நீதித்துறைநடுவா நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை
முன்னிலை : திரு. வீ .வெங்கடேசபெருமாள் பி.எல்
நீதித்துறை நடுவர் எண்- 2
சிவகங்கை
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ம் நாள் வியாழக்கிழமை
திருவள்ளுவராண்டு 2044 மன்மதவருடம் மார்கழி மாதம் 22 ம் நாள்
ஆண்டு பட்டிகை வழக்கு எண் 161 / 2014
குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
சார்பு ஆய்வாளர்
சிவகங்கை தாலுகா காவல் நிலையம்
குற்ற எண் 198/2012
குற்றம் சாட்டப்பட்டவர் :
காளிமுத்து (வயது 31-15)
த-பெ முத்துக்கருப்பன்
அனுப்பனஓடை
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

குற்றம் வனையப்பட்டது : குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் குற்றம் வனையப்பட்டுள்ளது.
தீர்மானம் : இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக அரசு தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என தீர்மானம்.
தீர்ப்பு : இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் குற்றவாளி இல்லை எனத் தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1) ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
கடந்த 01.06.2012 ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு வாதி தன் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது தாய் வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு சேர்ந்து இந்த குற்றம் சாட்டப்பட்டவர் முன் விரோதம் காரணமாக வாதியை பார்த்து பொது இடத்தில் வைத்து “தேவடியா மகன்” என்று அசிஙக் மாக பேசி அவமானப்படுத்தி கீழே கிடந்த ஜல்லிக் கற்களை எடுத்து மாறி மாறி எரிந்ததில் வாதிக்கு முதுகு¸ உடம்பிலும் தனது மகன் சாட்சி கருப்பசாமி உடம்பிலும்¸ 3 வதாக குற்றம் சாட்டப்பட்ட முத்துக்கருப்பன் எறிந்ததில் சாட்சி கருப்பசாமிக்கு வலது காதில் கொடுங்காயமும் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும்¸ குற்றம் சாட்டப்பட்டவர் வாதியை பார்த்து "கொல்லாமல் விடமாட்டோம்" என்று மிரட்டிய குற்றத்திற்காக 2 வது குற்றம் சாட்டப்பட்டவர் இதச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 324¸ 506(2) ன் கீழ் குற்றம் புரிந்ததாகக் கூறி குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.ச. பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.
3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர் குற்றத்தை மறுத்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 3 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ. சா ஆ. 1 முதல் அ. சா ஆ. 7 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன. அரசு தரப்பு சாட்சிகளின் சுரக்கம் பின்வருமாறு.
அ.சா.1 கொடுத்த புகார் அ.சா.ஆ.1 ஆகும். அ.சா.1 கொடுத்த புகாரைப் பெற்று சார்பு ஆய்வாளர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.2 ஆகும். பின்பு சார்பு ஆய்வாளர் சம்பவ இடம் சென்று சாட்சிகள் முன்னிலையில் தயார் செய்த பார்வை மகஜர் அ.சா.ஆ.3 மற்றும் மாதிரி வரைபடம் அ.சா.ஆ.4 ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றிய ஜல்லிக்கற்களுக்குண்டான அத்தாட்சி அ.சா.ஆ.5 ஆகும். பின்பு காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரணை செய்து அவரிடமிருந்து பெற்ற அழங்கன் காயச்சான்று அ.சா.ஆ.6¸ கருப்புச்சாமி காயச்சான்று அ.சா.ஆ.7 ஆகும். அ.சா.1 மற்றும் அ.சா.2 தங்களது சாட்சியத்தில் வழக்கு சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என்று கூறி பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்கள். அ.சா.3 புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில்¸ வழக்கின் சாட்சிகளை விசாரித்து¸ புலன் விசாரணை முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தன் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா? இல்லையா? என்பதுதான்.
7. பிரச்சனை
கற்றறிந்த அரசுதரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது அரசு தரப்பு சாட்சிகள் வழக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என்ற கூறி பிறழ் சாட்சியாக மாறி சாட்சியம் அளித்துள்ளார்கள். ஏனவே¸ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கை நிரூபிக்க வாய்ப்புகள் இல்லையென கீழ்க்கண்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி வாதிட்டார்.
2008(3)
MLJ Crl 212 SC
(பத்தி 5) எந்தவொரு பிரச்சினையிலும் தூய்மையான தனிநபர் தன்மையுடைய வினா சம்மந்தப்பட்டு இருக்கிறதோ அவ்வழக்குகளில் அரசு தரப்புக்கு சாதகமான முடிவினை எட்ட முடியாத நிலையில்¸ நடப்பில் வைத்திருப்பது ஓர் ஆடம்பரமே என்பதால் நீதிமன்றமே குற்றவியல் நடவடிக்கைகளில் பொதுவான சமாதானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நீதிமன்றத்தின் பெருஞ்சுமையை குறைப்பதுடன் நீதிமன்றத்தின் நேரத்தை சேமிப்பதிலும்¸ அதனை அர்த்தமுள்ள வழக்குகளை மிகவும் நன்முறையில் தீர்வு காண்பதிலும் செலவிடமுடியும்.
8. வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் தங்களுடைய வாக்குமூலத்திலும்¸ போலீஸ் விசாரணையிலும் சம்பவம் நடந்ததாக கூறிவிட்டு¸ இந்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது வழக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி பிறழ் சாட்சியாக மாறிவிட்டதின் பேரிலும்¸ மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியும்¸ குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை பெற அருகடையுடையவர் ஆவார் என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. அரசுத் தரப்பில் சார்பு ஆய்வாளர் சாட்சியம் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர போதுமான சாட்சியாக இல்லை. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது இ.த.ச பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கவில்லை என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
இறுதியாக குற்றம் சாட்டப்பட்டவர் இ.த.ச.பிரிவுகள் 294(பி)¸ 323¸ 325¸ 506(ii) ன் கீழ் குற்றவாளி இல்லை எனத் தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
No comments:
Post a Comment