8.5.16

குற்றவியல் நடைமுறை சட்டம்1973 பிாிவு 157 | Section 157 of Code of Criminal Procedure 1973

நீதித்துறை நடுவர் மன்றம் எண்.6
திருச்சிராப்பள்ளி.
சுருக்கு வழக்கு எண்.1918/2013
அரசு காவல்துறை ஆய்வாளர்,
திருவரம்பூர் காவல் நிலையம்
கு.எண். 795/2012         ....................... ……………… வாதி
                                                   /எதிர்/
மோகன் வயது 44/2012    .......... ……………………. எதிரி

வழக்கில் திருப்புமுனையாக உள்ளவை:
  • விசாாிக்கப்படும் அனைத்து சாட்சிகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்.
  • வழக்கின் ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதற்கான சாியான காரணத்தை அரசு தரப்பில் குறிப்பிட வேண்டும்.(Section 157 of Code of Criminal Procedure 1973)
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்:

”மேற்படி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகள் அனைவருமே பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அரசுவின் உறவினர்கள் மட்டுமே எனவே எதிாி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்பான,

AIR 2009 SUPREME COURT 282
" Ordinarily a close relation would be the last to screen the real culprit and falsely implicate an innocent person. It is true, when feelings run high and there is personal cause for enmity, that there is a tendency to drag in an innocent person against whom a witness has a grudge along with the guilty.”



என்ற முன் தீர்ப்பினை குறிப்பிட்டு இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட அனைத்து சாட்சிகளுமே அக்கறையுள்ள சாட்சிகள். அதனால் அவர்களின் சாட்சியம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இல்லை என்று கூறி வாதிட்டார். எதிாி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் வாதுரையை இந்நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளது.”

குற்றவியல் நடைமுறை சட்டம்1973 பிாிவு 157 
Section 157 of Code of Criminal Procedure 1973

”இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை 25.12.2012 அன்று தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். அன்றைய தேதியிலிருந்து 22 நாட்கள் தாமதமாக முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது என்றால் சாிதான். இந்த வழக்கின் ஆவணங்கள் 10 மாதங்கள் காலதாமதமாக 5.11.2013 ம் தேதி தான் இந்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது என்றால் சரிதான்.இந்த தாமதத்திற்கான காரணம் எதுவும் குறிப்பிட்டு கூறப்படவில்லை என்றால் சாிதான் என்று கூறியுள்ளார். இதை பொறுத்து எதிரி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர், மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பான, 


(2006) 10 Supreme Court Cases s 432
" Section 157 Crpc requires sending of an FIR to the Magistrate forthwith which reaches promptly and without undue delay. The reason is obvious to avoid any possibility of improvement in the prosecution story and also to enable the Magistrate to have a watch on the progress of the investigation.”

என்ற முன் தீர்ப்பினை குறிப்பிட்டு வாதிட்டார். எனவே வழக்கின் ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதற்கான சரியான காரணம் எதுவும் அரசு தரப்பில் குறிப்பிடாததால் அரசு தரப்பு வழக்கு குறித்து பலத்த சந்தேகம் உருவாகிறது.”
தீர்ப்பை முழுமையாக படிக்க STC.NO.1918/2013

No comments:

Post a Comment