1.7.16

இயக்க ஊர்திச் சட்டம் பிரிவு 166(1)

இயக்க ஊர்தி விபத்துக் கோரிக்கை உரிமைத் தீர்;ப்பாயம்¸ விருத்தாசலம்
கூடுதல் சார்பு நீதிமன்றம்¸ விருத்தாசலம்
முன்னிலை. திரு. என்.சுந்தரம்¸ பி.எஸ்.சிபி.எல்
கூடுதல் தீர்ப்பாய நீதிபதி
2015ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17ஆம் நாள் செவ்வாய்கிழமை
.வி.கோ.தீ.மு..எண் 555/2013

1. அம்பிகா
2. தௌசலியா
3. கம்சலா ......... மனுதாரர்கள்
/எதிர்/
1. கலைச்செல்வம்
2. தி டிவிஷனல் ஆபிசர் ஸ்ரீராம்
ஜெனசூரல் இன்சூரன்ஸ் கம் சென்னை ..... எதிர்மனுதாரர்கள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

மனுதாரருக்கு¸ எதிர்மனுதாரர் இழப்பீடாக ரூ.25¸00¸000/-ஐக் கொடுக்க உத்தரவிடக்கோரி இம்மனு இயக்க ஊர்திச் சட்டம் பிரிவு 166(1)ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. மனுவின் விபரம் வருமாறு
விருத்தாசலம் தாலுக்கா¸ வி. சாத்தப்பாடி கிராமத்தைச் சார்ந்த 50 வயதுடைய கதிர்வேல் விழல் ஏஜெண்ட் மற்றும் விழல் வேய்ந்தல் வேலை மற்றும் விவசாயம் செய்து மாதம் ரூ.25¸000/- ஈட்டி வந்தார். அவர் 20.08.2013 அன்று இரவு 9 மணி அளவில் தனது சைக்கிளில் வீட்டுக்கு விழல் அடிக்க ஊ.ஆதனூர் சென்று ஆள் சொல்லிவிட்டு மீண்டும் சாத்தபாடிக்கு வருவதற்கு விருத்தாசலம் - சிதம்பரம் மெயின் ரோட்டில் ஊ.ஆதனூர் காலனி கலியமூர்த்தி வீட்டுக்கு எதிரில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்த போது 1-ம் எதிர்மனுதாரருக்கு சொந்தமான 2-ம் எதிர்மனுதாரரிடம் காப்பீடு செய்யப்பட்ட டி.என் 32 ஆர் 7744 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும்¸ அஜாக்கிரதையாகவும்¸ கவனக்குறைவாகவும்¸ ஓட்டி வந்து கதிர்வேல் மீது மோதி¸ அதனால் அவர் தூக்கி எறியப்பட்டு அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை விருத்தாசலம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பாண்டி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த விபத்திற்கு டி.என் 32 ஆர் 7744 வாகனத்தின் ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையே காரணமாகும். இறந்து போன கதிர்வேல் என்பவரையே மனுதாரர்கள் நம்பி வாழ்ந்து வந்தார்கள். முதல் எதிர்மனுதாரர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் ஆவார். ஆகையால்¸ எதிர்மனுதாரரிடமிருந்து பகரப் பொறுப்பு அடிப்படையில் மனுதாரர்களுக்கு இழப்பீடு கொடுக்க கடமைப்பட்டதாகும். ஆகவே¸ எதிர்மனுதாரர்கள்¸ மனுதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.25¸00¸000/- ஐக் கொடுக்க உத்தரவிடக்கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. பிரதிவாதிகள் தரப்பில் தோன்றாத் தரப்பினர்களாகி எதிருரை தாக்கல் செய்யப்படவில்லை.

4. இம்மனுவில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பின்வருமாறு ஆகும்.
1.விபத்து டி.என் 32 ஆர் 7744 வாகன ஓட்டுனரின் கவனக்குறைவாலும்¸ அஜாக்கிரதையாலும் தான் நடைபெற்றுள்ளதா?
2.எதிர்மனுதாரர்கள்¸ மனுதாரர்களுக்கு உரிய இழப்பீட்டை அளிக்க கடமைப்பட்டவர்களா?
3.அவ்வாறு இருக்கும்பட்சத்தில் மனுதாரர்களுக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகை கிடைக்கக் கூடியது?

5. மனுதாரர்கள் தரப்பில் ம.சா.1 அம்பிகா மற்றும் ம.சா.2 சுப்ரமணியன் ஆகியோர்கள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். .சா..1 முதல் ம.சா..11 வரை குறியீடு செய்யப்பட்டது. எதிர்மனுதாரர்கள் வருகையின்றி தோன்றாத் தரப்பினர்களாகத் தீர்மானிக்கப்பட்டார்கள்.

6. பிரச்சினை எண் 1-க்கு தீர்வு: இவ்வழக்கின் முதல் மனுதாரர் ம.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். .சா.1 தனது நிரூபண வாக்குமூலத்தில் 20.08.2013 அன்று தனது கணவர் கதிர்வேலுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் ம.சா.1 தனது தரப்பு சான்றாவணமாக தாக்கல் செய்துள்ள ம.சா..1 முதல் தகவலறிக்கையின் உண்மை நகலை பார்வையிடுகையில் சுப்ரமணியன் என்பவர் விபத்து குறித்து புகார் கொடுத்து அதன் பேரில் ம.சா..1 முதல் தகவலறிக்கை கம்மாபுரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. .சா..1 முதல் தகவலறிக்கை உண்மை நகலை பரிசீலனை செய்ததில் விபத்தில் இறந்த கதிர்வேல் என்பவர் விருத்தாசலம் - சிதம்பரம் மெயின் ரோட்டில் ஊ.ஆதனூர் காலனியில் சைக்கிளில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றுள்ளார். அதே திசையில் அவருக்கு பின்னால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த இண்டிகா T.N.32 R 7744 என்ற வாகனம் அவரது சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மனுதாரர் தரப்பில் ம.சா.1-ன் மூலமாக தாக்கல் செய்த சான்றாவணமான ம.சா..6 பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் ம.சா.1-ன் சாட்சியம் மற்றும் நேரில் பார்த்த ம.சா.2 ன் சாட்சியம் மற்றும் சான்றாவணங்களிலிருந்து இவ்வழக்கு விபத்தின் காரணமாக கதிர்வேல் என்பவர் இறந்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. இவ்வழக்கில் ம.சா.2 விபத்தை நேரில் பார்த்த சாட்சி ஆவார். .சா.1 மற்றும் ம.சா.2 ஆகியோர்களின் சாட்சியம் மனுதாரரின் வழக்கை ஒத்திசைத்தே உள்ளது. இவ்வழக்கில் இரண்டு எதிர்மனுதாரர்களும் வழக்கில் தோன்றா தரப்பினர்களாக இருந்து வருவதால் எதிர்மனுதாரர்கள் தரப்பில் ம.சா.1 மற்றும் ம.சா.2 ஆகியோர்களின் சாட்சியம் மறுதளிக்கப்படாமல் இருக்கிறது. .சா..4 1-ம் எதிர்மனுதாரரின் மோட்டார் வாகன ஆய்வறிக்கை என்பது தெரிகிறது. .சா.1 மற்றும் ம.சா.2 ஆகியோர்களின் சாட்சியத்தையும்¸ சான்றாவணங்களையும் ஒரு சேர பார்க்கையில் வழக்கு விபத்தானது 1-ம் எதிர்மனுதாரரின் வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுனரின் அஜாக்கிரதை காரணமாகவே நடந்தது என்று முடிவு செய்வதற்கு ஆதரவாகவே இருக்கிறது. ஆக¸ வழக்கு விபத்தானது 1-ம் எதிர்மனுதாரரின் வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால் தான் ஏற்பட்டது என்று பிரச்சினை 1-க்கு தீர்வு காணப்படுகிறது.

7. பிரச்சினை எண் 2-க்கு தீர்வு: இவ்வழக்கின் முதல் எதிர்மனுதாரர் வழக்கு விபத்துக்கு காரணமான வாகனத்தின் உரிமையாளர் ஆவார். விபத்து ஏற்படுத்திய வாகனமான T.N.32 R 7744 வாகன ஓட்டுனரின் கவனக்குறைவாலும்¸ அஜாக்கிரதையாலும் தான் ஏற்பட்டிருக்கிறது என்று தீர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்¸ விபத்து ஏற்படுத்திய வாகனம்¸ 2-ம் எதிர்மனுதாரர் வசம் உரிய முறையில் காப்பீடு செய்யப்பட்டிருப்பது ம.சா..3 மோட்டார் வானக ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகின்ற நிலையில்¸ காப்பீடு நிபந்தனை மீறல் குறித்து சாட்சியம் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில்¸ விபத்திற்கான இழப்பீட்டை 2-ம் எதிர்மனுதாரரான காப்பீட்டு நிறுவனமே முதல் எதிர்மனுதாரர்க்காக அளிக்கக் கடமைப்பட்டது என்று பிரச்சனை எண் 2 க்கு தீர்வு காணப்படுகிறது.

8. பிரச்சினை எண்.3-க்கு தீர்வு: மனுதாரர் ம.சா.1 அம்பிகா தனது சாட்சியத்தில் தனது கணவர் விழல் ஏஜெண்ட் மற்றும் விழல் வேய்தல் வேலை செய்து வந்துள்ளார் என்று சாட்சியம் அளித்துள்ளார். இறந்து போன கதிர்வேல் மாதம் ரூ.25¸000/-க்கு மேல் வருமானம் ஈட்டி வந்ததாக கூறுகின்ற போதும்¸ இதுகுறித்து ம.சா.. 9 முதல் 11 வரையான ஆதாரங்கள் எதுவும் முழமையாக ஏற்றுக் கொள்ள தக்க சான்றாவணங்களாக இல்லாத நிலையில்¸ விபத்தில் இறந்த நபரின் வயதை கணக்கிட்டு அவரது மாத வருமானம் ரூ.6¸000/- என்று முடிவு செய்யப்பட்டு¸ இறந்த நபரின் செலவுக்காக மாதம் ரூ.2000/- என்று கணக்கிடப்பட்டு கழிக்கப்பட்டு அவரது மாத வருமானம் ரூ.4¸000/- என்று முடிவு செய்யப்படுகிறது.

Sarla Verma V. delhi transport Corporation 2009(2) TN MAC 1 (SC)

மேதகு உச்ச நீதிமன்றம்வகுத்த கோட்பாடுகளின் படி இவ்வழக்கு விபத்தில் இறந்த கதிர்வேல் வயது 50 என்று வழக்கு சான்றாவணங்களில் குறிப்பிட்டுள்ளதை கணக்கில் கொண்டு¸ அவரது இறப்பினால் ஏற்படும் வருமான இழப்பாக 4,000x12x13=6,24,000/- என்று கணக்கிடப்பட்டு அவ்வாறே முடிவு செய்யப்படுகிறது. ஈமச்சடங்கு செலவிற்காக ரூ.10¸000/-ம் 2¸ 3 மனுதாரர்கள் அன்பு¸ பாசத்திற்கான இழப்பிற்காக ரூ.20¸000/-ம்¸ முதல் எதிர்மனுதாரர் வாழ்க்கை இழப்பிற்காக ரூ.50¸000/- ஆக மொத்தம் மனுதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.7¸04¸000/- 2-ம் எதிர்மனுதாரரிடமிருந்து கிடைக்க வேண்டியது என்று பிரச்சினை எண் 3-க்கு முடிவு காணப்படுகிறது.

9. முடிவாக¸ 2-ம் எதிர்மனுதாரர் இழப்பீடாக ரூ.7¸04¸000/- ஐ கொடுக்க வேண்டுமென்றும்¸ மேற்படி தொகையை மனுத்தேதி முதல் முழுத்தொகை செலுத்தும் வரை ஆண்டுக்கு 7.5% வட்டி சேர்த்து மூன்று மாதத்திற்குள் இந்நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்றும்¸ அத்தொகையில் வழக்கறிஞர் ஊதியமாக ரூ.14¸000/-ஐ மனுதாரர் வழக்கறிஞர் தனி காசோலை மூலமாக இந்நீதிமன்றத்திலிருந்து பெற வேண்டுமென்றும்¸ மீதித் தொகையில் 50 சதவீதத் தொகையை மனுதாரர்கள் உடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும்¸ மீதி 50 சதவீதத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டுமென்றும்¸ இழப்பீட்டிற்குரிய நீதிமன்றக்கட்டண பாக்கியை மனுதாரர்கள் 10 தினங்களுக்குள் இந்நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டு¸ அவ்வாறே இம்மனு செலவுத்தொகையுடன் பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment