31.5.16

இ.த.ச. பிரிவுகள் 449,302 மற்றும் 392 | Section 449,302 and 392 of IPC

குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம். கோயம்புத்தூர்.
முன்னிலை - திரு. கி.வெ. செந்தூர் பாண்டியன், பி.எஸ்.ஸி., பி.எல்.,
அமர்வு நீதிபதி.
2013-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், 30-ஆம் நாள், திங்கட்கிழமை
(ஸ்ரீ விஜய வருடம், புரட்டாசித் திங்கள், 14-ஆம் நாள், திங்கட்கிழமை)
அமர்வு வழக்கு எண் 274.2010
குற்றமுறையிடுபவர் : அரசுக்காக, காவல் ஆய்வாளர்,
பி.9 சரவணம்பட்டி காவல் நிலையம்,
கோயம்புத்தூர்.
குற்ற எண் 1010.2010.
எதிரிகளின் பெயர் : 1. குட்டி (எ) வைசாகன் (23),
த.பெ. சந்திரன்.
2. குணா (எ) குணசேகரன் (23),
த.பெ. ராஜா
எதிரிகளின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்:

முதலாவதாக - இரு எதிரிகளின் மீது-
கொலை செய்து திருடும் நோக்கத்தில் வீட்டுக்குள் அத்து மீறி நுழைதல் -இ.த.ச. பிரிவு 449-ன் படி தண்டிக்கத்தக்க குற்றம்.

இரண்டாவதாக - இரு எதிரிகளின் மீது-
கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்தல் - இ.த.ச. பிரிவு 302-ன் படி தண்டிக்கத்தக்க குற்றம்.

மூன்றாவதாக - இரு எதிரிகளின் மீது- 
கொலை செய்து நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்தல் - இ.த.ச. பிரிவு 392-படி தண்டிக்கத்தக்க குற்றம்.

நீதிபதியின் தீர்மானம் மற்றும் தீர்ப்பு : 
முடிவில் எதிரிகள் இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392ன் படியான குற்றங்;களுக்கு குற்றவாளிகள் இல்லை என முடிவு செய்து, அவர்களை விடுதலை செய்து கு.வி.மு.ச. பிரிவு 235(1)-படி தீர்ப்பளிக்கப்படுகிறது.

வழக்கின் முக்கிய குறிப்புகள்: 

“24.09.2010 அன்று மாலை 2.30 மணிக்கு எதிரிகள் இருவரும், கதவிலக்கம் 28-எப் அண்ணா வீதி, செந்தில் நகர,; சிவானந்தபுரம் என்ற விலாசத்தில் வசிக்கும் சாந்தகுமார் (எ) சுப்பிரமணியன் என்பவரது வீட்டில், கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அத்து மீறி நுழைந்து, சாட்சி சாந்தகுமாரின் மனைவி இறந்து போன திவ்யா என்பவரை கொலை செய்து, கொள்ளையடித்துள்ளனர் என்றும் கூறி, எதிரிகள் மீது இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392-ன்படி தண்டிக்கத்தக்க குற்றத்திற்கு இறுதி அறிக்கையை பி-9 சரவணம்பட்டி காவல் நிலையம் ஆய்வாளர் (குற்றம்) தாக்கல் செய்திருக்கிறார்."

2. இந்த வழக்கு முதலில் கோயம்புத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல், முதல்நிலை பதிவேட்டு வழக்கு எண் 28.2010-ஆக கோப்பில் எடுக்கப்பட்டுள்ளது. எதிரிகள் வழக்கில் முன்னிலையானதும் அவர்களுக்கு கு.வி.மு.ச. பிரிவு 207-ன்படி அங்கு அவர்களுக்கு ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டுள்ளது. எதிரிகள் மீதான குற்றம் அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரிக்கத்தக்கது என்பதால், இந்த வழக்கை கு.வி.மு.ச. பிரிவு 209(அ)-ன்படி விசாரணைக்காக கோயம்புத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு, நீதித்துறை நடுவர் எண் 2 அவர்கள் 26.11.2010-ல் அனுப்பிவைத்திருக்கிறார். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 10.12.2010 அன்று அமர்வு வழக்கு எண் 274.2010-ஆக கோப்பில் எடுக்கப்பட்டு, விசாரணைக்காக இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

3. இந்த வழக்கில் எதிரிகள் முன்னிலையானதும், அவர்களிடம் குற்றம் பற்றி
விசாரித்த போது, அவர்கள் குற்றம் பற்றி மறுத்தனர். இரு தரப்பும் கேட்டு ஆவணங்களை பரிசீலித்து, எதிரிகள் மீது இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392-படி தண்டிக்கத்தக்க குற்றங்;களுக்கு குற்றச்சாட்டுக்கள் வனைந்து, விளக்கி கூறி கேள்வி கேட்க, எதிரிகள் குற்றவாளிகள் இ;ல்லை என்று கூறியுள்ளனர்.

"70. மேலும் 24.09.2010 பகல் 2.30 மணிக்கு நடைபெற்றதாக சொல்லப்படும் குற்ற சம்பவத்தில் அரசு தரப்பில் சம்பவத்தை நேரில் கண்ணுற்ற சாட்சிகள் விசாரிக்கப்படாத நிலையில், நேர்நிலை சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகளின் சாட்சியங்கள் இந்நீதிமன்றம் நம்பும்படியாகவும், ஏற்கும்படியாகவும் அரசு தரப்பு வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இவ்வழக்கில் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட நேர்நிலை சாட்சியகளான அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 ஆகிய 4 சாட்சிகள் தங்களது முதல் விசாரணை சாட்சியத்தின் போது 24.09.2010 அன்று பகல் 2.00 மணி முதல் 2.30 மணியளவில் பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிளில் சம்பவம் நடந்த தெருவிற்கு இரு நபர்கள் வந்ததாகவும், மேற்படி இரு நபர்கள் அ.சா.1-ன் வீட்டிற்கு முன்பு கருப்பு கலர் கிரில் கேட்டின் முன் அ.சா.1-ன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அ.சா.1-ன் வீட்டிற்குள் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களும் வீட்டிற்குள் சென்றதாகவும், அ.சா.1-ன் வீட்டிற்குள் சென்ற இரு நபர்கள் வெளியே வந்து பல்சர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டதை பார்த்ததாக கூறுவதை குற்ற சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளன்று குற்ற சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபொது அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகள் உடன் இருந்திருந்தும், குற்ற சம்பவம் நடந்த நாளன்று, குற்ற சம்பவம் நடந்த தெருவில் தாங்கள் பார்த்த விபரங்களை போலீசாரிடம் தெரிவிக்க முன் வராமல் மறந்துவிட்டது என்றும், 4 நாட்கள் கழித்து போலீசாரிடம் இது குறித்து தெரிவித்ததாகவும், ஆஜர் எதிரிகளை போலீசாரிடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டு அளித்துள்ள சாட்சியம் அரசு தரப்பு வழக்கிற்கு வலுசேர்க்கும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள இயலாது என்று இந்நீதிமன்றம் கருதுகிறது."

"71. அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதுரையின் போது குற்ற சம்பவம் நடந்த
நாளன்று, சம்பவ இடத்திற்கு வந்த நபர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் குற்ற சம்பவம் அன்று விசாரித்த போலீசாரிடம் உடனே தெரிவிக்க முன்வராமல் காலதாமதமாக சுமார் 4 நாட்கள் கழித்து போலீசாரிடம் குற்ற சம்பவம் நடந்த நாளன்று, சம்பவ இடத்திற்கு வந்த நபர்கள் என்பது குறித்தும், யாருடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டு இருப்பது அரசு தரப்பு வழக்கிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறி AIR 1998 SUPREME COURT 275 முன்தீர்ப்பை மேற்கொள் காட்டி வாதிட்டார். மேற்படி முன்தீர்ப்பில் ".Eye-witness evidence as to—Cannot be disbelieved merely because they did not disclose incident to anyone till they were examined – Their identification of first accused could be relied upon since they knew him previously...” என்று கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் மேற்படி வாதுரை ஏற்கும்படியாக இல்லை என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. ஆதாயத்திற்கான கொலை குற்றம் பொன்ற கடுமையான குற்றச்செயல் ஒரு இடத்தில் நடைபெறும் போது, குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து வந்ததாக சொல்லும் நபர்களான அ.சா.3, அ.சா.6, அ.சா.7, அ.சா.8 சாட்சிகள் சம்பவ நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த நபர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள், அவர்கள் யார்யாருடன் பேசிக் கொண்டிருந்தார்கள் போன்ற செயல்பாடுகள் தெரிந்திருந்தும், குற்றச் சம்பவம் குறித்து, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் வந்து விசாரித்ததை நேரில் பார்த்ததற்கு பின்னிட்டும், அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட நேர்நிலை சாட்சியங்களான அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகள் சம்பவம் நடந்த நாளன்று தங்களக்கு தெரிந்த விபரங்களை போலீசாரிடம் தெரிவிக்க முன்வராமல், மிகவும் காலதாமதமாக 4 நாட்கள் கழித்து போலீசாரிடம் வழக்குமூலம் கொடுத்திருப்பதற்கு சாட்சிகள் குறிப்பிட்டுள்ள காரணம் ஏற்கும்படியாக இல்லை. எனவே, அ.சா.3, அ.சா.6 முதல் அ.சா.8 சாட்சிகளின் சாட்சியத்தினை அரசு தரப்பு வழக்கிற்கு வலுசேர்க்கும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள இயலாது என இந்நீதிமன்றம் கருதுகிறது."

"முடிவில் 1.2 எதிரிகள் இ.த.ச. பிரிவுகள் 449, 302 மற்றும் 392ன் படியான குற்றங்;களுக்கு குற்றவாளிகள் இல்லை என முடிவு செய்து, அவர்களை விடுதலை செய்து கு.வி.மு.ச. பிரிவு 235(1)-படி தீர்ப்பளிக்கப்படுகிறது."

No comments:

Post a Comment