதிவாதிகள் தரப்பில்¸
தாவாசொத்து தங்களது
அனுபோகத்தில் இருந்தது
என்றும்¸ ஆனால்
நீதிமன்றத்தின் மூலம்
நியமிக்கப்பட்ட நீதிமன்ற
ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையின்
அடிப்படையிலும்¸ தாவாசொத்து
குறித்து உரிமைமூலத்தை
நிரூபிக்கும் ஆவணங்கள் ஏதும்
தங்கள்வசம் இல்லாத
காரணத்தால் இடைக்கால தடையுத்தரவு
மனுவில் இந்த வழக்கின்
வாதிகளுக்கு ஆதரவாக
உத்தரவிடப்பட்டதால்¸
நீதிமன்ற உத்தரவை
மதித்து தாங்கள் தாவா
சொத்திலிருந்து விலகிவிட்டதாகவும்
வாதிடப்பட்டது. எனவே
மேற்படி 3.9.06 முதல்
12.9.16 வரை 3 மாதகாலம்
மட்டுமே இந்த பிரதிவாதிகள்
தாவா சொத்தில் அத்துமீறி
பயிர் செய்திருப்பதும்¸
அதன் காரணமாகவே
வாதிகளால் உரிமை விளம்புகை
மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் கோரி இவ்வழக்கு
தாக்கல் செய்திருப்பதும்
தெரியவருகிறது. மேலும்
இவ்வழக்கில் இப்பிரதிவாதிகளே
தாவா சொத்து வாதிகளுக்கு
உரிமையும் பாத்தியமுமானது
எனவும்¸ அது வாதிகளின்
அனுபவத்தில்தான் இருந்துவருகிறது
எனவும் ஒப்புக்கொண்டிருப்பதாலும்¸
மேலும் இவ்வழக்கில்
நீதிமன்ற ஆணையர் தாக்கல்
செய்துள்ள அறிக்கை மற்றும்
வரைபடம் ஆகியவை தாவா சொத்தில்
வாதிகளின் உரிமையை நிரூபிக்கும்
வகையில் அமைந்திருப்பதாலும்¸
வாதிகள் தரப்பில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வா.சா.ஆ.1
மற்றும் வா.சா.ஆ.2
ஆகிய ஆவணங்கள்
தாவாசொத்தில் வாதிகளின்
உரிமைமூலத்தையும்¸
அனுபவத்தையும்
நிரூபிக்கும் வகையில்
அமைந்திருப்பதாலும்¸
தாவாசொத்து வாதிகட்கு
பாத்தியமானது என்று எழுவினா
எண்.1-க்கும்¸
தாவாசொத்து வாதிகளின்
சுவாதீன அனுபவத்தில்தான்
இருந்துவருகிறது என எழுவினா
எண்.2-க்கும்¸
வாதிகள் தாவாவில்
கோரியுள்ள விளம்புகை மற்றும்
நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் வாதிகட்கு கிடைக்கத்தக்கது
என எழுவினா எண்.3 மற்றும்
4 ஆகியவற்றிற்கும்
வாதிகளுக்கு ஆதரவாக விடை
காணப்படுகிறது.
12) எழுவினா
5 :
வாதிகள்
கோரியுள்ள விளம்புகை மற்றும்
நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரங்கள் எழுவினா 3
மற்றும் 4 ஆகியவற்றின்மூலம்
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
நிலையில்¸ வேறு
எந்த பரிகாரமும் அவர்களுக்கு
வழங்கத்தக்கதல்ல என முடிவு
செய்து இவ்வழக்கெழுவினாவிற்கு
விடை காணப்படுகிறது.
13) முடிவாக¸
இவ்வழக்கானது
அனுமதிக்கப்பட்டு¸ தாவாசொத்து
வாதிகளுக்கு உரிமையும்
பாத்தியமுமானது என விளம்புகை
செய்தும்¸ தாவா
சொத்தில் உள்ள வாதிகளின்
சட்டப்படியான அனுபவத்தை
பிரதிவாதிகளோ¸ அவர்களது
ஆட்களோ எவ்வித இடையூறும்
செய்யக் கூடாது என நிரந்தர
உறுத்துக்கட்டளை பரிகாரம்
வழங்கியும் வாதிகளுக்கு
ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை
பிறப்பிக்கப்படுகிறது.
அவரவர் செலவுத்தொகையை
அவரவர்களே ஏற்றுக்கொள்ள
உத்தரவிடப்படுகிறது.
No comments:
Post a Comment