13.5.16

மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிாிவு 138 | Section 138 of Negotiable Instruments Act 1881

நீதித்துறை நடுவா்நீதிமன்றம் எண் - 1
சிவகங்கை
04.01.2016
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்: 1/2010
பூமிநாதன்                         ......                                  புகாா்தாரா்
-எதிா்-
ஜெயராமன்                           ......                                          எதிரி

வழக்கில் முன்வைக்கப்பட்ட முன்தீா்ப்புகள்
  • எதிாி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞா் (2012) 3 MLJ (Crl) 757 A-ல்
மாண்புமிகு சென்னை உயா் நீதிமன்றம்

"Discrepancy in the hand writing found in the body of cheque, name and date mentioned. Complainant has not proved his case beyond reasonalbe doubt,"
என்று வழிகாட்டி உள்ளதை முன் வைத்து வாதிட்டாா்.

13. காசோலையில் நிரப்பப்பட்டுள்ள சங்கதிகள் எதிாியால் செய்யப்படவில்லை என்றும், புகாா்தாரரே அவற்றை நிரப்பி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா் என்றும் எதிாி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞா் வாதிட்டாா். ஆனால் கையெழுத்து நிபுணாின் அறிக்கையில் எதிாியின் கையொப்பம் காசோலையில் உள்ள கையொப்பமும் ஒன்றாக உள்ளது என்றும், எதிரியின் மாதிரி கையொப்பங்களோடு காசோலையில் உள்ள கையொப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் ஒரே நபரால் செய்யப்பட்டதாக உள்ளது என்றும் அறிக்கையில் சொல்லியுள்ளார். வாதியின் கையொப்பத்தோடு காசோலையில் உள்ள நிரப்பப்பட்ட சங்கதிகளை ஒப்பிட்டுப் பார்த்து அது புகார்தாரரால் செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் எதிரியின் கையெழுத்தோடு காசோலையில் உள்ள நிரப்பப்பட்ட சங்கதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, மேற்படி காசோலையிலுள்ள சங்கதிகள் எதிரியாலும் நிரப்பப்படவில்லை என்று கையெழுத்து நிபுணர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிரியால் காசோலையில் உள்ள சங்கதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிய வந்தாலும் புகார்தாரர் மேற்படி சங்கதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் தெரியவருகிறது. அதே சமயம் காசோலையில் எதிரி தான் கையொப்பம் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. எதிரியின் கையொப்பம் காசோலையில் செய்யப்பட்டுள்ளது உறுதியாகத் தெரிகின்ற நிலையில், மேற்படி எதிரி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் முன் வைத்த மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், இவ்வழக்கிற்கு பொருந்துவதாக இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது.

2013 (2) MWN (Cr.) DCC 162 (SC) 
" the presumption under section 139 of the Negotiabale Instruments Act, 1881, includes the presumption of the existence at a legally enforceable debt or liability. That presumption is required to be honoured and if it is not so done, the entire basis of making these provisions will be lost. Therefore, it has been held that it is for the Accused to explain his case and defend it"

என்று மாண்புமிகு உச்ச நீதிமன்ற முன் தீர்ப்புரை வழிகாட்டியுள்ளபடி புகார்தாரர் வழக்கை நிருபணம் செய்துள்ளார் என்றும் அதை மறுத்து நிருபிக்க வேண்டிய பொறுப்பு எதிரியிடம் உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு பார்க்கையில் எதிரியே இந்த வழக்கில் தனது தரப்பை நிருபிக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

எதிரி, தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர்
2015 (2) MUUN (Crl.) DCC 164 (Med.)ல்

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை முன் வைத்து எதிரி இந்த வழக்கு தாக்கல செய்வதற்கு முன்பாகவே புகார்தாரருக்கு தன்னுடைய காசோலை மற்றும் கடனுறுதி சீட்டுகளை திருப்பி கொடுக்க சொல்லி அறிவிப்பு அனுப்பியுள்ளார் என்றும், அவ்வாறு எதிரி அறிவிப்பு அனுப்பியுள்ள நிலையில் இந்த வழக்கில் எதிரி காசோலை மோசடி செய்யும் நோக்கத்தோடு புகார்தாரருக்கு காசோலையை கொடுத்துள்ளார் என்றும் எதிரி புகார்தாரருக்கு தொகை முழுவதையும் செலுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு புகார்தாரருக்கே உள்ளது என்று எடுத்துரைத்தார்.
முழுமையாக படிக்க CC.NO:1/2010

No comments:

Post a Comment