மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். ஜெயங்கொண்டம்
முன்னிலை:- திரு.பி.ஈஸ்வரமூர்த்தி. பி.எஸ்.சி.¸ எல்.எல்.பி.¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ ஜெயங்கொண்டம்.
2013 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
2044 திருவள்ளுவராண்டு¸ விஜய வருடம் ஆனி திங்கள் 7ம் நாள்
அசல் வழக்கு எண்: (O.S.) 157-2004
1) விசாலாட்சி2) கஸ்தூரி
3) கமலா ........ வாதிகள்
-எதிர்-
1) குணவதி
2) சுரேஷ் பாபு
3) பிரபாகரன் (Amended as per order in IA.817/08 dated:29.11.08)
4) பிரபாவதி ........ பிரதிவாதிகள்
வழக்கின் முக்கிய குறிப்புகள்:
1. தாவா “யு" செட்டியூல் சொத்தில் வாதிகளின் அனுபவத்தில் பிரதிவாதிகளோ அவரது ஆட்களோ¸ ஏஜெண்டுகளோ எந்த வகையிலும் வாதிகளின் அனுபவத்தில் இடையூறு செய்யாமல் இருக்கும் பொருட்டு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும்;¸ தாவா “B" செட்டியூல் சொத்திற்கு ஆணையரை நியமனம் செய்து வாதிகளின் 3-4 பாகம் பிரித்து வாதிகளின் பாக உரிமையை விளம்புகை செய்யவும் வாதிகளின் 3-4 பாகத்திற்கு முதல்நிலை தீர்ப்பாணை வழங்கியும்¸ எதிர்கால மகசூல் நஷ்டம் வழங்கவும்¸ தாவா செலவு தொகை பிரதிவாதிகளிடம் இருந்து வாதிகளுக்கு கிடைக்கவும் இந்த தாவா.
2. வாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையின் சுருக்கம் :
தாவா சொத்துக்கள் கிருஷ்ணமூர்த்திக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள். 1ம்
வாதி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஆவார். 2.3 வாதிகள் கிருஷ்ணமூர்த்தியின் மகள்கள் ஆவர். கிருஷ்ணமூர்த்தி 1ம் பிரதிவாதியை திருமணம் செய்து கொள்ளாமல் சேர்மாணமாக வைத்திருந்தார். 1ம் பிரதிவாதியின் மகன்கள் மற்றும் மகள் தான் 2 முதல் 4 பிரதிவாதிகள் ஆவார்கள். கிருஷ்ணமூர்த்தி உயிருடன் இருக்கும் போதே 1ம் வாதி ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்து¸ அதில் கிராம பஞ்சாயத்தார்கள் கூறிய சமாதானம்படி 1ம் வாதிக்கு தாவா 'ஏ' செட்டியூல் சொத்துக்களை 27.11.1986ல் கிருஷ்ணமூர்த்தி எழுதிக் கொடுத்துள்ளார். அதுமுதல் நாளதுவரை 1ம்வாதி தாவா சொத்துக்களை அனுபவம் செய்து வருகிறார். மேற்படி செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த பிறகு கிருஷ்ணமூர்த்தி 1ம் வாதியுடன் 2 வருட காலம் சேர்ந்து வாழ்ந்து பின்பு இறந்து விட்டார். 1ம் பிரதிவாதிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் நடைபெறவில்லை. 2 முதல் 4 பிரதிவாதிகள் கிருஷ்ணமூர்த்திக்கு பிறக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தாவா 'பி" செட்டியூல் சொத்துக்களைப் பொறுத்து எவ்வித ஆதரவும் எழுதி வைக்காமல் இன்;டெஸ்ட்டாக தாவாவிற்கு 1 1-2 வருடம் முன்பு இறந்து விட்டார். கிருஷ்ணமூர்த்திக்கு வாதிகள் மட்டுமே சட்டப்படியான வாரிசுகள். தாவா "ஏ". "பி" சொத்துக்களில் பிரதிவாதிகள் பாகம் கேட்டு தகராறு செய்வது சட்டப்படி ஏற்புடையதல்ல. மேலும் தாவா சொத்தை கிருஷ்ணமூர்த்தி 1ம் வாதிக்கு ஏற்கனவே தான செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ளதால்¸ கிருஷ்ணமூர்த்திக்கு பாகம் ஏதும் இல்லை என்பதால் 2 முதல் 4 பிரதிவாதிகளுக்கு எவ்வித பாக உரிமையும் கிடையாது. தாவா “ஏ" செட்டியூல் சொத்தில் வாதிகளின் அனுபவத்தில் பிரதிவாதிகளோ அவரது ஆட்களோ¸ ஏஜெண்டுகளோ எந்த வகையிலும் வாதிகளின் அனுபவத்தில் இடையூறு செய்யாமல் இருக்கும் பொருட்டு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும்¸ தாவா “B" செட்டியூல் சொத்திற்கு ஆணையரை நியமனம் செய்து வாதிகளின் 3-4 பாகம் பிரித்து வாதிகளின் பாக உரிமையை விளம்புகை செய்யவும் வாதிகளின் 3-4 பாகத்திற்கு முதல்நிலை தீர்ப்பாணை வழங்கியும்¸ எதிர்கால மகசூல் நஷ்டம் வழங்கவும்¸ தாவா செலவு தொகை பிரதிவாதிகளிடம் இருந்து வாதிகளுக்கு கிடைக்கவும் இந்த தாவா வாதிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. முதல் பிரதிவாதி தாக்கல் செய்து 2. 3 பிரதிவாதிகள் ஏற்றுக் கொண்ட
எதிர் வழக்குரையின் சுருக்கம் பின்வருமாறு : -
தாவாவில் வாதிகள் கோரியுள்ள பரிகாரங்கள் கிடைக்கத்தக்கதல்ல. வுhதிகள் கூறியுள்ள சங்கதிகள் அனைத்தும் தவறானவை. தாவா சொத்துக்களுக்கு பிரதிவாதிகளும் வாரிசுகள் ஆவார்கள். 1ம் பிரதிவாதியை கிருஷ்ணமூர்த்தி திருமணம் செய்து கொள்ளாமல் தவறான உறவு வைத்திருந்ததாக கூறியுள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஊரார் முன்னிலையில் 1981ம் வருடம் 1ம் பிரதிவாதியை கிருஷ்ணமூர்த்தி திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததில் 2 முதல் 4 பிரதிவாதிகள் பிறந்தனர் என்றும்¸ இந்த விபரம் வாதிகளுக்கு தெரியும் என்றும்¸ இந்நிலையில் 1ம் வாதி கிருஷ்ணமூர்த்தி மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து ஊரில் பஞ்சாயத்து செய்து 1ம் வாதிக்கு ஜீவனாம்சமாக தாவா "ஏ" செட்டியூல் ஒதுக்கப்பட்டது என்றும்¸ தாவா "பி" செட்டியூல் சொத்து பிரதிவாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்றும்¸ அதுமுதல் தாவா "பி" செட்டியூல் சொத்தை பிரதிவாதிகள் அனுபவித்து வருவதற்கு ஆதாரமாக பிரதிவாதிகளின் குடும்ப அட்டை¸ தேர்தல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு தாவா "பி" செட்டியூல் சொத்துக்களை பொறுத்து பிரதிவாதிகள் பெயருக்கு பட்டா¸ வீட்டு வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாவா 4 வது பாராவில் கூறியுள்ள சங்கதிகள் அனைத்தும் பொய்யானவை. கிருஷ்ணமூர்த்தி இறப்பதற்கு இரண்டு வருடத்திற்கு முன்பு வாதிகளுடன் இருந்ததாக கூறியுள்ளது பொய் என்றும்¸ மேலும்¸ வாதிகளுக்கு ஏற்கனவே குடும்ப ஏற்பாட்டு பாகப்படி தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்கள் கொடுக்கப்பட்டு விட்டதால் தாவா "பி" செட்டியூல் சொத்துக்களில் வாதிகளுக்கு எந்த பாக உரிமையும் இல்லை. தாவா "பி" செட்டியூல் சொத்தில் வாதிகள் கேட்கும் 3-4 பாகம் கிடைக்கத்தக்கதல்ல என்றும்¸ எனவே இவ்வழக்கினை செலவு தொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிராத்திக்கின்றார்.
7. எழுவினா 1 மற்றும் 2-ற்கு தீர்வு -
1) தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களின் 1ம்வாதிக்கு தனித்த உரிமை உள்ளதா¸
2) தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களைப் பொறுத்து 1ம் வாதி கோரும் உரிமை விளம்புகை பரிகாரம் 1ம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா¸ தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களைப் பொருத்து 1ஆம் வாதிக்கு தனித்த உரிமை உள்ளதா¸ அது குறித்து விளம்புகை பரிகாரம் கிடைக்கத்தக்கதா என பார்க்கும் போது வாதியின் வழக்குபடி தாவா "ஏ" செட்டியூல் சொத்தானது அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயிருடன் இருந்த போது அவருக்கு பாத்தியமான சொத்துக்களை 1ஆம் வாதியின் ஜீவனாம்ச வழக்கிற்காக 1ஆம் வாதி அனுபவித்துக் கொள்ளவும். 1ஆம் வாதிக்கு பின்னர் 2. 3 வாதிகள் அடைந்து கொள்ள 27.11.1986-ல் ஒரு பதிவு செய்த தான செட்டில்மெண்ட் வா.சா.ஆ.1 ஏற்பட்டது என்பதாகும். இது குறித்து பிரதிவாதிகள் தரப்பில் 1ஆம் வாதிக்கும் அவரது கணவரான கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பலமுறை பிரச்சினை நடந்தது என்றும்¸ அதனால் 1ஆம் வாதி அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்ததால் ஊரில் பஞ்சாயத்து நடந்து ஒரு குடும்ப ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி வாதிகளின் ஜீவனாம்சம் மற்றும் பாகத்திற்காக தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களை ஒதுக்கி கொடுத்து குடும்ப ஏற்பாட்டை செய்தார் என்றும்¸ அதன்படி தான் 27.11.1986-ல் வாதிகளின் ஜீவனாம்சம் மற்றும் பாகத்திற்காக ஒதுக்கப்பட்ட "ஏ" செட்டியூல் சொத்துக்களை செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாகவும் சொல்லியுள்ளார்கள். ஆதாவது பிரதிவாதிகளின் கூற்றுப்படி ஒட்டு மொத்தமாக 3 வாதிகளுக்கும் சேர்த்து இந்த "ஏ" செட்டியூல் சொத்து ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. அதுவும் தாவா "ஏ" செட்டியூல் சொத்து குடும்ப ஏற்பாட்டின்படிதான் ஒதுக்கப்பட்டது என்பது தான் பிரதிவாதிகளின் வலுவான வாதம்.
இதில் வாதிகள் தரப்பிலான சாட்சியங்களை பரிசீலிக்கும் போது 2ஆம் வாதியான கஸ்தூரி என்பவர் மட்டும் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வேறு சாட்சிகள் யாரும் விசாரிக்கப்படவில்லை. இவ்வழக்கில் 1ஆம் வாதியான விசாலாட்சியை முன் நிறுத்தி சாட்சியம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆக 1ஆம் வாதி மற்றும் அவரது மகள்களுக்கும் வா.சா.ஆ.1-ன்படி கிருஷ்ணமூர்த்தி என்பவர் வா.சா.ஆ.1 ஆவணத்தில் தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களைப் பொருத்து எழுதி வைத்துள்ளார் என்பது குறித்தான ஐயம் எதுவும் இல்லை.
Section 14
14. Property of a female Hindu to be her absolute property.
1) Any property possessed by a female Hindu, whether acquired before or after the commencement of this Act, shall be held by her as full owner thereof and not as a limited owner.
Explanation - In this Sub-section “Property” includes both movable and immovable property acquired by a female Hindu by inheritance or devise, or at a partition, or in lieu of maintenance or arrears of maintenance, or by gift from any person, whether a relative or not, before, at or after her marriage, or by her own skill or exertion, or by purchase or by prescription, or in any other manner whatsoever, and also any such property held by her as stridhana immediately before the commencement of this Act.”
என்பது ஒரு சொத்து ஒரு பெண்ணிற்கு சீதனமாகவோ¸ இனாமாகவோ¸ அன்பளிப்பாகவோ அல்லது எந்த வகையில் கொடுத்தாலுமே அது அந்த பெண்ணின் சொத்தாக கருத வேண்டும் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இந்த "ஏ" செட்டியூல் சொத்தானது வா.சா.ஆ.1-ல் கண்டுள்ளது போல 1ஆம் வாதியான விசாலாட்சி அடைந்து எந்தவித பாராதீனமும் செய்யாமல் ஆண்டு அனுபவித்து வர வேண்டியது. அவரது ஜீவனத்திற்கு பின்பு அவரது மகள்களான கஸ்தூரி¸ கமலா சரிசமமாக பிரித்து அடைந்து கொள்வது என்ற ஒரு நிபந்தனையுடன் கூடிய ஒரு செட்டில்மெண்டை எழுதி வைத்துள்ளார். ஆக இந்த வா.சா.ஆ.1-ன் அடிப்படையில் பார்க்கும் போது தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களை பொருந்து இந்த விசாலாட்சி எந்தவித வில்லங்கங்களுக்கும் ஆட்படுத்தக் கூடாது. அனுபவித்துக் கொள்ள மட்டுமே உரிமை உள்ளது. அவ்வாறு பாராதீனம் செய்தால் அது செல்லத்தக்கதல்ல என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே¸ மேற்கண்ட நிபந்தனையின் அடிப்படையிலான இந்த ஆவணத்தை பரிசீலிக்கும் போது இந்த 1ஆம் வாதி விசாலாட்சியை பொருத்தவரை "ஏ" செட்டியூல் சொத்துக்கள் ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே விசாலாட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட பிரிவு 14 (1)-ன்படி பார்க்கும் போது இந்த சொத்தானது வாதி தரப்பில் ஜீவனாம்சத்திற்காக கொடுக்கப்பட்டதால் அது 1ஆம் வாதியின் தனிப்பட்ட சொத்தாகத்தான் கருத வேண்டும். மேலும் பிரதிவாதிகளின் எதிர்வழக்குரையை பார்க்கும் போது அது குடும்ப ஏற்பாட்டின்படி அவர்களுக்கு கிடைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. எனவே¸ மேற்கண்ட தாவா "ஏ" செட்டியூல் சொத்தானது 1ஆம் வாதியின் தனிப்பட்ட சொத்தாகத்தான் கருத வேண்டும். அவருக்கு பின்னிட்டு வா.சா.ஆ.1 ஆவணத்தின்படி 2¸ 3 வாதிகள் அடைந்து அனுபவித்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த பிரதிவாதிகளுக்கோ. அல்லது வேறு எவருக்கோ எந்தவித உரிமையோ. அனுபவமோ இல்லை. எனவே¸ தாவா "ஏ" செட்டியூல் சொத்து 1ஆம் வாதிக்கு தனித்து உரிமை உடையது என்றும்¸ அந்த சொத்துக்களைப் பொருத்து 1ஆம் வாதி கோரும் விளம்புகை பரிகாரம் 1ஆம் வாதிக்கு கிடைக்கத்தக்கது என எழுவினா 1 மற்றும் 2-ற்கு தீர்வு காணப்படுகிறது.
'தாவா "பி" செட்டியூல் சொத்துக்களை பொருத்து வாதிகளுக்கு 3-4 பங்கு உள்ளதா¸ என்பது குறித்தான சங்கதியை பார்க்கும் போது வாதிகள்¸ பிரதிவாதிகள் உறவு நிலை ஆகியவைகளை குறித்து தெளிவாக பார்க்கும் போது 1ஆம் வாதியின் கணவரும் 2¸3 வாதிகளின் தந்தையான கிருஷ்ணமூர்த்திக்கு இந்த 1ஆம் வாதி விசாலாட்சி தவிர இந்த 1ஆம் பிரதிவாதி குணவதி என்ற இரண்டாவது மனைவி உள்ளதாக இந்த பிரதிவாதிகள் தரப்பில் ஒரு வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆது குறித்து பார்க்கும் போது வாதிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட வா.சா.ஆ.1 ஆவணத்தின் 8வது வரியில் அதாவது அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவியான 1ஆம் வாதியை 'நீ என் சொந்த முதல் தார மனைவி ஆனபடியானாலும்" என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆக அவர் அவ்வாறு குறிப்பிடும் போது ஒரு நியாயமான யூகத்தில் அவருக்கு அப்போது இரண்டாவது தாரம் ஒன்று இருந்துள்ள விவரம் எழுகிறது.
இந்த பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பி.சா.ஆ.5 ஆவணத்தில் 17.8.1999-ல் 1ஆம் வாதி அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியின் இறப்பிற்கு பின்னர் இந்த 1ஆம் பிரதிவாதி மற்றும் நீலமேகம் என்பவருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு ஆகும். அதில் முதல் பத்தியில் "My client is first wife and No:1 of you is second wife to krishnamoorthy" என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல 2ஆம் வாதியை குறுக்கு விசாரணை செய்த போது 'என் அப்பாவிற்கு அம்மா முதல் தாரம் என் அம்மாவிற்கு நானும் 3ஆம் வாதியும் பிள்ளைகள்¸ குணவதி என் அப்பாவிற்கு இரண்டாம் தாரம் தான் ஆனால் அவ்வாறு திருமணம் நடைபெற்றது எனக்கு தெரியாது. குழந்தைகள் பிறந்து விட்டதால் அவரை 2ஆம் தாரமாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அந்த 1ஆம் பிரதிவாதியுடன் என் அப்பா கணவன் மனைவியாக குடும்பம் நடத்தினாரா என்றால் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் தான் அவர்களை எங்கள் வீட்ழற்கு அழைத்து வந்தார்" என்று சாட்சியம் கூறியுள்ளார். ஆக இவரது சாட்சியத்தின் படியும் மேற்கண்ட ஆவணங்களை பார்க்கும் போதும் பி.சா.ஆ.6. பி.சா.ஆ.7. பி.சா.ஆ.3 மற்றும் பி.சா.ஆ.4 ஆகியவைகளின் மூலமாகவும் இந்த கிருஷ்ணமூர்த்திக்கு இந்த குணவதி 2ஆம் தாரமாக இருந்து அவர்களுக்கு 2 முதல் 4 வரையிலான பிரதிவாதிகள் பிறந்துள்ளதும் தெளிவாகிறது. மேலும்¸ இந்த பிரதிவாதிகள் தரப்பில் வலுவான வாதம் என்னவென்றால் இந்த 1ஆம் வாதிக்கும் இறந்து போன கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதன் அடிப்படையில் இந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1ஆம் பிரதிவாதியை திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் இந்த 1ஆம் வாதியால் ஜீவனாம்ச வழக்கு தொடரப்பட்டு அதன் அடிப்படையில் தாவா "ஏ" செட்டியூல் சொத்துக்களை வா.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணத்தின் மூலமாக அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்தார்கள் முன்பு குடும்ப ஏற்பாட்டின் ஒரு அங்கமாக இந்த 1ஆம் வாதிக்கும் அவரது வாரிசுகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது என்பதாகும். எஞ்சியுள்ள சொத்துக்கள் இந்த பிரதிவாதிகளுக்கு இறந்து போன கிருஷ்ணமூர்த்தியால் ஒதுக்கப்பட்டது என்பது தான் ஆகும்.
இந்த குடும்ப ஏற்பாடு எப்போது ஏற்பட்டது. அது இந்த பிரதிவாதிகள் தரப்பில் கூறிய முறையில் ஏற்பட்டதா¸ என ஆராய வேண்டியது அவசியமாகும். இது குறித்து கற்று அறிந்த பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர் கூறுவதாவது மேற்படி குடும்ப ஏற்பாடு பதிவு செய்யப்படாத நிலையிலும். கூட்டாக இந்த சொத்துக்களை பாகம் பிரித்து குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்திலும்¸ இந்த குடும்ப ஏற்பாடு ஏற்பட்டிருக்கலாம் என ஒரு வாதம் பிரதிவாதிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. வா.சா.ஆ.1 ஆவணம் ஏற்பட்ட காலக் கட்டத்தில் ஒரு சுமூகமான உறவு முறை 1ஆம் வாதிக்கும் இறந்து போன கிருஷ்ணமூர்த்திக்கும் இல்லை என்பதே ஆகும். ஒரு வேளை அதனாலேயே இந்த வா.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணம் கிருஷ்ணமூர்த்தியால் இந்த வாதிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற ஒரு வாதம் முன் வைக்கப்பட்டது. இது குறித்து ஆராயும் போது நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் 1976 ளுஊ 807-ல் ஒரு குடும்ப ஏற்பாடு என்பது இரு தரப்பும் ஒப்புக் கொண்ட சூழ்நிலையில் ஒரு தரப்பிற்கு உண்மையில் சொத்தே இல்லை என்றாலும் கூட அந்த ஏற்பாட்ழன்படி ஒதுக்கப்பட்டு விட்டதால் அது அந்த நபரின் தனிப்பட்ட சொத்தாகவே கருத வேண்டும் என்று மாண்புமிகு நமது உச்சநீதிமன்றம் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால். இந்த வழக்கை பொருத்தவரை இந்த வா.சா.ஆ.1 ஆவணத்தை தவிர வேறு ஆவணம் எதுவும் இல்லை. செட்டில்மெண்ட் ஆவணம் வா.சா.ஆ.1 1986-ல் ஏற்பட்டு 12 ஆண்டுகள் கழித்து அதாவது 1998 ஆம் ஆண்டில் தான் இந்த கிருஷ்ணமூர்த்தி இறந்துள்ளார். அதுவரையில் இந்த "பி" செட்டியூல் சொத்துக்கள் வாதிகள் தரப்பில் அனுபவத்தில் இருந்தது என்பதற்காக எந்த ஆவணங்களும் காணப்படவில்லை. ஆனால்¸ இந்த பிரதிவாதிகள் தரப்பில் அனுபவித்து வந்ததற்காக கிருஷ்ணமூர்த்தி இறப்பிற்கு பிறகு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா புத்தகம் பி.சா.ஆ.1 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து 1ஆம் சாட்சியான 2ஆம் வாதி அவரது குறுக்கு விசாரணையில் ' வா.சா.ஆ.1 ஆவணத்தில் கட்டுப்படாத என் தந்தைக்கு உரிய வெறு சொத்துக்களை என் தந்தையுடன் சேர்ந்து இந்த 1ஆம் பிரதிவாதியும் அவரது மக்களும் அனுபவித்து வந்தார்கள் என்றால் சரிதான் என சாட்சியம் அளித்துள்ளார். ஆனால்¸ அது அவர்கள் குடும்ப ஏற்பாட்டின்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பதை அவர் மறுத்துள்ளார்.
ஒரு குடும்ப ஏற்பாடு என்பது ஒரு குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவவும் அந்த சொத்துக்களை நல்ல முறையில் பாதுகாத்து பராமரிக்கவும் ஏற்படுத்தப்படுவது என்று நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராயும் போது 1988 II M.L.J.309 அதில் பத்தி 9 ல்
A.I.R. 1976 S.C. 807
“The members who may be parties to the family arrangement must have some antecedent title, claim or interest, even a possible claim in the property which is acknowledged by the parties to the ettlement. Even if one of the parties to the settlement has no title but under the arrangement the other party relinquishes all its claims or titles in favour of such a person and acknowledges him to be the sole owner, then the antecedent title must be assumed and the family arrangement will be upheld and the Courts will find no difficulty in giving assent to the same”
என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே¸ வா.சா.ஆ.1 ஆவணமானது குடும்ப ஏற்பாட்டின் படியே குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக கிருஷ்ணமூர்த்தியால் 1ம் வாதிக்கு எழுதப்பட்டது என தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் AIR 2009 -ல் பத்தில் 24ல்
“Now turning to the plea of family arrangement, as observed by this Court in Sahu Madho Das V.Pandit Mukand Ram, (1955) 2 SCR 22 = (AIR 1955 SC 481) the courts lean strongly in favour of family arrangements that bring about harmony in a family and do justice to its various members and avoid, in anticipation, future disputes which might ruin them all. As observed in that case the family arrangement can as a matter of law be inferred from a long course of dealings between the parties”.
என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வழக்கில் இந்த வாதிகள் தரப்பில் இந்த பிரதிவாதிகள் மீது "பி" செட்டியூல் சொத்தைப் பொருத்து 3-4 பங்குகள் கேட்டு பாகம் கோரியுள்ளனர். அவ்வாறு பாகம் கோரியுள்ள நிலையிலிருந்து பார்க்கும் போது இந்த "பி" செட்டியூல் சொத்தை பொருத்த அளவில் இந்த பிரதிவாதிகளின் அனுபவத்தில் தான் உள்ளதாக யூகிக்க வேண்டியதாக உள்ளது. ஏனெனில். வாதி அவரது முதல் விசாரணையில் "பி" செட்டியூல் சொத்துக்களை இந்த 1ஆம் பிரதிவாதியும் அவரது மக்களும் அனுபவித்து வந்ததாக தெளிவாக அவரது குறுக்கு விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். 'வா.சா.ஆ.1 ஆவணத்தில் கட்டுப்படாத என் தந்தைக்கு உரிய வேறு சொத்துக்களை என் தந்தையுட்ன சேர்ந்து இந்த 1ஆம் பிரதிவாதியும் அவரது மக்களும் அனுபவித்து வந்தார்கள் என்றால் சரிதான் " என சாட்சியம் அளித்துள்ளார். எனவே¸ இந்த வா.சா.ஆ.1 ஆவணம் ஒரு குடும்ப ஏற்பாட்டின் அடிப்படையில் 1ஆம் வாதிக்கு கிருஷ்ணமூர்த்தியால் எழுதிக் கொடுக்கப்பட்டது என்று மேற்கண்ட சாட்சிய சான்றாவணங்களின்படி தெளிவாகிறது. எனவே¸ வா.சா.ஆ.1 ஆவணம் ஒரு குடும்ப ஏற்பாட்டின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த "பி" செட்டியூல் சொத்துக்களைப் பொருத்து எந்த ஆவணமும் இல்லை என்றாலும் கூட இந்த இறந்து போன கிருஷ்ணமூர்த்தியின் நோக்கம் 1ஆம் வாதிக்கு இந்த வா.சா.ஆ.1 எழுதிக் கொடுக்கப்பட்ட காலத்தில் அந்த ஆவணத்தை பரிசீலிக்கும் போது அதில் முதல் தாரமான விசாலாட்சி இன்று முதல் அடைந்து எந்தவித பாராதீனமும் செய்யாமல் ஆண்டு அனுபவித்துக் கொள்ள வேண்டியது என்று உள்ளது. உண்மையில் அன்பு¸ பண்பு¸ பாசத்தால் எழுதிக் கொடுக்கப்பட்டு இருந்தால் இவ்வாறான நிபந்தனை கிருஷ்ணமூர்த்தியால் விதிக்கப்பட்டு இருக்காது. எனவே¸ இறந்து போன கிருஷ்ணமூர்த்தியின் நோக்கம் வா.சா.ஆ.1 செட்டில்மெண்ட் ஆவணத்தில் உள்ளது மட்டுமே தான் இந்த வாதிகளுக்கு கிடைக்கக்கூடியது என்பதேயாகும். எஞ்சிய "பி" செட்டியூல் சொத்துக்களை பொருத்து இந்த இரண்டாம் தாரமான 1ஆம் பிரதிவாதி வகையறாவுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. எனவே¸ அதன் அடிப்படையில் பார்க்கும் போது இந்த "பி" செட்டியூல் சொத்துக்களை பொருத்த வரை இந்த வாதிகள் கோரும் பரிகாரம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஆனால் இந்த கிருஷ்ணமூர்த்தி 1998-ல் இறந்ததாக சொல்லப்பட்டிருந்தாலும் கூட அவர் எந்தவித ஏற்பாடும் செய்யாமல் இறந்து விட்டதால் "பி" செட்டியூல் சொத்துக்களை பொருத்து அவருக்கு வரும் பாகத்தில் அதாவது 2 முதல் 4 பிரதிவாதிகளுக்கும் இறந்த போன கிருஷ்ணமூர்த்திக்கும் சேர்த்து 4 ஆக பிரித்தால் கிடைக்கும் ஒரு பாகத்தில் இந்த வாதிகளுக்கும் 2 முதல் 4 பிரதிவாதிகளுக்கும் சம பங்கு உள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும் போது இந்த "பி" செட்டியூல் சொத்துக்களில் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுங்கும் ஒரு பாகத்தில் இந்த மூன்று வாதிகளுக்கும். 2 முதல் 4 பிரதிவாதிகளுக்கும் தலா 1-6 பங்கு வீதம் கிடைக்கத்தக்கது. அதாவது வாதிகள் 3-வருக்கும் கூட்டாக 1-2 பாகமும் 2 முதல் 4 பிரதிவாதிகளுக்கும் கூட்டாக 1-2 பாகமும்¸ இதில் 1ஆம் பிரதிவாதிக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. ஏனெனில் பிரிவு 11 இந்து திருமணச்சட்டப்படி கிருஷ்ணமூர்த்திக்கும். 1மு; பிரதிவாதிக்குமான திருமணம் இல்லா நிலையது (ஏழனை). எனவே. தாவா "பி" செட்டியூல் சொத்துக்களில் 3-4 பாகம் வாதிகளுக்கு கிடைக்கத்தக்கதல்ல. எனவே¸ "பி" செட்டியூல் சொத்துக்களில் 3-4 பாகத்தை பொருத்து முதல்நிலை தீர்ர்பாணை அவர்களுக்கு கிடைக்கத்தக்கது அல்ல. மாறாக "பி" செட்டியூல் சொத்துக்களில் வாதிகள் 3 -வருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுங்கும் ஒரு பங்கில் தலா 1-6 பாகம் வீதம் கிடைக்கத்தக்கது என்று மேற்கண்ட எழுவினா 5 மற்றும் 6-ற்கு தீர்வு காணப்படுகிறது.
முடிவாக. தாவா "ஏ" செட்டியூல் சொத்து 1ஆம் வாதிக்கு பாத்தியப்பட்ட தனிப்பட்ட சொத்து என்று விளம்புகை பரிகாரம் வழங்கியும்¸
தாவா "ஏ" செட்டியூல் சொத்தைப் பொருத்து வாதிகளுக்கு 1 முதல் 4 பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர தடையுறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கியும்¸
தாவா "பி" செட்டியூல் சொத்தைப் பொருத்து வாதிகளுக்கு 3-4 பாகம் கிடைக்கத்தக்கதல்ல என்பதால் தாவா "பி" செட்டியூல் சொத்தில் வாதிகளுக்கு 3-4 பாகத்தை பொருத்து முதல்நிலை தீர்ப்பாணை தள்ளுபடி செய்தும்¸
இதர பரிகாரமாக தாவா "பி" செட்டியூல் சொத்துக்களில் கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுங்கும் ஒரு பாகத்தில் வாதிகள் மூவருக்கும் தலா 1-6 பங்கும்¸ 2 முதல் 4 பிரதிவாதிகளுக்கு தலா 1-6 பங்கும் கிடைக்கத்தக்கது என தீர்ப்பளிக்கப்படுகிறது.
வாதிகள்¸ பிரதிவாதிகளின் உறவு முறைகளை கருத்தில் கொண்டு அவரவர் செலவுத் தொகையை அவரவர்களே ஏற்றுக் கொள்ள உத்தரவிடப்படுகிறது.
No comments:
Post a Comment