30.6.16

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 379,511

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை
முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல்
நீதித்துறை நடுவர் எண்- 1
சிவகங்கை
201 6 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் வியாழக்கிழமை
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் 222 / 2015

குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
காவல் ஆய்வாளர்
சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையம்
குற்ற எண் 186/15

குற்றம் சாட்டப்பட்டவர் :
சுரேஷ்பாபு¸ (வயது 26-2015)
.பெ. பெரியசாமி¸
கூத்தாண்டன்¸
சிவகங்கை.


வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

குற்றம் முறையிடப்பட்டது :குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் முறையிடப்பட்டது.


குற்றம் வனையப்பட்டது :குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் வனையப்பட்டது.

தண்டனை விவரம் : குற்றவாளி இல்லை

தீர்மானம் :அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழும் குற்றம் இழைத்துள்ளதாக சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை

தீர்ப்பு :இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப் பட்டவருக்கு அளித்து கு.வி.மு..பிரிவு 248(1) ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

2. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
24.3.2015 ம் தேதி காலை 5.30 மணிக்கு சிவகங்கை மேலூர் ரோடு எண்.22 சோலை நகரில் வாதி சுப்பிரமணியன் என்பவரது தனது வீட்டின் முன்பு பஞ்சாரத்தில் அடைத்து வைத்திருந்த கோழிகள் இரண்டை குற்றம்சாட்டப்பட்டவர் சுய லாபம் கருதி திருட உட்கருத்துடன் திருடி எடுத்துச்செல்ல முயற்சி எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.. பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.

4. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் குற்றம் பற்றி விளக்கிக்கூறி வினவப்பட்டபோது அவர் குற்றத்தை மறுத்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

5. அரசு தரப்பில் அ.சா.1 மற்றும் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். .சா..1 மற்றும் அ.சா..2 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. .சா.1 கொடுத்த புகார் மனு அ.சா..1 ஆகும். .சா. 1 கொடுத்த புகாரைப் பெற்று நிலைய பொறுப்பில் இருந்த சார்பு ஆய்வாளர் ஜான்பிரிட்டோ வழக்கினை பதிவு செய்ததாகவும்¸ சார்பு ஆய்வாளர் தயாரித்த முதல் தகவல் அறிக்கை அ.சா..2 ஆகும். அரசு தரப்பு சாட்சி 1 அரசு தரப்பில் சாட்சியம் அளித்துள்ளார். .சா.2 தனது புலன் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்து உள்ளார்.

6. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கீழ் கு.வி.மு..313(1)()ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசு தரப்பு சாட்சியம் பொய் என்றும் தன் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

7. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா? இல்லையா? என்பதுதான்

7. பிரச்சனை
24.3.2015 ம் தேதி காலை 5.30 மணிக்கு சிவகங்கை மேலூர் ரோடு எண்.22 சோலை நகரில் வாதி சுப்பிரமணியன் என்பவரது தனது வீட்டின் முன்பு பஞ்சாரத்தில் அடைத்து வைத்திருந்த கோழிகள் இரண்டை குற்றம்சாட்டப்பட்டவர் சுய லாபம் கருதி திருட உட்கருத்துடன் திருடி எடுத்துச்செல்ல முயற்சி எடுத்ததாக அரசு தரப்பு வழக்கு

8. .சா1 ஆக விசாரிக்கப்பட்டுள்ள¸ புகார்தாரர் தனது சாட்சியத்தில்¸ ஆஜர் எதிரியை தனக்கு தெரியாது என்றும்¸ தேதி¸ மாதம் ஞாபகமில்லை என்றும்¸ நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அதிகாலை¸ தன் வீட்டு கொல்லைபுரத்தில் சத்தம் கேட்டதாகவும்¸ தான் சென்று பார்த்ததாகவும்¸ ஒரு அடையாளம் தெரியாத நபர் தனக்கு சொந்தமான கோழிகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும்¸ தான் சத்தம் போட்டவுடன் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் என்றும் சாட்சியமளித்து உள்ளார்.

9. .சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ள புலன் விசாரணை அதிகாரி தனது விசாரணையில் வழக்கின் எதிரியை கைது செய்து 186-15 நிலைய குற்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது மற்றும் விசாரணையை முடித்து எதிரி மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்தது குறித்து சாட்சியம் அளித்துள்ளார்.

10. மேற்கண்ட சாட்சியத்தில் புகார்தாரர் 'ஆஜர் எதிரியை தனக்கு தெரியாது
என்றும்¸ ஒரு அடையாளம் தெரியாத நபர் தனக்கு சொந்தமான கோழிகளை
திருட முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும்¸ தான் சத்தம் போட்டவுடன் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்¸ " என்று கூறுவதன் மூலம்¸ புகார்தாரர் அரசு தரப்பு வழக்கிலிருந்து வேறு பட்டு சாட்சியம் அளித்துள்ளார். மேலும் அரசு தரப்பு சாட்சியின் சாட்சியத்தில் உள்ள சங்கதிகள் எதிரி மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய குற்றக்கூறு உள்ளதாக அமையவில்லை.

11. அரசு தரப்பு வழக்கறிஞர் புகார்தாரரே பிறழ் சாட்சியாக மாறி சாட்சியம் அளித்துள்ளார் என்பதனாலும் மற்ற சாட்சிகளை விசாரிப்பதனால் அரசு தரப்பு வழக்கை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என்பதனாலும்¸ மற்ற சாட்சிகளை விசாரிப்பதால் நீதிமன்றத்தின் நேரம் தான் வீணாகும் என்பதனால்¸ மற்ற சாட்சியங்களை விசாரிக்காமல் விலக்கு அளித்து அரசு தரப்ப சாட்சியங்களை முடித்துள்ளார்.

12. இந்த வழக்கில் அரசு தரப்பிற்கு ஆதரவாக காவல் நிலையத்திலுள்ள சார்பு ஆய்வாளர் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளார். அந்த சாட்சியானது தனது அரசு பணியை செய்யும் போது சொன்ன சாட்சியாகவே கருதமுடியும். ஏனெனில் அரசு தரப்பு முக்கிய சாட்சியான புகார்தாரர் தாமே அரசு தரப்பு வழக்கிற்கு ஆதரவாக சாட்சி அளிக்காத போது சார்பு ஆய்வாளரின் சாட்சியத்தை வைத்து மட்டுமே எதிரி குற்றவாளி என தீர்மானிக்க முடியாது.

13. அரசு தரப்பு சாட்சியான புகார்தாரர் அரசு வழக்கை உறுதியூட்டும் வகையில் சாட்சி அளிக்காது¸ அரசு தரப்பு வழக்கிற்கு மாறுபட்டு சாட்சியம் அளித்துள்ள சூழ்நிலையில் சார்பு ஆய்வாளர் சாட்சியம் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர போதுமான சாட்சியாக அமைய வில்லை. ஆகவே அரசு தரப்பு வழக்கை போதிய சாட்சியத்தின் அடிப்படையில் அரசு நிருபிக்க தவறிவிட்டதால் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு அளித்து எதிரியை விடுதலை செய்யலாம் என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் குற்றவாளி அல்ல என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.

இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ...பிரிவுகள் 379¸511 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிருபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப் பட்டவருக்கு அளித்து கு.வி.மு..பிரிவு 248(1) ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment